செல்லாது,செல்லாது!

 தேனி மக்களவை தொகுதியில் உள்ள மிலானி என்பவரல் தொடரப்பட்ட வழக்கில், 2019ஆம் ஆண்டு தேர்தலில் வென்ற ஓ.பி.ரவிந்திரநாத், அதிகார துஷ்பிரயோகம், ஊழல் மற்றும் பணம் கொடுத்து வெற்றி பெற்றதால் வெற்றி செல்லாது என்று அறிவிக்க கோரி இருந்தார்.

தனக்கு எதிரான தேர்தல் வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று ரவீந்திரநாத் தரப்பில் நிராகரிப்பு மனுத்தாக்கல் செய்தார்.அதை  நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட பின்னர் நீதிபதி சுந்தர் பிறப்பித்த உத்தரவில், தேனி தொகுதியில் நடந்த தேர்தல் செல்லாது என்றும் இதனால் ஓ.பி.ரவீந்திரநாத் செல்லாது என்றும் தீர்ப்பு அளித்தார்.

2019 நாடாளுமன்றத் தேர்தலில் அப்போதைய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் தான் பங்கு வங்கித்திருந்த நிறுவனத்தில் ஆண்டுக்கு 45 லட்சம் ரூபாய் சம்பளமாக பெற்ற விவரத்தையும், அவர் தம்பிக்கு தர வேண்டிய 66 லட்சம் கடனையும், வங்கியில் வாங்கிய வீட்டுக் கடனையும் மறைத்து இருந்தார்.

தனது சொத்து, கடன்கள், நிறுவன பங்குகள் குறித்த விவரங்களை மறைத்துள்ளார். 

ஆனால் அதனை தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் தங்கத்தமிழ்ச்செல்வன் எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும் அவரது வேட்புமனுவை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டது.

இதற்கு எதிராக தேனி நாடாளுமன்றத் தொகுதியை சேர்ந்த வாக்காளர் மெலானி என்பவர் வழக்கு தாக்கல் செய்திருந்தார். 

கடந்த ஓராண்டாக நடந்த விசாரணயின் முடிவில் சொத்து விவரங்கள், வங்கி கடன், நிறுவன பங்குகள், பெற்ற கடன், வரவேண்டிய கடன் குறித்த விவரங்களை மறைத்துள்ளது நிரூபணமானதால் அவரது வெற்றி செல்லாது என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இதில் முக்கியமாக தங்கத்தமிழ்ச்செல்வன் நீதிமன்றம் வந்து சாட்சி சொன்னார். அதே போல் பிராண பத்திரம் தாக்கல் செய்த விவரங்களை சரியாக பார்க்கவில்லை என்று தேர்தல் நடத்தும் அதிகாரி ஒப்புக்கொண்டார். 

அது மட்டுமின்றி 6 நாட்களுக்கு ஓ.பி.ரவிந்திரநாத்திடம் குறுக்கு விசாரணையும் நடத்தப்பட்டது. இதன்பிறகே தற்போது தீர்ப்பு வெளியாகி உள்ளது. 

நீதிபதி சுந்தர் பிறப்பித்த உத்தரவில், தேனி தொகுதியில் நடந்த தேர்தல் செல்லாது என்றும் இதனால் ஓ.பி.ரவீந்திரநாத் செல்லாது என்றும் தீர்ப்பு  வெளியாகியுள்ளது.

. எதிர்மனுதாரரின் மேல்முறையீடுக்குப் பிறகு ஒரு மாதத்தில் தேர்தல் ஆணையம் முடிவெடுக்கும் எனத்தெரிகிறத்து .

--------------------------------------------

சட்ட அமைச்சர் ரகுபதிஆர்.யன்.ரவிக்கு கேள்வி?

ஆளுநருக்கு நேற்றையதினம் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி எழுந்தி இருந்த கடிதத்தில், ”ஊழல் வழக்குகளில் நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கிட இசைவு ஆணைக்காக அனுப்பப்பட்ட கோப்புகள் நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது. 

எனவே ஆளுநர் இதில் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முன்னாள் அதிமுக அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா ஆகியோர் குட்கா/மாவா விநியோகிப்பாளர்களிடம் இருந்து சட்டவிரோதமாக பணம் பெற்ற குற்றச்சாட்டு தொடர்பாக உயர்நீதிமற உத்தரவுப்படி கிரிமினல் வழக்கு பதிவு செய்யபப்ட்டு, மத்திய புலனாய்வு அமைப்பு வழக்கு பதிவு செய்து விசாரித்தது, இவர்கள் மீது நீதிமன்ற விசாரணை தொடங்குவதற்கு இசைவு ஆணையை சிபிஐ கோரியது.

