26 எதிர்கட்சிகள்

  மீது காவல்துறையில் புகார்

நாட்டின் பெயரை முறையாக பயன்படுத்தவில்லை என 26 எதிர்கட்சிகள் மீது டெல்லி பாராகம்பா காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.  

சட்டவிதிகளை மீறி இந்தியா என்ற பெயர் கூட்டணிக்கு பயன்படுத்தியுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

கலைஞர் மகளிர் உதவி தொகை திட்டத்தில் இன்று முதல் விண்ணப்பம் விநியோகம் செய்யப்படுகிறது. நியாய விலை பணியாளர்கள் வீடு வீடாக சென்று விண்ணப்பம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மணிப்பூர் வன்முறை, அத்தியாவசிய பொருள்கள் விலை உயர்வு, பொதுசிவில் சட்டம், வேலையில்லா திண்டாட்டம் உள்பட பல்வேறு பிரச்னைகளை எழுப்ப எதிர்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

டாஸ்மாக் மதுபான கடைகளில் 18 வகையான மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. ரூ. 10 முதல் ரூ. 320க்கும் மேல் இந்த விலை உயர்வானது உள்ளது.


குஜராத்தின் அகமதாபாத் நகரில் அதிவேகமாக வந்த கார் மோதி விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 13 பேர் படுகாயமடைந்தனர்.

--------------------------------------

நயினார் நாகேந்திரன் 

100 கோடி

 சட்டமன்றத் தொகுதியின் பாஜக உறுப்பினரான நயினார் நாகேந்திரனின் மகன் நயினார் பாலாஜி மீது அறப்போர் இயக்கம் நில அபகரிப்பு புகாரைத் சமீபத்தில் தெரிவித்திருந்தது. 

அதாவது, சென்னை, விருகம்பாக்கம் ஆற்காடு சாலையில் உள்ள ரூ.100 கோடி மதிப்பிலான இடத்தை பாஜக எம்எல்ஏ-வான நயினார் நாகேந்திரனின் மகன் பாலாஜி முறைகேடாக தனது பெயரில் பதிவு செய்ய முயன்றதாகத் தெரியவந்தது்.

சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள 1.3 ஏக்கர் நிலத்தை, விதிமீறி ராதாபுரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்ததாகவும், நயினார் நாகேந்திரனின் எம்எல்ஏ பதவியை துர்பிரயோகம் செய்தே இந்தப் பத்திரப்பதிவைச் செய்ததாகவும் தெரிந்தது. குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த விவகாரம் தமிழக அரசியலில் பரபரப்பை கிளப்பி இருந்தது.

இந்நிலையில், நயினார் நாகேந்திரனின் மகன் நயினார் பாலாஜியின் ரூ.100 கோடி மதிப்பிலான பத்திரப்பதிவை ரத்து செய்து உத்தரவிடப்பட்டிருக்கிறது.

ராதாபுரம் மண்டல துணை பத்திரப்பதிவு துறை தலைவர் அதிரடியாக ரத்து செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார். 

மோசடி பத்திரப்பதிவு புகார் விசாரிக்கப்பட்டு உறுதியான நிலையில் பத்திரப்பதிவு அதிரடியாக ரத்து செய்யப்பட்டிருக்கிறது. நயினார் நாகேந்திரனின் மகன் பாலாஜி மாநில பாஜக இளைஞரணி துணைத்தலைவராக உள்ளார் .

முன்னதாகப் , பத்திரப்பதிவு துறையில் நில மாபியா, MLA நயினார் நாகேந்திரன் மகன் நயினார் பாலாஜி மற்றும் பத்திரப்பதிவு, வருவாய் துறை அலுவலர்கள் சேர்ந்து சென்னை ஆர்காட் ரோடு கிட்டத்தட்ட ரூ 100 கோடி சொத்தை மோசடி பத்திரப்பதிவு செய்த ஆதாரங்களை அறப்போர் இயக்கம் புகாராக தலைமை செயலர், சென்னை காவல்துறை, பத்திரப்பதிவு துறை அமைச்சர் மற்றும் செயலர் மற்றும் வருவாய் செயலருக்கு அனுப்பியிருந்தது..

விருகம்பாக்கத்தில் உள்ள இந்த 1.3 ஏக்கர் நிலத்தை மோசடியாக பதிய சம்பந்தமே இல்லாத திருநெல்வேலி ராதாபுரத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நிலத்தை அபகரித்த இளையராஜாவும், BJP கட்சியை சேர்த்த MLA நயினார் நாகேந்திரன் அவருடைய மகன் நயினார் பாலாஜி ஆகிய இருவரும் இணைந்து ஒரு மோசடி ஒப்பந்தத்தை பதிவு செய்கிறார்கள். 

நயினார் நாகேந்திரன் MLA அவர்களின் திருநெல்வேலி MLA பதவி துஷ்பிரயோகம் செய்யப்பட்டு அரசியல் அழுத்தத்தின் காரணமாக இது போல மிகப்பெரிய மதிப்பு உள்ள சென்னை நிலத்தை ராதாபுரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு மற்றும் IPC சட்ட பிரிவுகளை மீறி இது ஆவணம் பதிவு செய்துள்ளார்.

 எனவே நயினார் நாகேந்திரன் MLA அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த அமைப்பு குற்றம்சாட்டி இருந்தது.

