நோக்கம் நிறைவேறாமல் தண்டனையா?

 பொது சிவில் சட்டத்தை கைவிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். சமூகத்தின் பல்வேறு சமூகக்கட்டமைப்புகளுக்கு சவால் விடும் வகையில் இருப்பதாகவும் குற்றச்சாட்டு.

சென்னையில் உள்ள 14 அமுதம் அங்காடிகள் மற்றும் அமுதம் நியாய விலைக் கடைகளில் இன்று முதல் துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு மற்றும் தக்காளி ஆகியவை கொள்முதல் விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.

தமிழ்நாட்டில் இன்று முதல் 19ஆம் தேதி வரை மழைக்கு வாய்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இமாச்சலில் வெள்ளம் வடிந்தும் இயல்பு நிலை திரும்பாததால் மக்கள் அவதி. உணவு, தண்ணீரின்றி தவிக்கும் மக்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் விநியோகம் செய்யப்படுகிறது.

சந்திரயான்-3 விண்கலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து (இன்று) ஜூலை 14ஆம் தேதி விண்ணில் ஏவப்படுகிறது.

  • மாநகராட்சி மேயர், நகராட்சி தலைவர்களுக்கு மதிப்பூதியம் வழங்கப்படும் - முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு.
  • விலைவாசி உயர்வை கண்டித்து ஜுலை 20ம் தேதி தமிழகம் முழுவதும் கண்டன ஆர்பாட்டம் - அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
  • பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு ஜுலை 22ம் தேதி தொடங்கும் - நடப்பாண்டு இரண்டு புதிய படிப்புகள் அறிமுகம் செய்யப்படுவதாக அமைச்சர் பொன்முடி அறிவிப்பு
  • தென்காசி தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை - காங்கிரஸ் வேட்பாளர் பழனி .. வெற்றி என அறிவிப்பு.
  • ----------------------------------
  • நோக்கம் நிறைவேறாமல் தண்டனையா?

 ரோம் நகரில் உள்ள பள்ளியில் ஏப்ரல் மாதம் 17 வயது சிறுமியை அந்த பள்ளியின் காப்பாளராக பணியாற்றக் கூடிய ஒருவர் பாலியல் தொந்தரவு செய்துள்ளார்.

படிக்கட்டில் அந்த சிறுமி ஏறிக் கொண்டிருந்த பொழுது பின்னால் இருந்து கொண்டு அவரது பேண்டை கீழே இழுத்துள்ளார்.

அவரது பின்பகுதியை தொட்டது மட்டுமல்லாமல் உள்ளாடையை பிடித்ததாக பள்ளிக் காப்பாளர் மீது புகார் கொடுக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்த போது, சிறுமியை பிடித்து இழுத்ததை அந்த நபர் ஒப்புக்கொண்டார்.

 நான் இதை வேடிக்கையாக தான் செய்தேன் எனப் பதில் சொன்னார்.

சிறுமியிடம் தவறான முறையில் நடந்து கொண்ட பள்ளிக்காளருக்கு மூன்றரை ஆண்டுகள் சிறை தண்டனை வழங்க வேண்டும் என அரசு தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் வாதாடினார். 

இந்த வழக்கு விசாரணை சமீபத்தில் முடிவடைந்து தீர்ப்பு வழங்கப்பட்டது.

குற்றம் சாட்டப்பட்ட பள்ளிக்காப்பாளரை விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார். அதற்கு நீதிபதி சொன்ன காரணம் அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அதாவது நீதிபதி, இந்த சம்பவம் 10 வினாடிகளுக்கும் குறைவாக நடந்துள்ளது. 10 வினாடிகளுக்கும் குறைவாக நடந்துள்ள காரணத்தினால் குற்றத்திற்கான அளவுகோல் சரியான முறையில் பூர்த்தி ஆகவில்லை,அவருடைய நோக்கமும் நிறைவேறவில்லை. எனவே அவருக்கு விடுதலை வழங்கப்படுகிறது என தீர்ப்பு வழங்கினார்.

இந்த தீர்ப்பு, இத்தாலியில் மட்டுமல்ல உலகெங்கும் இருக்கக்கூடிய மக்களிடையே கடும் அதிர்ச்சி மற்றும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தற்போது இந்த நீதிபதியின் தீர்ப்பை விமர்சனம் செய்து பல்வேறு விதமான கருத்துக்கள் சமூக வலைதளங்களில் உலா வருகின்றன.

இந்தியாவிலும் குஜராத்,அலகாபாத் போன்ற பா.ஜ.க.ஆளும் மாநிலங்களிலு இப்படி ஏடாகூடமாகத்தான் நடக்கிறது.

----------------------------------------------------




இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?