நீங்களே முடிவெடுங்கள்.

 • ஒரு தலைபட்சமான செயல்பாடுகள் மூலம், ஆளுனர் பதவி வகிக்க தகுதியற்றவர் என ஆர்.என்.ரவி நிரூபிப்பதாக குடியரசுத் தலைவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். ஆளுனராக ரவி தொடர்வதை குடியரசுத்தலைவரே முடிவு செய்துகொள்ளட்டும் என்றும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஆளுனருக்கு எதிராக முதலமைச்சர் கடிதம் எழுதியதற்கு கூட்டணி கட்சித்தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். திமுக அரசுக்கு நெருக்கடி தருவதே ஆளுனரின் நோக்கம் என்று விமர்சித்துள்ளனர்.

• இமாச்சல் பிரசேத்தில் மழை, வெள்ள பாதிப்பால் 6 பேர் உயிரிழந்துள்ளனர். நிலச்சரிவால் 765 சாலைகள் மூடப்பட்டுள்ளன. பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இமாச்சலில் வீடுகள், சாலைகளில் கார்கள் அடித்துச்செல்லப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மழை தொடர்வதால் 2 நாள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பத்திரப்பதிவு தொடர்பான சேவைக் கட்டண உயர்வு இன்று முதல் அமல்படுத்தப்படுகிறது. ஆவணப்பதிவு மற்றும் முத்திரை தொடர்புடைய 20 இனங்களுக்கான கட்டணங்கள் திருத்தி அமைக்கப்பட்டுள்ளது.

• சென்னையில் மீண்டும் மழை. புறநகர் பகுதிகளிலும் கனமழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

உசிலம்பட்டி அருகே 400 ஆண்டுகள் பழமைவாய்ந்த நடுக்கல் கண்டெடுக்கப்ப்டடுள்ளது. இனக்குழு தலைவனுக்கு எழுப்பப்பட்டதாக இருக்கலாம் என தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

• பிற மாநிலங்களில் எம்பிபிஸ் படித்தாலும், தமிழகத்தில் முதுநிலை மருத்துவப்படிப்பை படிக்கலாம். தமிழக மாணவர்களுக்கான அரசு ஒதுக்கீட்டு விதிகளில் புதிய தளர்வு அறிவிக்கதெரிவித்துள்ளது.

• வட இந்தியாவில் கடும் மழைப்பொழிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இமாச்சல் பிரதேசம், பஞ்சாம் மற்றும் டெல்லியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

• டெல்லி, நொய்டாவில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. யமுனா நதியின் நீர்மட்டம் அபாய கட்டத்தை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

*மேற்கு வங்கத்தில் நான்கு மாவட்டங்களில் இன்று உள்ளாட்சித் தேர்தலுக்கான மறுவாக்குப்பதிவு நடக்கிறது. உள்ளாட்சித் தேர்தலில் சனிக்கிழமை ஏற்பட்ட வன்முறை அடுத்து மாநில தேர்தல் ஆணையம் இந்த ஏற்பாட்டை செய்துள்ளது.

• டெல்லியில் கொட்டித் தீர்த்த கனமழையால் குளம்போல் காட்சியளிக்கின்றன சாலைகள். ரோகிணி நகர் பகுதியில் திடீரென உள்வாங்கிய சாலையால் மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது.

• தொடர் மழையால் 17 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக வடக்கு ரயில்வே அறிவித்துள்ளது. தண்டவாளங்களில் தண்ணீர் தேங்கியதால் 12 ரயில்கள் மாற்று வழியில் ரயில்களை இயக்குவதாக தெதெரிவித்துள்ளது

2016 ஆம் ஆண்டு அதிமுக கொடுத்த தேர்தல் அறிக்கை..

1.ரேஷன் கார்ட் வைத்திருப்பவர்களுக்கு இலவச செல் பேசி..

2. கூட்டுறவு கடன் ரத்து

3. இலவச wifi பொது இடங்களில்

4. கல்வி கடன் பெற்று வேலை இல்லா பட்டதாரிகளின் கடன் உடனடி ரத்து

5. விவசாயிகளுக்கு 40000 கோடி வங்கி கடன் 

6. இலவச லேப்டாப் உடன் இலவச நெட் கணக்சன்.

7. Amma Banking Card திட்டம் 

(இது என்ன எழவு னு தெரியல)

8. ரேசன் கார்டு holder க்கு இலவச co-op tex coupon worth Rs .500 பொங்கல் பண்டிகைக்கு 

9. மொத்த கல்வி கடன் தள்ளுபடி.. 

5 வருஷ ஆட்சி இவைகளில் ஒன்றையாவது நிறைவேற்றி கொடுத்திருக்கங்களான்னு தேடிப்பார்த்தா.

ஒன்று கூட நிறைவேற்றவே இல்லை என்பதை உண்மை..

-------------------------------------------------

நீங்களே முடிவெடுங்கள்.

தற்போது டெல்லி சென்றுள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை  சந்தித்து பேசினார். 

