ரங்காராவ்.
திரைத்துறையில் தனக்கென்று தனி முத்திரை பதித்தவர் ஆளுமை எஸ்.வி. ரங்காராவ்.
1918 ஆம் ஆண்டு ஜூலை 3-ல் ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் உள்ள நூஜ்வீத் என்ற கிராமத்தில் பிறந்தார்.
இவர் திரையில் கம்பீரமான தோற்றம், பாசத்தை கொட்டும் அப்பா, கணீர் குரல், அஜானுபாகுவான தோற்றம், மிடுக்கான நடை, தெளிவான உச்சரிப்பு என தமிழ் மற்றும் தெலுங்கில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வந்தார் ரங்காராவ்.
ஆந்திர பிரதேசத்தின் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள நுஸ்வித் நகரில் 1918ல் ஜூலை 3ந்தேதி பிறந்தார்.
சென்னை இந்து கல்லூரியில் இளங்கலை அறிவியல் படித்தார். 1949ல் மன தேசம் என்ற தெலுங்கு படத்தில் சிறு வேடத்தில் அறிமுகமானார்.
1951ல் பாதாள பைரவி படத்தில் நடித்த பிறகு அவர் திரை உலகில் திரும்பி பார்க்கும் ஆளுமையாக தன்னை வெளிப்படுத்தினார். அதேபோல் அந்த படத்தில் கடோத்கஜனாக அவர் வந்த கல்யாண சமையல் சாதம் காய்கறிகளும் பிரமாதம் பாடல் இன்றும் குழந்தைகளுக்கு சிரிப்பை மூட்டுவதற்கு அவரது வெகுளித்தனமான அசைவுகளும், அசத்தல் நடிப்பு ஒரு காரணம் எனலாம்.
அதேபோல் தன் வாழ்நாளில் 60 வயதை கூட பார்க்காதவர் தன் 35 வயது முதல் ஏராளமான படங்களில் பாசமிகு அப்பாவாக முதுமை தோற்றத்தில் பரிணமித்திருந்தார்.
கம்சன், துரியோதனன்,பீஷ்மர்,ராவணன் என பல சரித்திர தோற்றங்களில் நடித்தவர்.
பாசமுள்ள தந்தையை திரையில் வடித்து காட்டுவதில் எஸ்.வி.ரங்காராவ்க்கு இணை யார் என்று கேட்கும் அளவிற்கு தன் நடிப்பை வெளிப்படுத்தினார்.
இவர் கடந்த 1974ம் ஆண்டு ஜூலை 18ம் தேதி உடல் நலக்குறைவால் இந்த உலகை விட்டு மறைந்தார்.
இந்நிலையில் நடசாரவ பவும, நடசிம்ஹா, நடசாம்ராட், விஸ்வ நட சக்ரவர்த்தி என தெலுங்கு ரசிகர்கள் இவருக்கு பல பட்டங்கள் வழங்கி கொண்டாடினர்.
நர்த்தன சாலா படத்தில் கீசகனாக நடித்ததைத்தொடர்ந்து இந்தோனேசியா தலைநகர் ஐகர்தாவில் ஆசிய அளவில் விருது பெற்றார்.
அவர் இயக்கிய 2 படங்களுக்காக, ஆந்திராவில் நந்தி விருது பெற்றார். இவர் தன் நடிப்பிற்காக 5முறை குடியரசுத் தலைவர் விருது வாங்கியிருக்கிறார்.
இவரது நூற்றாண்டை குறிக்கும் விதமாக இவரின் தபால் தலை கடந்த 2013ல் வெளியிடப்பட்டது.
இதே போல் இவரது நூற்றாண்டு விழாவை ஹைதராபாத்தில் ஒரு வாரத்திற்கு ஆந்திர திரை உலகம் கொண்டாடியது.
இதைத்தொடர்ந்து ஏலூரில் 12 அடி உயர வெண்கலச் சிலையும் தும்மலப்பள்ளியில் மார்பளவு வெண்கலச்சிலையும் இவருக்கு அமைக்கப்பட்டது.