பொன்முடி அமுலாக்கத்துறை

மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்துக்கு முதல் நாளே படையெடுத்த மக்கள் கூட்டம். 3,658 பேர் வந்ததாக வரவேற்பறை பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


• தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாருடன் அஜித்பவார் மற்றும் பிரபுல் பட்டேல் திடிரென சந்தித்துள்ளனர். சேர்ந்து செயல்பட கோரிக்கை வைத்துள்ளதாக தெரிவித்தனர்.

ஓய்வுபெற்ற நீதிபதி சத்யதேவ் பெயரில் தனியார் சட்ட அகாடமியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். சட்ட மாணவர்களுக்கு வழிகாட்டும் வகையிலான முன்னெடுப்பாக இது கருதப்படுகிறது.

• நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த காங்கிரஸ் ஒருங்கிணைக்கும் 2 நாள் கூட்டம். நிகழ்வில் பங்கேற்க இன்று பெங்களூரு செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

டெல்லி தொடர்பான மத்திய அரசின் அவசர சட்டத்திற்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவிக்கிறது. ஆம்ஆத்மி கோரிக்கை ஏற்கப்பட்டதால், எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் பங்கேற்கிறார் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்

சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா சமாதி அருகே கலைஞர் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்தில், அவருக்கு நினைவிடம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

 நினைவிடத்தின் பின்புறம் வங்கக்கடலில் பேனா வடிவில் நினைவு சின்னம் அமைக்க அரசு நடவடிக்கை எடுத்தது. 

கடற்கரையில் இருந்து 748 மீட்டர் தூரம் பாலம் அமைத்து, 134 அடி உயரத்தில், ரூ.81 கோடியில் நினைவு சின்னம் அமைக்க அரசு முடிவெடுத்து, தமிழக கடலோர மேலாண்மை ஆணையத்தின் அனுமதியை பெற்றது.

இதையடுத்து, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின்கீழ் உள்ள கடலோர மண்டல ஒழுங்குமுறை ஆணையத்தின் அனுமதியை கோரியது.

நினைவு சின்னம் அமைக்க பல்வேறு நிபந்தனைகளுடன் மத்திய ஆணையம் அனுமதி வழங்கியது.
 இதையடுத்து, அடுத்தகட்ட பணிகளை தமிழக பொதுப்பணி துறை தொடங்கியது. நினைவிடத்தில் பணிகள் நடப்பதை முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் 2 முறை பார்வையிட்டு ஆலோசனை நடத்தினார்.

இந்த சூழலில், வங்கக்கடலில் பேனா சின்னம் அமைக்கும் முடிவை தமிழக அரசு, குறிப்பாக முதல்வர்மாற்றிக் கொண்டுள்ளதாகவும், கருணாநிதி நினைவிடத்திலேயே சிறிய அளவில் பேனா சின்னம் அமைக்க அவர் முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியானது. 

தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினை, மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்திர யாதவ் கடந்த 14-ம் தேதி சந்தித்து பேசிய நிலையில் இத்தகவல் வெளியாகி உள்ளதால், அந்த சந்திப்பில் இதுபற்றி ஆலோசனை நடந்திருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது. 

எனினும், இதுபற்றி அரசு தரப்பிலோ, பொதுப்பணி துறை தரப்பிலோ எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியிடப்படவில்லை.

---------------------------------------------------------

பொன்முடி அமுலாக்கத்துறை

தமிழ்நாடு உயர்கல்வி அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான இடங்களில் காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியில் உள்ள அமைச்சரின் வீடு, அலுவலகம் மற்றும் விழுப்புரத்தில் உள்ள அவரது வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது. 

பொன்முடியின் மகனும், கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான கௌதம் சிகாமணியின் வீட்டிலும் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. துணை ராணுவப்படையினரின் உதவியுடன் 7 பேர் கொண்ட குழு, சென்னையில் உள்ள அமைச்சரின் வீட்டில் சோதனை நடத்தி வருகின்றனர். 

சென்னையில் மட்டும் அமைச்சருக்கு சொந்தமான 5 இடங்களிலும், அவருக்கு சொந்தமான சூர்யா கல்வி குழும கல்லூரிகளிலும் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.

----------------------------------------

(டுவிட்டர்) சுட்டி த்தகவல்கள்


படிக்கச் சொன்னார் காமராசர்

குடிக்கச் சொன்னார் கலைஞர்


கல்விக் கண் திறந்த காமராசர்


சத்துணவு போட்டார் எம்.ஜி.ஆர்.

உண்மை?

கல்விக் கண் திறந்தவர் காமராசர்.


@: கொஞ்சம் இங்க வாப்பா. நீதிக் கட்சி எத்தனை பள்ளிக்கூடம் திறந்தாங்க?

12500 ங்க.


@: ராஜாஜி எத்தனை பள்ளிக்கூடங்களை மூடினாரு?

: 8500 ங்க


@: காமராசர் எத்தனை பள்ளிக்கூடங்களை திறந்தாரு?

: 6000 ங்க


ஏன்டா ராஜாஜி அரசு மூடின பள்ளிக் கூடங்களையே முழுசா திறக்கல. 2500 பாக்கி.

இவருதான் கல்விக்கண் திறந்தாரா?


இன்னொரு தகவல் நீதிக் கட்சி ஆட்சிக் காலத்துலயே பள்ளிக்கூடத்துல சோறு போட்டாங்க.

டாஸ்மாக்கை கொண்டு வந்தவர் எம்.ஜி.ஆர்.

முழுசா வரலாற்றைப் படிங்கடா.அரசியலுக்காக சொல்ற பொய்களையே புடுச்சி தொங்காதீங்க.

-----------------------------------------


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?

ரூ360 கோடிகள் வீணா?