உன் வீடு என் வீடு மாதிரி

 எதிர்கட்சினரை மோசடி என அமுலாக்கத்துறையை வைத்து கைது செய்கிறது பா.ஜ.க.

ஆனால் பா.ஜ.க வினர தான் அதிக அளவு மோசடி,முறைகேடுகளில் ஈடுபடுகின்றனர்.

பாஜக சட்ட மன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் 100கோடி பத்திரப் பதிவு மோசடியில் சிக்கியுள்ளார்.அடும்து பா.ஜ.க வழக்குரைஞர் முதியோர்கள் வீடுகளை வாடகைக்கு எடுத்து தனது சொந்த வீடு என ஒத்திக்கு விட்டு பலகோடிகள் முறைகேட்டில் மாட்டியுள்ளார்.

சென்னை அடையார் பரமேஸ்வரி நகரை சேர்ந்தவர் பவானி (52). 

இவருக்கு விருகம்பாக்கம் கம்பர் தெருவில் 1200 சதுர அடி கொண்ட தனி வீடு உள்ளது. கடந்த 2018-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் காஞ்சிபுரம் அடுத்த வையாவூர் பகுதியை சேர்ந்த வழக்கறிஞரான சிவ அரவிந்தன் என்பவர் பவானியை அணுகியுள்ளார்.

 அப்போது அடையாறில் தான் சொந்தமாக நிறுவனம் ஒன்றை நடத்தி வருவதாகவும், தங்களது வீட்டை வாடகைக்கு கொடுத்தால் இங்கு நிறுவனத்தை நடத்திக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார். 

 
இதனை நம்பிய பவானி அட்வான்ஸ் ஒரு லட்சம் ரூபாய் எனவும் மாதந்தோறும் வாடகை 20,000 என ஒப்பந்தம் செய்து வீட்டை வாடகைக்கு சிவ அரவிந்தனுக்கு கொடுத்துள்ளார். 
பின்னர் ஆறு மாதம் சரியாக வாடகை தந்த சிவ அரவிந்தன், அதன் பிறகு சரியாக வாடகை பணம் தராததால் பவானி நேரில் சென்று வீட்டை பார்த்தபோது அதிர்ச்சி அடைந்துள்ளார். 
அந்த வீட்டை சிவா அரவிந்தன் தனது வீடு எனக் கூறி இரண்டு பேருக்கு தலா 8 லட்சம் என லீசுக்கு கொடுத்திருப்பது தெரியவந்துள்ளது. 
 
 
இதனால் அதிர்ச்சி அடைந்த பவானி இதுகுறித்து சிவ அரவிந்தனிடம் கேட்டபோது தகாத வார்த்தையால் , பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறி,  பவானி விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

 புகாரின் பேரில் போலீசார் மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதனை அடுத்து விசாரணை மேற்கொண்ட விருகம்பாக்கம் போலீசார் நடத்திய விசாரணையில்,  வழக்கறிஞரான சிவ அரவிந்தன்,  காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாஜக கட்சியில் முன்னாள் வழக்கறிஞர் பிரிவு செயலாளராக இருந்துள்ளார். 

இதே போல சிவா அரவிந்தன் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ராஜேந்திரனிடம் ஏழு லட்ச ரூபாயும், அடையாறில் லீனா பெர்னேண்டஸ் என்பவரிடம் 2 கோடி ரூபாயும் வீட்டை வாடகைக்கு எடுத்து மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட சிறைக்குச் சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.
 
 
இதேபோல தொடர்ச்சியாக சிவ அரவிந்தன் முதியவர்களை குறிவைத்து மோசடியில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரியவந்தது. முதியவர் பவானி கொடுத்த புகாரின் அடிப்படையில், வழக்கறிஞர் சிவ அரவிந்தனை போலீசார் மீண்டும் கைது 
செய்துள்ளனர்.
 கைது செய்யப்பட்ட அரவிந்தன் எத்தனை முதியவர்களிடம் , இது போல் மோசடி செய்துள்ளார் என தீவிர விசாரணை மேற்கொண்டு நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தி சிறையில் அடைத்தனர்.
 -------------------------------------------


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?

ரூ360 கோடிகள் வீணா?