சட்ட விரோதம்
• மக்களவைத்தேர்தல் வர இருப்பதால், காவல்துறை எச்சரிக்கையுடன் நடந்துகொள்ள வேண்டும் என்றும், சட்டம் ஒழுங்கு பிரச்னைகளுக்கு ஆரம்பத்திலேயே முடிவு கட்ட வேண்டும் என்றும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
• அதிமுகவில் இருந்து நீக்கி வைக்கப்பட்டவர்கள் மன்னிப்புக் கடிதம் கொடுத்தால் மட்டுமே மீண்டும் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள் என அதிமுக பொதுச்செயலாளராக தேர்தல் ஆணையம் அங்கீகரித்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை.
• விதிமீறல் இருந்தால் அமலாக்கத் துறை அதிகாரிகளை கூண்டில் ஏற்றி, இழப்பீடு பெறலாம் என அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் ஆட்கொணர்வு வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு .
• தூத்துக்குடியில் நகைகளை அடமானம் வைத்து பங்குச்சந்தையில் முதலீடு செய்வதாக மோசடி நடைபெற்றுள்ளது. பொதுமக்களிடம் 500 சவரன் நகைகளை வாங்கி அடகு வைத்த 2 பெண்கள் உள்பட 3 பேர் கைது .60 பவுன் நகைகள் மட்டுமே மீட்பு.
• கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களை ஆய்வுக்கு அனுப்பக்கோரி சிபிசிஐடி மனு கொடுத்துள்ளது. இதுவரையிலான விசாரணை குறித்து அறிக்கை கொடுக்க சிபிசிஐடி போலீசார் முடிவு.
• மேற்கு வங்க தேர்தலில் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் அதிக இடங்களில்வெற்றி . வாக்கு எண்ணிக்கையின்போதும் கலவரம்.
• ஜிஎஸ்டி அமைப்பு, அமலாக்கத்துறையிடையே தரவு பரிமாற்றத்திற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஆன்லைன் விளையாட்டுகளுக்கான ஜிஎஸ்டி விதிப்பு சூதாட்ட தடை சட்டத்தை பாதிக்க கூடாது என வலியுறுத்தல்.
• அமலாக்கத்துறை இயக்குனராக மீண்டும்,மீண்டும் மிஸ்ராவுக்கு பதவி நீட்டிப்பு வழங்கியது சட்ட விரோதம் என ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் .மிஸ்ரா இம்மாதம் கடைசி வரை மட்டுமே பதவியில் நீட்டிக்கலாம் எனவும் ஆணை.
இன்று ஒன்றியய அமைச்சரவை கூட்டம் . வரும் தேர்தல்களுக்காக அமைச்சரவையல் மாற்றம் செய்வது குறித்து ஆலோசனை.
--------------------------------------
அமுலாக்கம்.
ஒன்றிய அரசின் கீழ் இயங்கும் முக்கியத்துவம் வாய்ந்த புலனாய்வு அமைப்புகளில் ஒன்றாக உள்ளது அமலாக்கத்துறை இயக்குநரகம். பணமோசடி, அந்நியச் செலாவணி மீறல்கள் மற்றும் நிதி குற்றங்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் அதிகாரம் அமலாக்கத்துறைக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஆனால், இந்த அமைப்பின் மூலம் பாஜக அரசு, எதிர்க்கட்சிகளை மிரட்டப்படுவதாக தொடர் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இந்த சூழ்நிலையில், அமலாக்கத்துறை இயக்குநரக தலைவராக உள்ள எஸ்.கே.மிஸ்ராவின் பதவிக்காலத்தை மூன்றாவது முறையாக மத்திய அரசு நீட்டித்தது.
இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. தற்போது, அதில் முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.எஸ்.கே.மிஸ்ராவின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டது சட்டவிரோதமானது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இருப்பினும், ஜூலை 31ஆம் தேதி வரையில், அந்த பதவியில் தொடர அவருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அமலாக்கத்துறைக்கு புதிய தலைவரை தேர்வு செய்யுமாறு மத்திய அரசை உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. கடந்த 2021ஆம் ஆண்டு வழங்கப்பட்ட தீர்ப்பை மீறும் விதமாக எஸ்.கே.மிஸ்ராவின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது என்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
எஸ்.கே.மிஸ்ராவின் பதவிக்கால நீட்டிப்பை நிறுத்தி வைத்த உச்ச நீதிமன்றம், "சட்டத்தை மாற்றுவதற்கு மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளது. அதைச் செய்வது அவசியம் என்று உயர் அதிகாரம் கொண்ட குழு முடிவு செய்தால் மட்டுமே நீட்டிப்பு வழங்க முடியும். பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், தலைமை நீதிபதி நியமிக்கும் ஒருவர் அடங்கிய குழுவால் மட்டுமே நீட்டிப்பு வழங்க முடியும்.
லாக்கத்துறை இயக்குநருக்கு வழங்கப்பட்ட நீட்டிப்பு உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மீறுவதாக உள்ளது. கடந்த 2021ஆம் ஆண்டு வழங்கிய தீர்ப்பில், மிஸ்ராவுக்கு மேலும் பதவி நீட்டிப்பு வழங்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது" என தெரிவித்தது.
எஸ்.கே.மிஸ்ராவுக்கு வழங்கப்பட்ட பதவிக்கால நீட்டிப்பை எதிர்த்து காங்கிரஸ் மூத்த தலைவர்களான ஜெயா தாக்கூர், ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் சாகேத் கோகாய் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர்.
