தலைநகர்-கலைநகர்

 தமிழ்நாட்டில் வரும் 21ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின் - சென்னை தலைநகர் என்றால் மதுரை கலைநகர் என பேச்சு.

இந்தியாவில் 44 சதவிகித  எம்.எல்.ஏக்கள் மீது கிரிமினல் வழக்குகள் - அதிர்ச்சி தகவல்.

கும்பகொணம் பள்ளி தீ விபத்து - 19ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிப்பு.

ஆர்.எஸ்.எஸ் கூட்டத்திற்காக ஒருவாரம்பள்ளி மாணவர்களுக்கு அனுமதியின்றி விடுமுறை - ஊட்டியை சேர்ந்த தனியார் பள்ளிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்.

உத்தரபிரதேசத்தில் மின்சாரம் தாக்கி கன்வார் யாத்ரீகள் 5 பேர் பலி - பீகாரில் 24 மணி நேரத்தில் மின்னல் தாக்கி 17 பேர் உயிரிழப்பு.

மணிப்பூர் எரிகிறது, ஐரோப்பா விவாதிக்கிறது - ஆனால் பிரதமர் மோடி மட்டும் மவுனம் காப்பதாக,வெளிநாடுகளில் சுற்றுலா செல்வதாக ராகுல் காந்தி சாடல்.

வட மாநிலங்களில் வரும் 19 ஆம் தேதி வரை கனமழை நீடிக்கும் என இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்து உள்ளது.



-------------------------------------

ரபேல் மேலும் ரபேல்

2014ஆம் ஆண்டு பிரதமராக மோடி பதவியேற்ற ஆரம்ப காலத்திலேயே  ரஃபேல் விமீனம் வாங்கியதில் முறைகேடு என்ற  விவகாரம் நேரடியாக பிரதமர் மோடியை தொடர்புப்படுத்துவதால் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. 

ரஃபேல் விவகாரம் என்றால் என்ன? பிரதமர் மோடி மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் என்ன? தற்போது பிரான்ஸ் நாட்டுக்கு பிரதமர் சென்றிருக்கும் நிலையில், ரஃபேல் விவகாரம் விஸ்வரூபம் எடுக்க காரணம் என்ன? என்பதை கீழே காண்போம்.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில், இந்திய விமானப்படையை பலப்படுத்தும் நோக்கில் போர் விமானங்களை வாங்க முடிவு செய்யப்பட்டது. 

அதன்படி, ஏலத்தில் உலகின் தலைசிறந்த நிறுவனங்கள் கலந்து கொண்ட நிலையில், மற்றவற்றை காட்டிலும் குறைந்த விலைக்கு கேட்ட பிரான்ஸ் நாட்டின் டசால்ட் ஏவியேஷன் நிறுவனத்திற்கு இந்திய போர் விமானங்களை தயார் செய்யும் ஏலம் கிடைத்தது.

அதன்படி, 126 ரஃபேல் போர் விமானங்களை வாங்க முடிவு செய்யப்பட்டது. 

பிரான்ஸ் நாட்டின் டசால்ட் ஏவியேஷன் நிறுவனத்துடன் இணைந்து இந்திய அரசுக்கு சொந்தமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனம், இந்த போர் விமானங்களை தயார் செய்யவிருந்தது. 

இதற்கிடையே, பாஜக, மத்தியில் ஆட்சி அமைத்தது. போர் விமானங்களின் விலை, உத்தரவாதம் தொடர்பாக இரு நாட்டு அரசுக்கிடையே பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்தபோதே

, அப்போதைய இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர், திடீரென, பேச்சுவார்த்தையில் பிரச்னை ஏற்பட்டதாகவும் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தால் ரஃபேல் போர் விமானங்களுக்கு பதில் கூடுதலாக சுகோய்-30 எம்கேஐ போர் விமானங்களே போதுமானது என அறிவித்தார்.

இதை தொடர்ந்து, பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துவிட்டதாக பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவித்தன.

 இந்த சூழலில், 

2015ஆம் ஆண்டு, பிரான்ஸ் நாட்டுக்கு பிரதமர் மோடி சென்றிருந்தபோது, பேச்சுவார்த்தை மீண்டும் வெளிப்படையாக இல்லாமல்  தொடங்கப்பட்டது. 

