ஆரம்பிக்கலாமா?

  • மணிப்பூர் மாநிலத்தில் கலவரம் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில்,
  • இணையத்தள சேவைக்கான தடை ஜூலை 10ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

  • செந்தில் பாலாஜி மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை இன்று மூன்றாவது நீதிபதி விசாரிக்கிறார். ஏற்கனவே, இரண்டு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கிய நிலையில் மூன்றாவது நீதிபதி இன்று விசாரிக்க உள்ளார்.

  • மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடகாவின் எந்த முயற்சிக்கும் தமிழ்நாடு அரசு உடன்படாது என்று தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

  • ஒன்றியஅரசின் பொது சிவில் சட்டத்துக்கு அதிமுக எதிர்ப்பு தெரிவிப்பதாகவும், தேர்தல் நேரத்தில் கூட்டணி குறித்து முடிவு எடுக்கபடும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

  • ஹாங்காங்கை சேர்ந்த புகழ் பெற்ற பாடகியான 48 வயதாகும் கோகோ லீ தற்கொலை முயற்சியால் கோமா நிலைக்கு சென்றிருந்த நிலையில் உயிரிழ்ந்துள்ளார்.

  •  தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில் குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மூன்றாவது நாளாக தடை நீடிக்கப்பட்டுள்ளது. 

தக்காளி விலை உச்சத்தை  தொட்டிருக்கும் இந்த நேரத்தில் கர்நாடகா ஹாசன் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிக்கு சொந்தமான பண்ணையில் இருந்து ரூ. 1.50 லட்சம் மதிப்பு தக்காளி திருடப்பட்டுள்ளன.

தென்காசி சட்டமன்ற தொகுதியில் பதிவான தபால் வாக்குகளை மீண்டும் எண்ணி முடிவை அறிவிக்க வேண்டும் என மாவட்...ஆட்சியருக்கு சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது....


உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மீதான நில அபகரிப்பு வழக்கில் சென்னை சிறப்பு நீதிமன்றம் .இன்று  தீர்ப்பு வழங்க உள்ளதால் பரபரப்பு.

  • ------------------------------------
  • ஆரம்பிக்கலாமா?

நடிகர் கமல்ஹாசன் கைவசம் 4 பிரம்மாண்ட படங்கள் உள்ள நிலையில், அந்த படங்களுக்கு அவர் வாங்கியுள்ள உச்ச சம்பளத்தால், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினி,விஜயை கமல்ஹாசன் முந்திவிட்டார்? 
என்ற பேச்சு கோலிவுட்டில் எழுந்துள்ளது.
கமல்ஹாச நடித்த விஸ்வ ரூபம் படத்திற்குப் பிறகு, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்த விக்ரம் படம் அவரே எதிர் பாராத அளவுக்கு மாபெரும் வெற்றி பெற்றது. 
இப்படம் ரூ.500 கோடிக்கு மேல் வசூலித்து பாக்ஸ் ஆபிஸிலும் சக்கைப்போடு போட்டது.
விக்ரம் படத்திற்கு பின், கமல்ஹாசனின் மார்க்கெட்  வானத்தை தொட்டது. 

தற்போது கமல்ஹாசன் கைவசம் இந்தியன் 2, புராஜெக்ட் கே, கே.ஹெச் 233, மணிரத்னத்துடன் 1 படம் என்று 4 பிரம்மாண்ட படங்களை வைத்துள்ளார்.மேலும் இந்தியன் -3 உருவாகும் ஒப்பந்தப் பேச்சுவார்த்தையில் உள்ளது.

கமல்ஹாசன் விக்ரம் படத்திற்கு முன்னரே ஒப்பந்தம் ஆன திரைப்படம் தான் இந்தியன் 2. இப்படம் ஆரம்பிக்கப்பட்டு சுமார் 4 ஆண்டுகளுக்கு மேல் ஆகும் நிலையில், தற்போது ஒரு வழியாக படப்பிடிப்பு முடிவுக்கு வர உள்ளது.

ஷங்கர் இயக்கும் இந்தியன் 2 பிரம்மாண்ட திரைப்படம் வருகிற 2024-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளது. 
இந்த படத்தில் நடிப்பதற்காக கமல்ஹாசன் ரூ.100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கி உள்ளார்.

கமல்ஹாசன் அண்மையில் ஒப்பந்தம் ஆன திரைப்படம் தான் பிரபாஸ் நாயகனாக நடிக்கும் புராஜெக்ட் கே. இந்த படத்தை நாக் அஸ்வின் இயக்குகிறார். 