 மாநில அமைச்சரவையும் இந்த இசைவு ஆணை கோரும் சிபைஐ கோரிக்கையை ஆளுநர் அலுவலகத்துக்கு 12.09.2022 அன்று அனுப்பியது.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக இதுவரை இந்த கடிதம் தொடர்பாக எந்த பதிலும் கிடைக்காமல் முன்னெப்போதும் இல்லாத வகையில் தாமதபப்டுத்துவதால் இந்த வழக்கில் எவ்வித மேல் நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை.

 இதே போன்று மேலும் இரண்டு நிகழ்வுகளில், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு மற்றும் வணிகவரித்துறை அமைச்சராக இருந்த கே.சி.வீரமணி, முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் மீது நீதிமன்ற விசாரணையை தொடங்கி இசைவு ஆணை கோரியது.

இந்த கோரிக்கைகளுக்கு மாநில அமைச்சரவை அனுமதி அளித்து அதற்கான கடிதங்களை முறையே 12.09.2022, 15.05.2023 ஆகிய தேதிகளில் ஆளுநர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டது. 

இந்த ல்கோரிக்கை கடிதங்களும் நீண்டகாலமாக நிலுவையில் உள்ளது. முந்தைய அதிமுக அமைச்சர்கள் மீதான எந்த ஊழல் குற்றச்சாட்டு வழக்குகளிலிஉம் நீதிமன்ற விசாரணையை தொடங்கிட தேவையான இசைவு ஆணையை இதுவரை ஆளுநர் வழங்கவில்லை.

ஊழல் வழக்குகளில் இசைவு ஆணை நிலுவையில் இருபப்து தவிர, மாநில சட்டப்பேரவையில் நிறைவேறப்பட்ட 13 மசோதாக்கள் ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ளது. 

இவற்றில் இரண்டு மசோதாக்கள் 3 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ளன. எனவே மேற்குறிப்பிட்டு இருக்கும் முக்கியமான கோப்புகள், மசோதாக்கள் மீது தனிப்பட்ட்ட கவனம் செலுத்தி, இனியும் தாமதிக்காமல் ஊழல் வழக்குகளில் நீதிமன்ற வைசாரணையைத் தொட்னக்கி இசைவு ஆணையையும் மசோதாக்களுக்கு ஒப்புதலையும் ஆளுநர் வழங்க வேண்டும்” என்று ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு சட்ட அமைச்சர் ரகுபதி கோரிக்கை. விடுத்து இருந்தார்.


 சட்டத்துறை அமைச்சர் ரகுபதியின் கடிதம் ஊடங்களில் வெளியாகி அரசியல் விவாதங்களை கிளப்பி இருந்த நிலையில் அமைச்சர் ரகுபதியின் புகார்கள் குறித்த கடிதத்திற்கு ஆளுநர் மாளிகை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஆளுநர் மாளிகை சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர்களான ரமணா மற்றும் விஜயபாஸ்கர் ஆகியோர் மீது குட்கா வழக்கில் புகார்கள் குறித்த வழக்கு சிபிஐ வசம் உள்ளதால் சட்ட விளக்கத்திற்காக நான் காத்திருக்கிறேன்எனதெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், முன்னாள் வணிகவரித்துறை அமைச்சர் மீதான லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கில் மாநில புலனாய்வு துறை அறிக்கையின் முறையான அங்கீகரிக்கப்பட்ட நகலை சம்பர்பிக்க வேண்டி இருப்பதால் அதன் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடர்பாக மாநில அரசிடம் இருந்து எந்த குறிப்போ அல்லது கோரிக்கையோ வரவில்லை என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

விசாரணை வளையத்தில் உள்ள செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்து ஆணையிட்டு மூக்குடைபட்ட ரவி,

சி.பி.ஐ விசாரணை செய்ய (அதுவும் முன்னாள்அமைச்சர்களை).அனுமதி கேட்டு ஒப்புதலுக்கு ஆண்டுகணக்கில் ஒப்புதலளிக்காமல் சனாதனம்,ரிஷிகளால் இந்தியா உருவானது என்று தனது பதவிக்கு தொடர்பில்லாதவற்றை பற்றி ஊர்,ஊராகப் பேசவே ஆர்யன்ரவிக்கு நேரம் போதவில்லை.

விசாரணைக்கு ஒப்புதலளிக்க விசாரணை அறிக்கை தரவில்லை எனவே தாமதம் என பதில் தருகிறார்.

சி.பி.ஐ.விசாரணைக்குத்தானே ஒப்புதல் என்பதை மறந்து பேசுகிறார்.மனநிலை எங்கே இருக்கிறது ஆளுநருக்கு?

----------------------------------








இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?

ரூ360 கோடிகள் வீணா?