புஷ்பா புருசன்கள்?
கோவை சரக டி.ஐ.ஜி விஜயகுமார் தனது வீட்டில் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.
கனமழை காரணமாக இன்று கடையநல்லூர், செங்கோட்டை, கூழப்பாவூர், கடையம் தென்காசி ஆகிய 5 தாலுகா பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
பெண்களுக்கு ரூ.1000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார்.
அவதூறு வழக்கில் 2 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து ராகுல் காந்தி தொடர்ந்த வழக்கில் இன்று குஜராத் நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது.
பிரதமர் 2 நாள் பயணமாக உத்தரபிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானா ஆகிய 4 மாநிலங்களுக்கு சுறுப்பயணம் மேற்கொள்கிறார்.
கோப்புகளே வரவில்லை என்று ஆர்.யன்.ரவி மறுப்பதா?
“ராஜ்பவனில் கோப்புகளை பெற்றுக் கொண்டு, அதற்கான ஒப்புதலும் அளித்துவிட்டு தற்போது கோப்புகளே வரவில்லை என்று மறைப்பதா?”
ஆளுநர் ஆர்.என்.ரவியின் கடிதத்திற்கு, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பதில் அறிக்கை முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணியின் ஊழல் வழக்கு விசாரணையின் கோப்பு மொத்தமாக ஆளுநருக்கு 12.9.2022 அன்றே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது
– அமைச்சர் ரகுபதி.
தற்போதைய முக்கியச் செய்தி
கோவை டி.ஐ.ஜி. விஜயகுமார் தற்கொலை
பணியில் மன அழுத்தம் ஏற்பட்டதன் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது.
சென்னை அண்ணா நகர் போலீஸ் துணை கமிஷ்னராக பணியாற்றிய விஜயகுமார் கடந்த ஜனவரியில் கோவை சரக டிஐஜியாக மாற்றப்பட்டார். இவர் கடந்த 2009ம் ஆண்டு ஐ.பி.எஸ் தேர்வில் வெற்றி பெற்று பல்வேறு இடங்களில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
---------------------------------------------------
புஷ்பா புருசனுக்கு திருமணமா?
பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலையின் 39-வது பிறந்தநாளை, அக்கட்சியினர் பல்வேறு வகைகளில் கொண்டாடி வருகின்றனர்.
அந்த வகையில், விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே உள்ள ஓமந்தூர் பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளியின் அறக்கட்டளை சார்பில்... நேற்றைய தினம் 39 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.
தென்பசியார் பகுதியில் நடைபெற்ற இந்த விழாவில், சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, திருமண ஜோடிகளுக்கு தாலியை எடுத்து கொடுத்து திருமணங்களை நடத்தி வைஎழுந்தது.
இந்த திருமண ஏற்பாடுகளை தனியார் பள்ளி அறக்கட்டளையின் நிர்வாகி ஹரிகிருஷ்ணன் செய்திருந்தார்.
இவர் பாஜக-வில் மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி செயலாளராக இருந்து வருகிறார்.
பிரமாண்டமாக நடத்தப்பட்ட இந்த திருமண விழாவில், ஒரு ஜோடிக்கும் சிறப்பாக செலவு செய்யப்பட்டதாம். அதாவது தலா ஒரு ஜோடிக்கு... 4 கிராம் தங்கத்தில் தாலி, மணமக்களுக்கு பட்டுடைகள், மணப்பெண்ணுக்கான அலங்கார ஏற்பாடு, கல்யாண கவரிங் செட், மணமக்களின் உறவினர்களை அழைத்து வருவதற்கான வாகன ஏற்பாடு, தலா ஒரு ஐயர் மற்றும் மங்கள வாத்தியம், இருவேளை உணவு, திருமண பத்திர பதிவு மற்றும் திருமண உதவித்தொகை (தலா 25000 என கூறப்படுகிறது) உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளனர்.
ஆனால், இங்கு திருமணம் செய்து வைக்கப்பட்டவர்களில் சிலர்... முன்பே திருமணம் ஆனவர்கள் என்றும், அவர்களில் சிலருக்கு குழந்தைகள் இருப்பதாகவும் சர்ச்சை எழுந்தது.
இது குறித்து விசாரித்தபோது, நேற்றைய தினம் அங்கு திருமணம் செய்துக்கொண்ட ஒரு தம்பதியின் குழந்தைக்கு இன்றைய தினம் பிறந்தநாள் என்ற தகவலும்; இன்னும் இரு தம்பதிக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இருக்கும் நிலையில், அதே தம்பதிகள் மீண்டும் திருமணம் செய்துக்கொண்டதும் தெரியவந்தது.
திண்டிவனம் - கிடங்கல் 2 பகுதியை சேர்ந்தவர்கள் ராஜா (எ) கிறிஸ்டோபர் மற்றும் எபினேசர். சகோதரர்களான இவர்கள் இருவருக்கும் ஏற்கனவே திருமணங்கள் ஆகிவிட்டது.
தம்பி எபினேசருக்கு இரண்டு குழந்தைகளும், அண்ணன் கிறிஸ்டோபருக்கு ஒரு குழந்தையும் உள்ளதாம்.
