சொத்துக்கள் முடக்கம்

திரையிசையை தனது வைர வரிகளால் அலங்கரித்த கவிஞர் வைரமுத்து பிறந்த நாள் இன்று!

பத்ம ஸ்ரீ, பத்ம பூஷண், சாகித்ய அகாடெமி உள்ளிட்ட விருதுகளை வென்றிருக்கிறார்.

தமிழ் இலக்கிய உலகில் இவர் ஒரு முக்கிய ஆளுமை. திரைப்படத் துறையிலும் இவர் எழுதிய பாடல்கள் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றுத் தந்தன.


ரோமானிய பேரரசின்
சர்வாதிகாரியாக அறிவித்துக்கொண்ட ஜீலியஸ் சீசர் பிறந்த தினம் இன்று.ஜூலியஸ் சீசர் ரோமானிய பேரரசின் ஜெனரல் மற்றும் அரசியல்வாதி. 


அவர் தன்னை ரோமானிய பேரரசின் சர்வாதிகாரியாக அறிவித்துக்கொண்டார். அவர் கிமு 44ம் ஆண்டு அவர் கொல்லப்படும் வரை அவரின் சர்வாதிகார ஆட்சி ஓராண்டுக்கும் குறைவாக நடைபெற்றது.


மூளைக்கு வேலை கொடுக்கும் ரூபிக்ஸ் கியூப் கண்டுபிடித்த எர்னோ ரூபிக் பிறந்தநாள் இன்று!
1974 ஆம் ஆண்டில், கட்டிடக்கலை பேராசிரியராக பணிபுரியும் போது, ரூபிக் எல்லா காலத்திலும் மிகவும் பிரபலமான புதிர்களில் ஒன்றாக மாறக்கூடிய ’ரூபிக்ஸ் கியூப்’ ஒன்றை உருவாக்கினார்.1980-ஆம் ஆண்டில் ஜெர்மனி, பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்க உள்ளிட்ட நாடுகளில் ரூபிக்ஸ் கியூப் பொம்மை Toy of the Year-ஆக தேர்வு செய்யப்பட்டது


சென்னையில் தேனாம்பேட்டை, ஆழ்வார்பேட்டை, ராயப்பேட்டை, நந்தனம், தி.நகர், நுங்கம்பாக்கம், கோட்டூர்புரம், கிண்டி, அசோக்நகர், மத்திய கைலாஷ், அடையாறு உள்ளிட்ட பகுதிகளில் விடிய விடிய மழை பெய்தது.
நள்ளிரவில் திடீரென இடி, மின்னல், சூறைக்காற்றுடன் பெய்த மழையால், சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டு உள்ளது. 8 விமானங்களும் தாமதமானதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்று கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.


  • இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 22 மீனவர்களை மீட்கக் கோரிய வழக்கு! 4 வாரங்களுக்கு ஒத்திவைத்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

  • டெல்லி யமுனை ஆற்றில் வரலாறு காணாத அளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கும் நிலையில், குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ள நீர் சூழ்ந்துள்ளன.

  • ஆப்பிரிக்கா நாடான சோமாலியாவில் லேண்டிங் கியர் பழுதானதால் ஓடுதளத்தில் தரையிறங்கிய விமானம் கட்டுப்பாட்டை இழந்து சுவற்றில் மோதி இரண்டாக உடைந்தது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்தவர்களுக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளது. உயிரிழப்புகள் எதுவும் இல்லை.
  • -------------------------------------------
  • ஊழல் அதிகாரிகள்

காஞ்சிபுரம் மாவட்டம் சிவந்தங்கலைச் சேர்ந்த விஏஓ ராஜேந்திரன். இவர் தனது பெயர் மற்றும் குடும்பத்தில் உள்ளவர்களின் பெயர்களில் முறைகேடாக ஸ்ரீபெரும்புதூரில் ரூ.11.50 கோடி மதிப்புள்ள 2 ஆயிரம் சதுர அடி நிலத்தை ரூ.10 லட்சத்திற்கு வாங்கியதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக ராஜேந்திரன் மீது காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். 