இந்நிலையில், புதிய திருப்பமாக ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்பாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மூவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 

அதில், ஆளுநர் போன்ற உயர்ந்த அரசியலமைப்பு பதவியில் ஆர்.என்.ரவி நீடிப்பது விரும்பத்தக்கதாகவோ அல்லது பொருத்தமானதாகவோ உள்ளதா என்பதை குடியரசுத் தலைவரின் முடிவுக்கே விட்டுவிடுவதாகவும் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவை இயற்றி அனுப்பியுள்ள சட்ட முன்வடிவுகளுக்கு ஒப்புதல் அளிப்பதில் ஆளுநர் தேவையற்ற காலதாமதம் செய்வதாக முதலமைச்சர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

 சட்டமுன்வடிவுகள் தொடர்பாக ஆளுநர் கோரிய அனைத்து விளக்கங்களையும் தமிழ்நாடு அரசு அளித்துள்ளது என்றும் சட்ட முன் வடிவுகளுக்கு ஒப்புதல் அளிப்பதற்கு காலக்கெடு வகுக்கப்படவில்லை என்பதை ஆளுநர் தவறாகப் பயன்படுத்தக் கூடாது .இப்படிப்பட்ட உயர் பதவிகளில் இதுபோன்ற செயல்கள் நடக்கும் என்று அரசியல் சாசனத்தை உருவாக்கியவர்கள் நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

, அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் மீதான புகார் தொடர்பாக வழக்குத் தொடர அனுமதி வழங்குவதில் ஆளுநர் காலதாமதம் செய்கிறார். 

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்கு தொடர அனுமதி வழங்குவது தொடர்பான கோப்புகளை ஆளுநர் கிடப்பில் போட்டுள்றார். ,

அதிமுக முன்னாள் அமைச்சர்களான பி.வி.ரமணா, சி.விஜயபாஸ்கர், கே.சி.வீரமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் தொடர்பான கோப்புகள் ஆளுநரிடம் நிலுவையில் உள்ளன.ஆனால் ஆளுநர் மாஏஇகை அக்போப்புகளைப் பெற்றுக்கொண்டதாக ஒப்புகை தந்திருந்தும் கோப்புகள் வரவிலை என உண்மைக்புப் புறம்பாகப் பேசுகிறார் .இவை அவர் பதஙிக்கு கண்ணியமற்ற செயல்.

தமிழ்நாடு அரசின் அரசியல் மற்றும் கருத்தியல் எதிராளியாக ஆளுநர் செயல்படுகிறார் .

சனாதான தர்மத்தைப் புகழ்வது, திருக்குறளை வகுப்புவாதப்படுத்துவது, திராவிட பாரம்பரியத்தையும் தமிழ்ப் பெருமையையும் கண்டிப்பது போன்ற வகுப்புவாதக் கருத்துகளை ஆளுநர் தெரிவித்திருக்கிறார். திராவிட அரசியல் பிற்போக்குத்தனமானது என்று ஆளுநர் கூறியிருப்பது அவதூறானது மட்டுமல்ல, அறியாமையும் ஆகும். 

தமிழ்நாடு என்பதை தமிழகம் என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று கூறியதன் மூலம் ஆளுநர் ரவி தமிழர்களின் நலனுக்கு எதிரானவர் என்பதும், தமிழ்நாடு, தமிழ் மக்கள், தமிழர் பண்பாடு ஆகியவற்றின் மீது விவரிக்க முடியாத, ஆழமான வேருன்றிய பகைமை கொண்டவர் என்பதும் தெளிவாகிறது` ..

காவல்துறை விசாரணையில் ஆளுநர் தலையிட்டு வேண்டுமென்றே பொய்யானதகவல்களைக் கூறி புழப்பம் விளைவிக்கிறார். குழந்தைத் திருமணப் புகார்கள் தொடர்பாக சிதம்பரம் நடராஜர் கோவிலைச் சேர்ந்த 2 தீட்சிதர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்கள் மீது பொய்யான புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகத்துக்கு ஆளுநர் பேட்டியளித்தது விசாரணையில் தாக்கத்தை ஏற்படுத்தியதோடு காவல்துறையின் நியாயமான விசாரனைக்கு இடையூறாக இருந்தார். 

செந்தில் பாலாஜி விவகாரத்தில் ஆளுநர் நடந்துகொண்ட விதம் கடுமையான அரசியலமைப்பு மீறல் .

என முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதத்தில்  தெரிவித்துள்ளார்.

ஆளுநர் பதவியில் இருப்பது என்பது குடியரசுத் தலைவரின் இசைவு கோட்பாடு தொடர்பானது. அதனால்தான் இசைவு தெரிவித்த குடியரசுத் தலைவருக்கு முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார். 

ஆளுநரின் செயல்பாடு தொடர்பான விவகாரத்தை உச்ச நீதிமன்றத்துக்கு தமிழ்நாடு கொண்டு செல்லவும் வாய்ப்பு இருக்கிறது. 

அப்படி செல்லும்போது, குடியரசுத் தலைவரிடம் முறையிட்டீர்களா என்ற கேள்வியை நீதிமன்றம் எழுப்பக்கூடும். 

எனவே, உச்ச நீதிமன்றத்துக்கு செல்வதற்கு முன்பான நடவடிக்கையாக கூட இந்தக் கடிதம் இருக்கலாம்.


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?

ரூ360 கோடிகள் வீணா?