பிச்சைக்கார கோடீஸ்வரர்

ஒடிசா பாலசோர் ரயில் விபத்துக்கான சந்தேக நபர்கள் எதிரான ஆதரங்களை அழித்தல், குற்றமற்ற கொலை, (அதாவது உயிரிழப்பு ஏற்படுத்தும் என்று தெரிந்த பின்னரும் அந்த செயலை செய்வது)ஆகிய இரண்டு ஐபிசி பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளது

இதுதொடர்பாக மூன்று ரயில்வே ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டிருக்கும் ஊழியர்களில் அருண் குமார் மஹந்தா மூத்த பிரிவு எஞ்சினியராகவும், முகமது ஆமிர் கான் பிரிவு எஞ்சினியராகவும், பப்பு குமார் தொழிநுட்ப பணியாளராகவும் உள்ளார்கள். இவர்கள் மீது ஐபிசி பிரிவு 304 (ஆதாரம் இல்லாத குற்றமற்ற கொலை), 201 (ஆதரங்களை அழித்தல்) ஆகியவற்றில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மும்பையை சேர்ந்தவர் பாரத் ஜெயின். இவருடைய தொழில் பிச்சையெடுப்பது. மும்பையின் பல தெருக்களில் பிச்சை எடுத்து வருகிறார்.

இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 மகன்கள், ஒரு சகோதரர், அவரது தந்தையுடன் வசித்து வருகிறார்.

இவருடைய மாத வருமானம் சுமார் 60,000 முதல் 75,000 ஆயிரம் வரை இருக்கும் என கூறப்படுகிறது.

 சுமார் 1.5 கோடி மதிப்புள்ள 2 பெட்ரூம் பிளாட் ஒன்று மும்பையில் சொந்தமாக உள்ளது. 

தானே பகுதியில் இவருக்கு சொந்தமாக 2 கடைகள் உள்ளது. அதன் வாடகையாக மட்டுமே மாதம் 30,000 ரூபாய் வருகின்றது.

இன்றைய கணக்குப்படி இவரது சொத்து மதிப்பு சுமார் 7.5 கோடி ரூபாய் .

இவருக்கு கணக்கில் வராமலும் பல சொத்துகள் இவருடைய குடும்பத்தினர் பெயர்களில் உள்ளதாம்.வருமாவரி கணக்கில் இவர் வரமாட்டாதகவல்.

பழனிசாமிக்குஎதிரானரூ.4,800கோடிமதிப்பிலான முறைகேடு.புதிதாக விசாரிக்க ஊழல் தடுப்பு ஆணையர் ஒப்புதல் என தமிழக அரசு தகவல்.

முதல்வராக பதவி வகித்த பழனிசாமியின் கட்டுப்பாட்டில் இருந்த நெடுஞ்சாலைத் துறையில் ரூ.4,800 கோடி மதிப்பிலான ஒப்பந்தப் பணிகளில் மிகப்பெரிய அளவில் முறைகேடுகள் நடந்துள்ளன.

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் “வேளாண் வணிகத் திருவிழா 2023-ஐ இன்று முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று திருச்செந்தூர் செல்கிறார்.

பொதுவிநியோக திட்ட மக்கள் தொடர்பு முகாம் தமிழகம் முழுவதும் இன்று நடக்கிறது.

ஆர்.என்.ரவி (ஆளுநர் ) சென்னையில் இருந்து நேற்று மாலை புறப்பட்ட நிலையில் இன்று டெல்லி சென்றுள்ளார். அங்கு ஒரு வாரம் தங்கியிருப்பார் எனக் கூறப்படுகிறது.

மணிப்பூர் மாநிலம் உக்ருல் மாவட்டம் அருகே 3.3 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. மணிப்பூரின் உக்ருல் மாவட்டம் அருகே இன்று நள்ளிரவு சுமார் 12:14 மணியளவில் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் 70 கிலோமீட்டர் ஆழம் வரை இருந்தது.

---------------------------------------

பொய் ஆளுமை.

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்குகளை விசாரிப்பதற்கான நீதிமன்றங்கள் அமைப்பதற்கு அனுமதி, நீண்ட கால நிலுவை மற்றும் மசோதாக்களுக்கான ஒப்புதல் தொடர்பாக தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு நேற்று கடிதம் எழுதியிருந்தார்.

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்குகளை விசாரிப்பதற்கான நீதிமன்றங்கள் அமைப்பதற்கு அனுமதி, நீண்ட கால நிலுவை மற்றும் மசோதாக்களுக்கான ஒப்புதல் தொடர்பாக தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு நேற்று கடிதம் எழுதியிருந்தார்.