இதையடுத்து தன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி ராஜேந்திரன் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்உத்தரவிட்டார்.

இந்த மனு கடந்த 2010ம் ஆண்டு செய்யப்பட்டது. இதுதொடர்பான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்து நடந்து வந்தது. 

இன்று இந்த வழக்கில் நீதிபதி எஸ்எம் சுப்பிரமணியம் காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்பாக சாட்சி விசாரணை தொடங்கி உள்ளது. இதனால் வழக்கை ரத்து செய்ய முடியாது என கூறினார். மேலும் இந்த வழக்கை விரைந்து விசாரித்து முடிக்க வேண்டும் என்று காஞ்சிபுரம் நீதிமன்றத்துக்கு அவர் உத்தரவிட்டார்.

இதுதவிர வழக்கு தொடர்பாக தமிழகம் முழுவதும் காவல்துறை அதிகாரிகள் சமர்ப்பித்த சொத்து விவரங்களை ஆய்வு செய்யவும், குறைகள் இருப்பின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் சொத்துகளை முடக்குவது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக டிஜிபி, தலைமை செயலாளருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

மேலும் அரசு துறைகளில் இருக்கும் ஊழல் குறித்து பொதுமக்கள் புகாரளிக்க தனி ஏற்பாடு செய்ய வேண்டும். 

இதற்காக தனி தொலைபேசி எண், வாட்ஸ்அப் எண்களை அறிமுகம் செய்ய வேண்டும். ஊழல் செய்யும் அரசு அதிகாரிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கான நடவடிக்கைகளை அனைத்து ஊழல் வழக்குகளிலும் பின்பற்ற வேண்டும். தேவைப்பட்டால் தற்காலிகமாக சொத்துக்களை முடக்கம் செய்ய வேண்டும்.

நாட்டில் ஊழலை கட்டுப்படுத்துவதற்கு தற்போது இருக்கும் சட்டங்கள் போதுமானவை அல்ல. 

மேலும் அரசு துறைகளில் பெருகி வரும் ஊழலை கருத்தில் கொண்டு அடுத்த நடவடிக்கை தேவையானதாக உள்ளது. அதன்படி ஊழல் அரசு ஊழியர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்வது தொடர்பாக 1999ல் அறிமுகமாகி 24 ஆண்டுகளாக கிடப்பில் உள்ள சட்ட மசோதாவை நிறைவேற்றுவது குறித்து நாடாளுமன்றம் சிந்திக்க வேண்டும் எனவும் நீதிபதி எஸ்எம் சுப்பிரமணியம் தனது உத்தரவில் தெரிவித்து இருந்தார்.

---------------------------------------


40,000 கோடிகள் சொத்துக்களைத் 
துறந்த துறவி!

ஏர்செல் நிறுவனத்தின் தலைவரான ஆனந்த கிருஷ்ணாவின் ஒரே மகன் வென் ஆஜன் சிரிபான்யோ.
டெலிகாம் உலகில், 'ஏ.கே.' என்று பிரபலமாக அறியப்படும் ஆனந்தகிருஷ்ணன் அவர்களின் நிகர சொத்து மதிப்பு கிட்டத்தட்ட 5 பில்லியன் டாலர்கள் ஆகும். அதாவது இந்திய மதிப்பில் 40,000 கோடி ரூபாய். 
இவர் czar என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார், அதுமட்டுமில்லாமல் இந்தியாவின் முன்னணி டெலிகாம் கம்பெனியாக இருந்த ஏர்செல் நிறுவனத்தின் உரிமையாளரும் இவர்தான்.

தமிழை தாயகமாகக் கொண்டு பிறந்த சிரிபான்யோ, ஆனந்தகிருஷ்ணன் அவர்களின் பில்லியன் டாலர் சாம்ராஜ்யத்தை முன்னெடுத்து செல்வார் என்று எண்ணப்பட்டது  . 