இப்படத்தில் கமல்ஹாசன் வில்லனாக நடிக்கிறார். இப்படத்தில் நடிக்க 25 நாட்கள் மட்டுமே கால்ஷீட் கொடுத்துள்ள நடிகர் கமல்ஹாசனுக்கு ரூ.150 கோடி சம்பளம் வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கமல்ஹாசன் கைவசம் உள்ள மற்றுமொரு திரைப்படம் இயக்குனர் ஹெச். வினோத் இயக்கும் கே.ஹெச் 233. இந்த படத்திற்கான அறிவிப்பு செவ்வாய்க்கிழமை வெளியானது. 
இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது
கமல்ஹாசன் நடிகும் கே.ஹெச். 233 படம் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்னரே ரூ.150 கோடி வரை பிசினஸ் ஆகி உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படம் முடித்ததும் கமல்ஹாசன் மணிரத்னம் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க உள்ளார். 

இத பிரம்மாண்ட படத்திற்கான திரைக்கதை பணிகலிஅ இயக்குனர் மணிரத்னம் மேற்கொண்டு வருகிறார்.
 இந்த படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்துடன் இணைந்து கமல்ஹான் மற்றும் மணிரத்னம் தயாரிக்க உள்ளனர்.

ஆக கமல்ஹாசன் 4 பிரம்மாண்ட படங்களை வைத்துள்ளார். 
இந்த 5 படங்களும் வெளியானால், தமிழ் சினிமாவில் நம்பர் 1 நடிகர்  கமல்ஹாசன்தான்  என்று கூறப்படுகிறது.
தற்போது அதிகம் சம்பளம் பெறும் நடிகர்களில் கமல்ஹாசன்தான் 1.

தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருக்கும் ரஜினிகாந்த்,விஜய், அஜித் கைவசம் ஒரு படத்தை மட்டுமே வைத்துக்கொண்டு நடித்து வரும் நிலையில், உலக நாயகன் கமல்ஹாசன் கைவசம் 4 பிரம்மாண்ட படங்களை வைத்துக்கொண்டு அதிரடியாக நடித்து வருகிறார். 

மேலும் ரஜினிக்கு தற்போதைய படமான ஜெயிலர் படத்திற்கு 80 கோடிகள்தான் சம்பளமாக சன் நிறுவனம் கொடுத்துள்ளது.ஆனால் கமலின் தற்போதைய புராஜக்ட் கே பட சம்பளம் 28 நாட்களுக்கு150 கோடிகள் சம்பளமாக கொடுக்கப் படுகிறது.

இதன் மூலம், கமல்ஹாசன் முன்னணி நடிகர்களானரஜினி விஜய் போன்றவர்களை முந்திவிட்டார் என்பதுதான் தற்போதைய கோலிவுட் வட்டாரப் பரபரப்பான பேச்சு.
--------------------------------------------

இந்திய ரெயில்வேத்துறையால் வந்தே பாரத் ரெயில் முக்கியமான நகரங்களுக்கு இடையில் இயக்கப்பட்டு வருகிறது.
 சமீபத்தில் மத்திய பிரதேசத்தில் ஐந்து வந்தே பாரத் ரெயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். 

வந்தே பாரத் ரெயில் அதிவேகமாக செல்லக் கூடியதாகவும், பெரும்பாலான இடங்களில் நின்று செல்லாதது என்பதாலும் பயண நேரம் குறையும் என்று ரெயில்வே அறிவித்தது.


 மேலும், அதிநவீன வசதியுடன் பெட்டிகள் உருவாக்கப்பட்டுள்ளதால் இதில் பயணம் செய்ய அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. 
அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதால், பெரும்பாலான பயணிகள் இந்த ரெயிலை விரும்புவதில்லை. இதனால் பெரும்பாலான இருக்கைகள் காலியாக இருக்கிறது.

 இதனால் கட்டணத்தை குறைத்து பயணிகளின் வருகையை அதிகரிக்க இந்திய ரெயில்வே திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
இந்தூர்- போபால், போபால்- ஜபால்புர், நாக்பூர்-பிலாஸ்புர் உள்ளிட்ட குறுகிய தூரம் செல்லும் ரெயில்களின் கட்டணத் தொகை குறைய வாய்ப்புள்ளது. 
போபால்-ஜபால்புர் வந்தே பாரத் ரெயிலில் 29 சதவீதம் மட்டுமே பயணிகளால் நிரம்புகிறது.

 இந்தூர்- போபால் ரெயில் 21 சதவீதம்தான் நிரம்புகிறது. 
ஏ.சி. சேர் கார் டிக்கட் 950 ரூபாய், எக்சிக்யூட்டிவ் சேர் கார் டிக்கெட் 1525 ரூபாய் ஆக உள்ளது. 
தற்போது இந்தியாவில் 46 வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
  இதற்கிடையே எக்ஸ்பிரஸ் ரெயிலைவிட,  வந்தே பாரத் ரெயில் குறைவான வேகத்தில் செல்கிறது போன்ற விமர்சனமும் எழுந்துள்ளது.
----------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?