அதன் அடிப்படையில் ஆய்வு செய்து இந்த நடவடிக்கை எடுக்கப் பட்டது.முறைகேடான 100 கோடி பத்திரப் பதிவு நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

நயினார் நாகேந்திரன் சொத்துகளை இது போன்று முறைகேடுகள் மூலமே குவித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

--------------------------------------------------------

மணிப்பூர் பெண்களை..

மணிப்பூரில் பெரும்பான்மையாக வசிக்கும் மைதேயி சமூகத்தினர், தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். 

இதற்கு சிறுபான்மை சமூகமான குக்கி பழங்குடியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் இரு சமூகத்துக்கும் இடையே கடந்த மே மாதம் 3 ம் தேதி முதல் மோதல் போக்கு நிலவி வருகிறது.

இது தொடர்பான வன்முறைக்கு இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஏராளமானோர் காயமடைந்துள்ளனர். சுமார் 60-க்கும் மேற்பட்ட வீடுகள் சூறையாடப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. 

வன்முறை சம்பவத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி நிவாரண முகாம்களில் தற்போது தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு தொடர்ந்து பதற்றம் நீடிக்கிறது.

 இந்நிலையில் மணிப்பூர் விவகாரத்தில் ஒன்றிய பாஜக அரசு உரிய நடவடிக்கை எடுக்க தவறி விட்டதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன.

இந்நிலையில் கடந்த மே மாதம் 4ம் தேதி நடந்த மிக கொடூரமான சம்பவம் வெளி வந்தது.

 அதில் மைதேயி சமூகத்தை சேர்ந்த இளைஞர்கள் சிலர் குக்கி பழங்குடி சமூகத்தை சேர்ந்த 2 பெண்களை நிர்வாணமாக்கி இழுத்துச்செல்லும் அதிர்ச்சி வீடியோ சமூக வலை தளங்களில் வைரலானது.

இந்த அதிர்ச்சி காணொலி நாட்டையே உலுக்கியது. வன்கொடுமை, கொலை உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்திருக்கும் போலீசார் , சம்பவம் தொடர்பான விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளைக் கைது செய்ய தீவிர முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக தெரிவித்திருக்கின்றனர். 

இந்த சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஆனால் இதுவரை மணிப்பூரில் நடந்த வன்முறை நிகழ்வுகள் குறித்து இந்திய பிரதமரும் உலக விவகாரங்களை எல்லாம் தீர்த்து வை(ப்பதாக)க்கும் நரேந்திர மோடி எதுவும் பேசவில்லை.ஆறுதல் கூறவில்லை.தனது கட்சி ஆட்சி நடக்கும் மணிப்பூரை  எட்டி கூடப் பார்க்கவில்லை.

இந்திய ராணுவம்,துணைராணுவம் பாதுகாப்பில் இருக்கும் மணிப்பூரில்தான் குக்கி,நாகா பழங்குடியினர் மீது மைதேநி இன குண்டர்கள் தெடர்ந்து கொலை,தீவைப்பு,கற்பழிப்பு,வன்முறைகளை கட்டவிழ்த்து வருகிறார்கள்.

---------------------------------------

செஸ் தினம்

உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் விளையாடும் விளையாட்டாக இருந்து வரும் செஸ் விளையாட்டு, நமது நிஜ வாழ்க்கையில் பல்வேறு பிரதிபலிப்புகளையும் வெளிப்படுத்துகிறது. 

இந்த விளையாட்டின் அடிப்படையாக ராணியை காப்பாற்றும் முயற்சியில் கவனம், சரியான கணிப்புடன் நகர்வுகள் செய்வது ஆகியவற்றுடன் விளையாட்டு மீதான முழு அர்பணிப்பு இருக்க வேண்டும். 

செஸ் விளையாட்டானது நாம் செய்யும் ஒரு நகர்வு, அடுத்து நாம் மேற்கொள்ள இருக்கும் நகர்வுகளை எப்படி பாதிக்கும் என்பதை கற்றுக்கொண்டு அதை மீண்டும் செய்யாமல் இருப்பதை உள்ளடக்கியதாக உள்ளது.

அந்த வகையில் சர்வதேச செஸ் கூட்டமைப்பான ஃபிடே நிறுவப்பட்ட நாளான ஜூலை 20ஆம் தேதி, புத்தி கூர்மையை முன்னிருத்தும் செஸ் விளையாட்டை கொண்டாடும் விதமாகவும், அங்கீகரிக்கும் விதமாக இந்த நாள் கொண்டாடப்படுகிறது.

1924ஆம் ஆண்டில் ஃபிடே உருவாக்கப்பட்டது. உலக செஸ் தினம் கொண்டாடுவது பற்றி யுனெஸ்ட் பரிந்துரைத்த நிலையில் 1966ஆம் ஆண்டு முதல் இந்த நாள் கொண்டாடப்படுகிறது. தற்போது ஃபிடேவில் 181 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளனர்.

உலக செஸ் நாளில் செஸ் விளையாட்டு தொடர்பான நிகழ்வுகளும், போட்டிகளும் உலகம் முழுவதும் நடத்தப்படுகிறது.

 178 நாடுகளில், 605 மில்லியன் செஸ் விளையாட்டு வீரர்களால், செஸ் தினமானது கொண்டாடப்பட்டு வருகிறது. உலக செஸ் தினம், 

இந்த விளையாட்டை உலக அளவில் அனைவரும் அனுகும் விதமான விளையாட்டாக மாற்றுவதில் கவனம் செலுத்த வேண்டும் என்பது இந்த ஆண்டுக்கான கருபொருளாக உள்ளது. 

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?

ரூ360 கோடிகள் வீணா?