TMB வங்கி முறைகேடு
• தூத்துக்குடியைத் தலைமை இடமாகக் கொண்ட தனியார் வங்கி தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி.
ரூ.4,410 கோடி பரிவர்த்தனையை தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி,மறைத்து முறைகேடு செய்துள்ளது வருமான வரித்துறை நடத்திய சோதனையில் அம்பலமாகியுள்ளது.
• குற்றம் சாட்டப்பட்டவர்களை முறையான காரணமின்றி 17 நாட்கள் காவலில் வைத்த அமலாக்க துறை துணை இயக்குனர் மற்றும் பிற அதிகாரிகளுக்கு எதிராக விசாரணை நடத்த இயக்குனருக்கு டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கைது அதிகாரத்தை தன்னிச்சையான முறையில் பயன்படுத்த அனுமதிக்க முடியாது. சட்ட ரீதியான காரணங்கள் இருக்கும் பட்சத்தில், ஒருவர் கைது செய்யப்பட வேண்டும். எந்தவொரு நபரையும் நியாயமான காரணமின்றி காவலில் வைக்க அனுமதிக்க முடியாது என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
• பொது சிவில் சட்டத்திற்கு பா.ஜ.க. கூட்டணியில் உள்ள தேசிய மக்கள் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. நாட்டின் பன்முகத்தன்மை, தனித்துவமான கலாச்சாரத்திற்கு எதிரானது என கருத்து தெரிவித்துள்ளது.
• பதவி விலகப் போவதில்லை என மணிப்பூர் முதலமைச்சர் பைரன் சிங் அறிவித்துள்ளார். காலையில் அமைச்சரவையை கூட்டி பதவி விலகுகிறேன் எனக்கூறியிருந்த நிலையில் திடீரென அதிரடியாக தெரிவித்துள்ளார்.
• அமைச்சரை நீக்கவோ நியமிக்கவோ ஆளுனருக்கு அதிகாரம் இல்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். தமிழக ஆளுனர் ரவி வரம்பு மீறி செயல்படுவதாகவும் அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
• கேரளாவில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு படையைச் சேர்ந்த ஒரு குழு கேரளா விரைந்தனர். ஆலப்புழா, இடுக்கி, கோழிக்கோடு, மலப்புறம், திருச்சூர், வயநாடு, பத்தனம்திட்டா ஆகிய பகுதிகளில் முகாமிட்டு மீட்பு பணிகளை மேற்கொள்ள உள்ளனர்.
• நிலச்சரிவால் ஏற்பட்ட சாலை போக்குவரத்து பாதிப்பில் நோபாளத்தில் ஆயிரக்கணக்கான பயணிகள் சிக்கிக்கொண்டார்கள். நேபாளத்தில் பிரித்வி நெடுஞ்சாலையில் உள்ள நாராயண்காட் - முக்லிங் சாலை நேற்று நிலச்சரிவால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
------------------------------------------
ரூ4410கோடிகள்
TMB முறைகேடு
வருமானவரித்துறையினர் கடந்த செவ்வாய்கிழமை காலை முதல் இரவு வரை தூத்துக்குடியை தலைமையிடமாக கொண்டு செய்லபட கூடிய தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் சோதனை மேற்கொண்டனர்.
சோதனைக்கு பின்னர் வருமானவரித்துறையினர் மெர்கண்டைல் வங்கியில் நடத்தப்பட்ட சோதனை தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
அறிக்கையில் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் 4110 கோடி ரூபாய் மதிப்புள்ள கணக்குகள் காட்டப்படாமல் இருப்பதாக வருமான வரி துறையினர் தெரிவித்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தைத் தலைமை இடமாகக் கொண்டு இயங்கும் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி நாடு முழுவதும் இயங்கி வருகிறது. 546 கிளைகளோடு 21 மாநிலங்களில் இந்த வங்கி இயங்கி வருகிறது.
இந்த வங்கி மீது சில புகார்கள் இருந்துள்ளன.
புகாரி அடிப்படையில் கடந்த 27 மற்றும் 28ஆம் தேதிகளில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தினர்.
சோதனையின் போது அலுவலர்கள் அங்கிருந்து பல முக்கிய ஆவணங்களை எடுத்துச் சென்றுள்ளனர். விசாரணையில், இந்த வங்கியில் 4110 கோடி ரூபாய் மதிப்புள்ள கணக்குகள் இல்லாமல் இருப்பதாக வருமான வரித் துறையினர் தெரிவித்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக டெல்லியில் உள்ள வருமானவரித்துறை அலுவலகம் செய்திக் குறிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது.
அதில், வெளிநாடு பணப் பரிமாற்ற நிறுவனங்கள், வங்கிகள் தங்கள் வாடிக்கையாளரின் ஒவ்வொரு பணப் பரிமாற்றம் தொடர்பான ஆண்டு தகவல் அறிக்கையை அளிக்க வேண்டும்.
ஆனால் இந்த அறிக்கையை சில வங்கிகள் கொடுப்பது கிடையாது.
இது தொடர்பான புகாரின் அடிப்படையில் சமீபத்தில் தமிழ்நாட்டில் ஒரு வங்கியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது அந்த வங்கியின் முதலீடுகள், பணப்பரிவர்த்தனைகள், பங்குத்தொகைகள் என அனைத்திலும் முரண்பாடுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக சில குறிப்பிட்ட நிதி பரிவர்த்தனைகளில் 2700 கோடி ரூபாய் அளவுக்கு நிகழ்ந்த ரொக்க பரிவர்த்தனை தொடர்பான கணக்குகள் முழுமையாகக் காண்பிக்கப்படவில்லை.
ரூபாய் 110 கோடி கடன் அட்டை தொடர்பான பரிவர்த்தனைகள் குறித்து எந்த தகவலும் இல்லை.
200 கோடி ரூபாய் லாப பங்கு தொகை குறித்து எந்த கணக்கும் காட்டப்படவில்லை.
ரூபாய் 600 கோடி வங்கி பங்கு முதலீடு தொடர்பான கணக்குகள் காட்டப்படாமல் உள்ளது. அதே சமயம் பல நிதி பணப் பரிவர்த்தனைகள் குறித்து முழுமையான தகவல்கள் இல்லை.
அதேபோல் வங்கி ஏற்கனவே தாக்கல் செய்த கணக்குகள் பூர்த்தியடையாமல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
பல்வேறு பரிவர்த்தனைகளில் ரூபாய் 500 கோடி அளவுக்கு வட்டி செலுத்தியது தொடர்பான கணக்கையும் காண்பிக்காமல் வங்கி இருந்து வந்துள்ளது.
வெளிநாடுகளில் இருக்கும் இந்த வங்கியில் வாடிக்கையாளர்கள் பற்றிய தகவல்கள் தவறாகக் கொடுக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதுகுறித்து வருமானவரித் துறையினர் அந்த வங்கி நிர்வாகிகளிடம் தொடர்ந்து விசாரணை செய்ய உள்ளதாகத் தெரிகிறது.
--------------------------------------------