முறைகேடு

மணிப்பூரில் 2 பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்ட வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனையடுத்து அங்கு முதல்வரை நீக்கி விட்டு குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்துமாறு  கோரிக்கை 

ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் இன்று அதிகாலை 4.09 மணியளவில் திடீரென நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்திருக்கிறது.

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டது தொடர்பான செந்தில் பாலாஜியின் மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.

கேரள முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டியின் உடல், சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்பட்டது

 

ஆருத்ரா நிதி நிறுவனங்களில் முதலீடு செய்த பணம் திரும்பக் கிடைக்காததால், கடன் தொல்லை காரணமாக ராஜி என்ற இளைஞர் தற்கொலை .


ப்ராஜெக்ட் கே படத்தின் டைட்டில் கல்கி 2898 - AD'  என அறிவிக்கப்பட்டுள்ளது.


பாசுமதி இல்லாத அனைத்து ரக அரிசி ஏற்றுமதிக்கும் மத்திய அரசு தடைவிதித்துள்ளது. அரிசியின் சில்லைறை விற்பனை விலை ஓராண்டாக 11 சதவிகிதத்திற்கு மேல் அதிகரித்துள்ளதால் மத்திய அரசு தடை விதித்துள்ளது.

-------------------------------------------------


4800 முறைகேடு

முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில் நெடுஞ்சாலைத் துறையில் டெண்டர் கோரியதில் ரூ. 4,800 கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாகவும், 

இது தொடர்பாக அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப் பதிவு செய்து உரிய முறையில் விசாரணை நடத்தக்கோரியும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி 2018ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

அப்போதே இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் சிபிஐ விசாரணை நடத்த அனுமதி வழங்கியது. பின்னர் இதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. 

இந்த வழக்கில் விசாரணை நடத்திய உச்ச நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு தடை விதித்து மீண்டும் சென்னை உயர் நீதிமன்றம் விசாரித்து முடிவு எடுக்க வேண்டும் என உநடத்தியுள்ளார்.

அதன்படி, இந்த வழக்கு விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு நடந்து வந்த நிலையில், வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில் புதிய விசாரணை தேவையில்லை என்றும் சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 18ஆம் தேதி தீர்ப்பளித்தது.

எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஆர்.எஸ்.பாரதி கூறிய குற்றச்சாட்டுகளுக்கு அடிப்படை முகாந்திரம் உள்ளதா என்பதை கண்டறிய லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் கண்காணிப்பாளர் 2018-ல் ஆரம்பகட்ட விசாரணை நடத்தியுள்ளார்.12 சாட்சிகள், 112 ஆவணங்கள் குறித்து கூடுதல் கண்காணிப்பாளர் விசாரணை நடத்தியுள்ளார். புகாரில் போதுமான ஆதாரங்கள் இல்லை. அதிகார துஷ்பிரயோகம் செய்து வேண்டியவர்களுக்கு சாதகமாக எடப்பாடி பழனிசாமி டெண்டர் வழங்கினார் என்பதற்கும் எந்த ஆதாரமும் இல்லை என்று அறிக்கை அளித்துள்ளார்.

மேலும், 2018-ல் லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் எஸ்.பி தாக்கல் செய்த விசாரணை அறிக்கையில் எந்தவொரு தவறும் இல்லை. எனவே, ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையில் குறைபாடு காணமுடியாது. அதுமட்டுமல்லாமல் ஆட்சி மாற்றத்தின் காரணமாகப் புதிதாக விசாரணை நடத்த வேண்டிய அவசியமும் இல்லை என்று நீதிபதி உத்தரவிட்டார்.

இந்நிலையில், டெண்டர் முறைகேடு வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி கேவியட் மனுத்தாக்கல் செய்துள்ளார். சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஆர்.எஸ்.பாரதி மேல்முறையீடு செய்தால் தங்கள் தரப்பு விளக்கத்தை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என எடப்பாடி பழனிசாமி கோரியுள்ளார்.