இதே போல், அதே பகுதியை சேர்ந்த திவாகர் என்ற இளைஞருக்கும் ஏற்கனவே மயிலம் கோயிலில் திருமணம் ஆகிவிட்டதாம். ஆனாலும், இந்த 3 பேரும் தங்களுடைய மனைவியருடன் நேற்றைய தினம் பாஜக திருமண நிகழ்ச்சியில் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
இதேபோல் இன்னும் சில ஜோடிகள் இருக்கலாம் என கூறப்படும் நிலையில்... இது, பணம் மற்றும் நகைக்காக நிகழ்ந்ததா அல்லது திருமண ஜோடிகள் கிடைக்காமல் 'புஷ்பா புருசன்" கதையாக ஏற்பாடு செய்யப்பட்டதா... என்ற கேள்விகள் எழுந்துள்ளது.
அண்ணாமலை நடத்திவைத்த இந்த திருமணத்தில், 39 ஜோடிகளில் ஒருவராக திருமணம் செய்துக்கொண்ட கிறிஸ்டோபர் தம்பதியின் குழந்தைக்குத்தான் இன்றுஉ தினம், திண்டிவனத்தில் உள்ள தனியார் மகாலில் முதல் பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது.
இதுகுறித்து விளக்கம் கேட்க எபினேசர் தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டோம். அழைப்பை ஏற்ற அவரிடம் நம்மை அறிமுகம் செய்துக்கொண்டு, அழைத்ததற்கான காரணத்தையும் சொல்லி, 'எபினேசர் தானே பேசுகிறீர்கள்' என்று கேட்டோம். உடனே, "இல்லை சார். நான் வந்து..." என இழுத்தபடி பெயர் சொல்லாமல் மழுப்பியதோடு, "நான் கிடங்கல் இல்லை, சென்னை" என்றபடி முடித்துக்கொண்டார்.
அண்ணாமலை தலைமையில் நடந்த திருமணம், திண்டிவனம் பகுதியில் பல புஷ்பா புருசள்"கதையாக பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
நானும் தலைவன்தான் என அ.மல முயற்சிக்கிறார்.ஆனால் பேஸ்மென்ட் வீக்காகி பல்லை இளித்து விடுகிறது.
----------------------------------------
கோவை சரக டிஐஜி விஜயகுமார்
கோவை சரக டிஐஜி விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் இன்று காலை அவர் தனது இல்லத்தில் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
உயர் காவல்துறை அதிகாரிகள் தற்போது விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் டிஐஜி விஜயகுமார் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
"கோவை சரக காவல்துறை துணைத் தலைவர் திரு. விஜயகுமார் இன்று அகால மரணம் அடைந்தார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தேன். விஜயகுமார் அவர்கள் தனது பணிக்காலத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பல்வேறு பணிப் பொறுப்புகளில் சிறப்பாகப் பணியாற்றி தமிழ்நாடு காவல்துறைக்குப் பெருமை சேர்த்தவர். அவருடைய இந்த மரணம் தமிழ்நாடு காவல் துறைக்குப் பேரிழப்பாகும்.
அவருடைய குடும்பத்தாருக்கும் காவல்துறையைச் சேர்ந்த நண்பர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்."
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
விஜயகுமார் குரூப் 1 தேர்வு எழுதி 2003-ம் ஆண்டு டி.எஸ்.பியாக பணியில் சேர்ந்தார்.
தொடர்ந்து விஜயகுமார் கடந்த 2009-ம் ஆண்டு யு.பி.எஸ்.சி தேர்வு எழுதி வெற்றி பெற்று ஐ.பி.எஸ்ஸாக தேர்வானார்.
முன்னதாக காஞ்சிபுரம், கடலூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றினார் விஜயகுமார்.
பின் சிபிசிஐடி எஸ்பியாக தனது பணியை தொடர்ந்தார்.
சிபிசிஐடியாக எஸ்.பியாக பணியாற்றிய போது டி.என்.பி.எஸ்சி குரூப் 1, குரூப் 2, குரூப் 4 மோசடிகள் குறித்து விசாரணை மேற்கொண்டு உடனடியாக குற்றவாளிகளை கைது செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து சென்னை அண்ணா நகர் துணை ஆணையராக பணிபுரிந்துள்ளார்.
இவர் அண்ணாநகர் துணை ஆணையராக இருந்த போது அரும்பாக்கத்தில் நடந்த வங்கிக் கொள்ளையில் ஈடுபட்ட குற்றவாளிகளை 40 மணி நேரத்திற்குள் கைது செய்தார். இது காவல் துறை வட்டாரத்தில் மிக முக்கியமாக பார்க்கப்பட்டது.
இந்த ஆண்டு ஜனவரி மாதம் டி.ஐ.ஜியாக பதவி உயர்வு பெற்று கோவை சரக டி.ஐ.ஜியாக பணியாற்றி வந்தார்.
வாழ்க்கையில் வரும் கவலைகளும், துன்பங்களும் நிரந்தமானது அல்ல. அவற்றை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம்அதை எதிர்கொள்வதில் தான் உள்ளது.
.தற்கொலை எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கையை மகிழ்வாய் வாழும் வழிகளை கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவையானதாக இருக்கும்.
----------------------------------------