அதில், “அதிமுக முன்னாள் அமைச்சர்களான சி. விஜயபாஸ்கர் மற்றும் பி.வி.ரமணா ஆகியோர் மீதான வழக்கு விசாரணையை தொடங்குவதற்கு சிபிஐ இசைவு ஆணையை கோரியது.

மாநில அமைச்சரவையும் அந்த இசைவு ஆணை கோரும் சி.பி.ஐயின் கோரிக்கையை ஆளுநர் அலுவலகத்துக்கு 12.09.2022 அன்று அனுப்பியது. ஆனால், ஆளுநர் மாளிகையில்  இருந்து இதுவரையில் அந்த கடிதம் தொடர்பாக எவ்வித பதிலும் கிடைக்கவில்லை.

அதேபோல், அதிமுக முன்னாள் அமைச்சர்களான கே.சி.வீரமணி மற்றும் எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோர் மீது நீதிமன்ற விசாரணையை தொடங்கிட இசைவு ஆணை கோரி அதற்கான கடிதங்கள் முறையே 12.09.2022 மற்றும் 15.05.2023 ஆகிய தேதிகளில் ஆளுநர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டன. இவற்றுக்கும் எந்த பதிலும் வரவில்லை” என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த கடிதத்துக்கு பதிலளித்த ஆளுநர் மாளிகை, முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா ஆகியோர் மீதான வழக்குகளை சிபிஐ விசாரித்து வருவதாகவும், அந்த ஆவணங்கள் சட்ட பரிசீலனையில் உள்ளதாகவும் தெரிவித்தது.
மேலும், முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி மீதான வழக்கில் முறையாக அங்கீகரிக்கப்பட்ட விசாரணை அறிக்கையின் நகலை சமர்ப்பிக்கவில்லை என்றும், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழக்கு தொடர்பாக மாநில அரசிடம் இருந்து எந்த கோரிக்கை மனுவோ, கடிதமோ வரவில்லை எனவும் ஆளுநர் மாளிகை அளித்த பதிலில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்கு தொடர்பாக ஆளுநர் மாளிகைக்கு தமிழக அரசு அனுப்பிய கோப்புகளை பெற்றுக் கொண்டு ஆளுநர் மாளிகை அளித்த ஒப்புகை சீட்டுகள் வெளியாகி உள்ளன.

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி ஊழல் வழக்கு விசாரணையின் கோப்புகளை தமிழ்நாடு அரசு வழங்கவில்லை எனவும், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஊழல் வழக்கு குறித்து விசாரணை நடத்துவதற்கான இசைவாணையே தமிழ்நாடு அரசு கோரவில்லை எனவும் ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியிருந்த நிலையில், அந்த கோப்புகளை ஆளுநர் மாளிகை பெற்றுக் கொண்டதற்கான ஒப்புகைச் சீட்டுகள் வெளியாகியுள்ளன.

கோப்பை பெற்றுக்கொண்டு, பெற்றுக் கொண்டதற்கான ஒப்புதல் கையெழுத்தும் போட்டுவிட்டு அறிக்கை கிடைக்கவில்லை என்று கூறுவது ஆளுநர் அலுவலகத்திற்கு அழகல்ல என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நேற்று கூறியிருந்த நிலையில், அதனை ஆளுநர் மாளிகை பெற்றுக் கொண்டதற்கான ஒப்புகைச் சீட்டுகள் வெளியாகியுள்ளன.
அதன்படி, முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்கு தொடர்பாக கடந்த 2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 12 ஆம் தேதி மற்றும் நடப்பாண்டு மே மாதம் 15ஆம் தேதி ஆளுநர் மாளிகைக்கு தமிழக அரசு அனுப்பிய கோப்புகளை பெற்றுக் கொண்ட ஆளுநர் மாளிகை, அதற்கான ஒப்புகை சீட்டும் அளித்துள்ளது.

அந்த ஒப்புகை சீட்டுகள் தற்போது வெளியாகி ஆர்.என்.ரவி தனது பதவிக்கு களங்கம் உருவாக்கும் வகையில் பலச் செயல்கள் இதுவரை செய்து வந்து கொண்டிருந்தாலும் தற்போது உச்சமாக ஆளுநர் பதவிக்குரிய கண்ணியத்தை சிதைத்து அசிங்கப் படுத்தும் அளவிற்கு சென்று பொய்களைக் கூற ஆரம்பித்துவிட்டார் என பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
--------------------------------------------


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?