டெலிகாம் மட்டுமல்லாமல் மீடியா, எண்ணெய், கேஸ், ரியல் எஸ்டேட் மற்றும் சாட்டிலைட் உள்ளிட்ட நிறுவனங்களும் இவர்களுக்கு சொந்தமாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. 

கிட்டத்தட்ட ஒன்பது பெருநிறுவனங்களில் கிருஷ்ணன் முதலீடு செய்திருக்கிறார். இந்த நிறுவனங்களில் இருந்து ஈட்டிய லாபம் இவரை மலேசியாவின் மிகவும் பணக்கார நபர்களில் ஒருவராக மாற்றியிருக்கிறது.
இவருடைய தாய் வழி உறவு படி தாய்லாந்தின் அரச குடும்பத்தின் வாரிசும் இவர்தான் என்று கூறப்படுகிறது.

வேடிக்கையாக சிறிது காலத்திற்கு துறவரம் மேற்கொண்டு பார்க்கலாமே என்றுதான் சிரிப்பான்யோ துறவறத்தை பூண்டிருக்கிறார் என்று கூறப்பட்டது.

ஆறால் துறவறம் மேற்கொண்டது, இவருக்கு நிரந்தரமான அடையாளமாக. மாறிவிட்டது.

 பல்லாயிரக்கணக்கான கோடிகள் மதிப்புக்கு சொந்தமான நிறுவனங்களை நடத்துவதற்கு பதிலாக சிரிபான்யோ மிகவும் எளிமையான தினமும் பிச்சை எடுத்து வாழும் வாழ்க்கையை தேர்வு செய்தார்.

துறவற வாழ்க்கையை தேர்வு செய்து கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கும் மேல் ஆகவிட.டது. 
இவர் வனத்தில் துறவியாக வாழ்வதை விரும்புகிறார். 
இவர் தற்போது  தாய்லாந்தில் இருக்கும் தட்டோ தம் மொனாஸ்ட்ரயில் தலைமை துறவியாகவும் உள்ளார்.
-----------------------------------------

மணிப்பூர் கலவரம் குறித்து விவாதிக்க ஐரோப்பிய நாடாளுமன்றம் முடிவெடுத்துள்ளது.
 ஜூலை 10 முதல் நடைபெற்று வரும் அந்தக் கூட்டத்தில் 6 நாடாளுமன்றக் குழுக்கள் மணிப்பூர் வன்முறை குறித்த தீர்மானங்களை நிறைவேற்றச் சொல்லி வலியுறுத்தி உள்ளன.

 இம்மசோதாவை இடதுசாரி, வலது, மைய-வலது, பழமைவாத மற்றும் கிறிஸ்தவ குழுக்களின் உறுப்பினர்களைக் கொண்ட 6 நாடாளுமன்றக் குழுக்கள் அளித்துள்ளன.

’இந்திய மணிப்பூரின் நிலைமை’ என்ற பெயரில் தீர்மானம் நிறைவேற்ற இன்று கோரிக்கை வைக்கப்பட்டதாகத் தெரிகிறது.
பின்னர் அந்த தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்படும் எனவும் தெரிகிறது. பிரதமர் மோடி, இரண்டு நாள் பயணமாக பிரான்ஸின் தேசிய விழாவில் பங்கேற்க இருக்கும் நேரத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது கவனத்துக்குள்ளாகியுள்ளது.

அந்த 6 நாடாளுமன்றக் குழுக்களும், மூன்றாம் நாட்டு அரசியல் நிலைமை, உள்ளூர் மோதல், அடிப்படை சுதந்திரம், மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகம் ஆகியவற்றை அனுமதிக்கும் விதிகளின்கீழ் தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்கிற அடிப்படையில் கோரிக்கை வைத்ததாக் கூறப்படுகிறது.
---------------------------------------------------


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?