----------------------------------------------------

தமிழில் முதல் நாவல்

திருச்சி மாவட்டம் குளத்தூர் என்ற கிராமத்தில் 1826ஆம் ஆண்டு அக்டோபர் 11ஆம் தேதி வேதநாயகம் பிள்ளை பிறந்தார்.

தனது தொடக்க கல்வியை தந்தையிடமும், ஆங்கிலம் மற்றும் தமிழ்மொழிக் கல்வியை திருச்சியை சேர்ந்த தியாகராச பிள்ளை என்பவர் இடமும் பயின்ற அவர் சிறுவயதிலேயே நகைச்சுவை கவிதைகளை எழுதத் தொடங்கினார்.

மேலும் அவர் எழுதிய நகைச்சுவை கவிதைகளை திருமண நிகழ்ச்சிகளிலும், உறவினர்கள் சந்திப்பு நடக்கும் இடங்களிலும் அரங்கேற்றமும் செய்தார்.

1851ஆம் ஆண்டு காரைக்காலை சேர்ந்த பாப்பம்மாள் என்பவரை வேதநாயகம் பிள்ளை திருமணம் செய்துகொண்டார்

நீதிமன்றங்களில் பதிவாளராகவும் மொழிப்பெயர்பாளராகவும் பணியாற்றி பின்னர் மாயவரத்தில் 13ஆண்டுகள் முன்சீஃப் ஆக பணியாற்றியதுடன் மாயவரம் நகர் மன்றத் தலைவராகவும் இருந்தார். இதன்காரணமாகவே இவர் மாயூரம் வேதநாயகம் பிள்ளை என்று அழைக்கப்பட்டார்.

மீனாட்சி சுந்தரம் பிள்ளை, இராமலிங்க வள்ளலார் உள்ளிட்ட தமிழறிஞர்களின் சமகாலத்தவரான வேதநாயகம் பிள்ளை நீதிநூல், சித்தாந்த சங்கிரகம், பெண் மதிமாலை, கிறித்தவ வழிபாடு குறித்த திருவருள் அந்தாதி, திருவருள் மாலை, தேவமாதர் அந்தாதி, பிததாப முதலியார் சரித்திரம், சர்வ சமய சமரச கீர்த்தனைகள், சுகுண சுந்தரி புதினம், சத்திய வேத கீர்த்தனை உள்ளிட்ட நூல்களைகுறிப்பிடத்தக்கது.

பெண் கல்வி குறித்து உரைநடை கட்டுரைகளை எழுதிய இவர் தமிழகத்திலேயே முதன்முறையாக மாயவரத்தில் பெண்களுக்கு என்று தனி பள்ளியை தொடங்கினார்.

தமிழகத்தில் பஞ்சம் ஏற்பட்ட காலத்தில் தனது சொத்துகள் அனைத்தையும் தானமாக கொடுத்த மாயூரம் வேதநாயகம் பிள்ளை வீணை வாசிப்பதிலும் வல்லவர் என்று வரலாற்று குறிப்புகள் கூறுகிறது.

1805ஆம் ஆண்டு முதல் 1861ஆம் ஆண்டு வரை ஆங்கில மொழியில் இருந்த நீதிமன்றத் தீர்ப்புகளை தமிழில் மொழி பெயர்ப்பு செய்து 1862ஆம் ஆண்டு வெளியிட்டார்.

இதன் மூலம் தமிழில் முதன் முதலில் தீர்ப்புகளை மொழிப்பெயர்த்த பெருமைக்குரியவராக வேதநாயகம் பிள்ளை மாறினார்.

1889ஆம் ஆண்டு தனது 63ஆவது வயதில் வேதநாயகம் பிள்ளை இயற்கை எய்தினார். இவரின் கொள்ளுப்பேரன் தற்போதய நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி என்பது குறிப்பிடத்தக்கது.

-----------------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?

ரூ360 கோடிகள் வீணா?