நவம்பர் 2021 இல், மிஸ்ரா ஓய்வு பெறுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு, இரண்டு அவசரச் சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்தது. அதன்படி, அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ இயக்குநர்களின் பதவிக்காலத்தை ஓராண்டுக்கு நீட்டிக்கும் மத்திய அரசின் அதிகாரம் வலுப்படுத்தப்பட்டது. நவம்பர் 2022 இல், மிஸ்ராவின் பதவிக்காலம் மீண்டும் ஒருமுறை நீட்டிக்கப்பட்டது. இதற்கு எதிராக, மனுதாரர்கள் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை நீதிபதிகள் பி.ஆர். கவாய், விக்ரம் நாத் மற்றும் சஞ்சய் கரோல் ஆகிய நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்து, தற்போது தீர்ப்பு வழங்கியுள்ளது.
கடந்த 2018ஆம் ஆண்டு, நவம்பர் மாதம், அமலாக்கத்துறை தலைவராக எஸ்.கே.மிஸ்ரா நியமிக்கப்பட்டார். அமலாக்கத்துறை தலைவரின் பதவிக்காலம் 2 ஆண்டுகளாகும். அதன்படி, 2020ஆம் ஆண்டு நவம்பர் மாதம், அவர் ஓய்வு பெறவிருந்தார். ஆனால், அவருக்கு மேலும் ஓராண்டு பதவிக்கால நீட்டிப்பு வழங்கி மத்திய அரசு உத்தரவிட்டது.
அரிதான மற்றும் விதிவிலக்கான வழக்குகளில் மட்டுமே நீட்டிப்புகள் வழங்கப்பட வேண்டும் என்பதால், மிஸ்ராவை மேலும் நீட்டிக்க வேண்டாம் என உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது.
---------------------------------------
மக்கள் கலைஞர்
மிகப்பெரிய வக்கீல் குடும்பத்தைச் சேர்ந்த இவருக்கு நடிப்பதில் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. தமிழ் சினிமா எடுக்கும் கம்பெனிகளுக்கு நடையாய் நடந்த இவருக்கு வாய்ப்பு கொடுத்தவர் இயக்குநர் ஜோசப் தளியத். இரவும் பகலும் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் ஜெய்சங்கர்.
பஞ்சவர்ணக்கிளி என்ற திரைப்படத்தின் மூலம் தனது வித்தியாசமான கதாபாத்திரத்தை வெளிப்படுத்தினார். குழந்தையும் தெய்வமும் என்ற திரைப்படத்தின் மூலம் பெண்களுக்கு மிகவும் பிடித்த நாயகனாக மாறினார்.
இவரது சுறுசுறுப்பான நடிப்பைக் கண்டு கொண்ட மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனம் இவரை மாதச் சம்பளத்திற்கு பணியமர்த்தி அடுத்தடுத்த படங்கள் வெளியிட்டன.
தமிழ் சினிமாவின் ஜேம்ஸ் பாண்ட் ஆக வல்லவன் ஒருவன் சிஐடி சங்கர் என்ற திரைப்படத்தின் மூலம் வசூல் சக்கரவர்த்தியாக மாறினார்.
தமிழ் சினிமா கத்தி சண்டை போட்டுக் கொண்டிருந்த காலத்தில் துப்பாக்கிச் சத்தத்தைத் திரையில் காட்டியவர் இவர்தான். எம்ஜிஆர் மற்றும் சிவாஜி இருவரும் காவல் அதிகாரியாகப் பணம் செய்வதற்கும் முக்கிய காரணம் இவர்தான்.
ஒருபக்கம் காவல் அதிகாரி திரைப்படங்கள், மற்றொரு பக்கம் குடும்ப கதைகள், இதற்கு இடையில் காமெடி படங்கள் என தமிழ் சினிமாவை ரவுண்டு கட்டி அடித்தார் ஜெய்சங்கர்.
நூற்றுக்கு நூறு என்ற பாலச்சந்திரன் திரைப்படத்தின் மூலம் மிகச் சிறந்த நடிகர் என்று பெயரைப் பெற்றார்.
பெரிய நடிகர்களுக்குப் பெரிய சம்பளம் கொடுக்க முடியாத தயாரிப்பு நிறுவனங்கள் எல்லாம் ஜெய்சங்கரை வைத்து படம் எடுத்தனர்.
அப்படிஎத்தனையோபடங்கள்நடித்திருக்கிறார் ஜெய்சங்கர்.
காலங்கள் வளர வளர அடுத்த தலைமுறையினர் சினிமாவை ஆட்சி செய்த காலத்தில் அதனை விட்டு ஒதுங்காமல் வில்லன் நடிகராக புது அவதாரம் எடுத்தார். முரட்டுக்காளை திரைப்படத்தில் சிறந்த வில்லனாக நடித்து தனது கதாபாத்திரத்தை நிரூபித்து இருப்பார். அபூர்வ சகோதரர்கள் படத்தில் வில்லனாக நடித்திருப்பார்.
சிபிஐ அதிகாரி, சிஐடி, கௌபாய் என பல்வேறு விதமான திரைப்படங்களில் நடித்து தென்னகத்து ஜேம்ஸ் பாண்ட் என மக்களால் அழைக்கப்பட்டார்.
ஆகச் சிறந்த நடிகரா என்று கேள்வி இருந்தாலும், ஜெய்சங்கர் தமிழ் சினிமாவின் தனித்துவமான நடிகர்தான் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது.
இந்த தென்னகத்து ஜேம்ஸ் பாண்டின் 85 ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.
---------------------------------