"இந்தியா" விற்கு வடகொரியா நிலை

வன்முறை நடைபெற்ற மேற்குவங்க பஞ்சாயத்து தேர்தலில் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது. 19 மாவட்டங்களில் 696 வாக்குச்சாவடிகளில் நடைபெற்ற மறுவாக்குப்பதிவுக்கு பின்னர் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

இந்த தேர்தலில் 37 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் 18 பேர் வாக்குப்பதிவு நடந்த சனிக்கிழமை கொல்லப்பட்டனர்.5.67 கோடி மக்கள் 2.06 லட்சம் வேட்பாளர்களை 73,887 இடங்களுக்காக தேர்ந்தெடுக்கிறார்கள்.மேற்கு வங்க தேர்தல்களில் வன்முறை புதிது கிடையாதுதான், ஏனெனில் கடந்த தேர்தலில் 2018ம் ஆண்டு 12 பேர் தேர்தல் வன்முறைகளில் சிக்கி உயிரிழந்தார்கள்.

• வரும் நாட்களில் டெல்லியில் அதிகன மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இன்று வானம் மேகமூட்டத்துடனும் நகரின் பல இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

•இமாச்சல பிரதேசத்தில் கடும் மழையால் இரண்டு வாரங்களில் 72 பேர் உயிரழ்ந்தனர். 94 பேர் படுகாயமடைந்தனர். 

• இமாச்சல பிரதேசத்தில் 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெய்த கனமழையால் ஆறுகளில் பெருக்கெடுத்து ஓடியது வெள்ளம். பாலங்கள், வீடுகள், தங்கும் விடுதிகள் நீரில் அடித்துச் செல்லப்பட்டதால் ரூ.3,000 கோடி இழப்பு ஏற்பட்ஈடுபட்டனர்.

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370வது பிரிவு ரத்து செய்யப்பட்டதற்கு எதிரான வழக்குகள் – 4 ஆண்டுகளுக்குப் பின் உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு இன்று விசாரணை செய்கிறது.

• தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்தது. அடுத்த 5 நாட்களுக்கு மழை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சாலையோரத்தில் வசிக்கும் பெண்களுக்கும் மகளிர் உரிமைத் தொகை கிடைக்க வேண்டும். ஆவணங்கள் இல்லாதோரையும் சேர்த்திட தமிழக அரசு விரிவான முன்னேற்பாடுகளை செய்துள்ளது.

பிரிவினை ஏற்படுத்தும் வகையில் டிவிட்டரில் பதிவிட்ட புகாரில் கனல்கண்ணன் கன்னியாகுமரியில் கைது செய்யப்பட்டார். ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் மற்றும் திருமாவளவன் ஆகியோருக்கு கொலை மிரட்டல் விடுத்த இந்து அமைப்பின் நிர்வாகி சென்னையில் கைது செய்யப்பட்டார்.

• பருத்திக்கு உரிய விலை கிடைக்கவில்லை என்று கூறி சீர்காழி பருத்தி விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். மழையில் நனைந்த பருத்தி மூட்டைகளுக்கு இழப்பீடு கோரி கொட்டும் மழையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆண்டின் இறுதியில் தேர்தல் நடைபெற உள்ள மத்திய பிரதேசத்திற்கு சென்ற பிரதமர் மோடி கலவரம் நடந்த மணிப்பூருக்கு இதுவரை செல்லவில்லை.?

தேசியவாத காங்கிரஸ் கட்சி ஊழல் கட்சி என்று பிரதமர் மோடி கூறியநிலையில் தற்போது அக்கட்சி எம்.எல்.ஏக்களை பாஜக இணைத்துக் கொண்டதன் மூலம் பாரதிய ஜனதா கட்சியை ஊழல் ஜனதா கட்சி என்று அழைக்க வேண்டும் ..நாடு முழுவதும் அறிவிக்கப்படாத எமர்ஜென்சியை பாஜக திணித்துள்ளது.

மக்கள் இப்போது பேசாவிட்டால் 2024ஆம் ஆண்டுக்கு பிறகு எங்களால் பேச முடியாது. வடகொரியா போன்ற பா.ஜ.க,சர்வாதிகாரத்தை நோக்கி நம் நாட்டை நகர்வத்துகிறது.

என சிவசேனா (யுபிடி) தலைவர் உத்தவ் தாக்கரே விமர்சித்துள்ளார்.



----------------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?