ஆர்.என்.ரவி வழக்கு.

 சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், நீலகிரி, கோவை ஆகிய 8 மாவட்டங்கல் இன்று கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தக்காளி விலை ரூ. 10 உயர்ந்து, சில்லறை வணிகத்தில் ரூ.120 - ரூ.130 வரை விற்பனையாகிறது. தக்காளியின் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால், வரத்து குறைந்து விலை தொடர்ந்து அதிகரிப்பதாக கூறப்படுகிறது. இதற்குபதிலாக ஆப்பிளை உபயோகிக்கலாம்.அது கிலோ 100 ரூபாய்க்கு கிடைக்கிறது.

 நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்,வரும் 20ம் தேதி தொடங்குகிறது.பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் கூட்டத்தொடர் துவங்கி புதிய கட்டிடத்திற்கு மாற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

----------------------------------------

என் உத்திரவையா நிறுத்தினீர்கள்.?

போடு வழக்கு!

செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க ஆளுநர் உத்தரவிட்டிருந்ததை தொடர்ந்து, அது நிறுத்தி வைக்கப்பட்டது. ஆளுநரின் உத்தரவை மீறி, செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்வார் என தமிழக அரசு அறிவித்தது.

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை புகாரில் அமலாக்கத்துறை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்துள்ளது. 

இதை தொடர்ந்து, நெஞ்சுவலி ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவருக்கு 2வது முறையாக நீதிமன்ற காவல் விதித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை புகாரில் அமலாக்கத்துறை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்துள்ளது. இதை தொடர்ந்து, நெஞ்சுவலி ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவருக்கு 2வது முறையாக நீதிமன்ற காவல் விதித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், செந்தில் பாலாஜி பொறுப்பு வகித்து வந்த மின்சார துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்துறை ஆகிய இரண்டு துறைகளையும் அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும், அமைச்சர் முத்துசாமிக்கும் தமிழக அரசு ஒதுக்கியுள்ளது.

இந்நிலையில், செந்தில்பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கிய ஆர்.என். ரவியின் உத்தரவுக்கு, அமைச்சரவை நியமிப்பது, நீக்குவது என எடுத்த முடிவை எடுப்பதற்கு, முதலமைச்சரான தனக்கு மட்டுமே உரிமை உள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் அனுப்பினார்.

இதனால், தனது உத்தரவை நிறுத்தி வைத்ததற்காக ஆளுநர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். வழக்கறிஞர் எம்.எல்.ரவி தாக்கல் செய்த இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

---------------------------------------

 உடல் தரும் வியப்பு.

31. உங்களது தகவல் நரம்புகளில் தகவல்கள் மணிக்கு 400 கி.மீ. வேகத்தில் கடக்குமாம்.

32. ஒருவரது வாழ்க்கையில் சராசரியாக 300 கோடி முறை இதயம் துடிக்குமாம்.

33. உங்களது இடது பக்க நுரையீரல் வலது பக்க நுரையீரலை விட 10 சதவீதம் சிறியது.


34. மனிதர்களின் பற்கள் ஒரு சுறா மீனுடைய பற்களுக்கு இணையான வலுவானவையாம்.

35. மனிதர்களின் மூக்கு 3 லட்சம் வித்தியாசமான வாசனைகளை நுகரும் திறன் வாயந்தது என்று மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

36. ஒரு மனிதரின் உடலில் 8 சதவீதம் ரத்தம் அடங்கியிருக்குமாம்.

மனிதர்களின் கைரேகைகள் போலவே அவர்களது நாக்கின் ரேகையும் தனித்துவமானதாம்.

37. ஒரு குழந்தையின் ரத்தக்குழாய்கள், நரம்புகள், நுண்ரத்தக்குழாய்களை விரித்துவிட்டால் சுமார் 60 ஆயிரம் மைல்கள் இருக்குமாம். அதேபோல் வளர்ந்த மனிதர்களின் ரத்தக்குழாய்கள், நரம்புகள், நுண்ரத்தக்குழாய்கள் சுமார் 1 லட்சம் மைல்கள் இருக்குமாம்.

38. புஞ்சைகள் ஒரு மனிதரின் மூளையைக் கட்டுப்படுத்தி கொடூரமான காட்டுமனிதராக ஆட்டிப்படைக்கும் சக்தி வாய்ந்தனவாம்.

39. உங்கள் உடல் பருவம் எய்தியபின் வளர்ச்சி நின்ற பிறகும் உங்களது காதுகள், மூக்கு வாழ்நாள் முழுவதும் வளர்ந்து கொண்டே இருக்குமாம். இதற்கு காரணம் புவியீர்ப்பு விசை என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

40. உங்கள் கண்களில் மேல்புறம் உள்ள கார்னியா படலத்துக்கு எந்த ரத்த விநியோகமும் கிடையாது. இதனால் அது நேரடியாக காற்றிலிருந்து பிராணவாயுவைப் பெறுகிறது.

------------------------------------------------------தொடர்வோம்


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?

ரூ360 கோடிகள் வீணா?