அதன்படி, 126 ரஃபேல் விமானங்களுக்கு பதில், ஏற்கனவே தயாரிக்கப்பட்ட 36 ரஃபேல் விமானங்களை வாங்க இரண்டு அரசுகளும் ஒப்பந்தம் மேற்கொண்டன.

இதற்காக, இந்திய தொழிலதிபர் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் டிஃபென்ஸ் நிறுவனம், டசால்ட் ஏவியேஷன் இணைந்து போர் விமானங்களை தயாரிக்க ஒப்பு கொண்டது.

அனில் அம்பானி இந்த விமானத்தொழில் நுடபத்துறையில் எந்த வித அனுபவமும் இல்லாதவர்.மேலும் அது தொடர்பான நிறுவனம்,வல்லுனர்கள் எதுவிம் இல்லாதவர்.

 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு பிரான்ஸ் நாட்டின் டசால்ட் ஏவியேஷன் நிறுவனத்துடன் இந்திய அரசு ரூ.59,000 கோடியில் ஒப்பந்தம் செய்தது.

126 விமானங்களுக்கு பதில்ஏற்கனவே தயாரிக்கப்பட்ட 36 ரஃபேல் விமானங்களை வாங்க இரண்டு அரசுகளும் ஒப்பந்தம் மேற்கொண்டன.

இதற்காக, இந்திய தொழிலதிபர் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் டிஃபென்ஸ் நிறுவனம், டசால்ட் ஏவியேஷன் இணைந்து போர் விமானங்களை தயாரிக்க ஒப்பு கொண்டது. 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு பிரான்ஸ் நாட்டின் டசால்ட் ஏவியேஷன் நிறுவனத்துடன் இந்திய அரசு ரூ.59,000 கோடியில் ஒப்பந்தம் செய்தது.

126 விமானங்களுக்கு பதில், தயாரிக்கப்பட்டு ரெடியாக இருக்கும் 36 விமானங்களை வாங்க காரணம் என்ன? 

இந்திய அரசுக்கு சொந்தமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு பதில் எந்த ஒரு அனுபவமும் இல்லாத அம்பானியின் ரிலையன்ஸ் டிஃபென்ஸ் நிறுவனத்திற்கு வாய்ப்பு அளித்தது என பல்வேறு கேள்விகள் எழுந்தன.

அம்பானியின் ரிலையன்ஸ் டிஃபென்ஸ் நிறுவனத்தை தேர்வு செய்தது இந்திய அரசே என பிரான்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் பிராங்கோயிஸ் ஹாலண்ட் தெரிவித்தார்.

ரஃபேல் விவகாரத்தில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்பப்பட்டது.

 ஆனால், மனுக்களை தள்ளுபடி செய்து இந்திய அரசுக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பை எதிர்த்து மேல்முற செய்யப்பட்டது. ஆனால், அந்த வழக்கையும் பா.ஜ.க மோடி அரசுக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றம் நிராகரித்து விட்டது.

இதற்கிடையே, ரஃபேல் விவகாரம் தொடர்பாக பிரான்ஸ் நாட்டின் புலனாய்வு செய்தி நிறுவனம் மீடியாபார்ட், பல்வேறு திடுக்கிடும் தகவல்களை வெளிகொண்டு வந்தது. 

ஒப்பந்ததத்தை இறுதி செய்வதற்காக டசால்ட் நிறுவனம் பல கோடி யூரோ பணத்தை இந்திய இடைத்தரகர் ஒருவருக்கு அளித்தது என்பது பிரான்ஸ் நாட்டின் ஊழல் தடுப்பு அமைப்பு மேற்கொண்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது என மீடியாபார்ட் செய்தி வெளியிட்டது.

 59,000 கோடி ரூபாய் மதிப்பிலான ரஃபேல் ஒப்பந்தம் குறித்து விசாரணை செய்ய பிரான்ஸ் நாட்டு நீதிபதி உத்தரவிட்டார். 

தற்போது, பிரான்ஸ் நாட்டுக்கு பிரதமர் மோடி சென்றுள்ள நிலையில், ரஃபேல் விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுக்க தொடங்கியுள்ளது.



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?

ரூ360 கோடிகள் வீணா?