பாகிஸ்தான் அணு ஆயுதக் குவியல்


இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தான் தனது அணு ஆயுதங்களை இரு மடங்காக குவி்த்து வைத்துள்ளது என்றும், கடந்த 4 வருடங்களில் 30- 80 வகையான ஆயுதங்களை கொள்முதல் செய்து வைத்துள்ளதாக அமெரிக்க பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின் வாஷிங்டன்போஸ்ட் எனும் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியி்ல் கூறியிருப்பதாவது: அமெரிக்காவின் அரசுசாரா அமைப்பான சர்வதேச பாதுகாப்பு மற்றும் அறிவியல் மையத்தின் தலைவர் டேவிட் அல்பிரைட் என்பவர் கூறுகையில், பாகிஸ்தான் தற்போது தனது அணு ஆயுதங்களை இருமடங்கு அதிகரித்து கொள்முதல் செய்து வைத்துள்ளது. இதில் 110 வகையான யுரேனியம், புளூட்டோனியம் அடிப்படையிலான அணுஆயுதங்களையும், வெடிகுண்டுகளையும் இருப்புவைத்துள்ளது. 1500 கி.மீ.தூரம் சென்று இலக்கை தாக்கும் ஷகாஹீன் -2 எனும் ஏவுகணையினை தயாரித்து சோதனை செய்யவுள்ளது. இவை அனைத்தும் இந்தியாவிற்கு எதிராக ஆயுதப்போட்டியில் இறங்கவும், இத்தகைய ஆயுதங்களை கொண்டு இந்தியாவை போர்முனையில் நிறுத்தவும் தயாராகி வருகிறது. ஏற்கனவே தெற்காசிய பிராந்தியத்தில் பயங்கரவாத அச்சுறுத்தல் அதிகரித்துவிட்டதாக அமெரிக்க கவலையடைந்து வருகிறது. அதிலும் பாகிஸ்தானின் இந்த ஆயுத குவிப்பு பயங்கரவாதிகளின் கைகளில் சிக்கி விடுமோ என்ற பீதியும் ஏற்பட்டுள்ளதாகவும் அந்த பத்திரிகையில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 2008-ம் ஆண்டு தெற்காசிய நாடுகளுக்கான அமெரிக்க புலனாய்வு அதிகாரி பீட்டர் லவோயி, நேட்டோ ராணுவ அதிகாரிகள் மத்தியில் கூறுகையில், உலகில் மற்ற நாடுகளை விட பாகிஸ்தான் அணு ஆயுதங்களை வேகமாக உற்பத்தி செய்வதில் ஆர்வம் காட்டி வருகிறது என்றார்.
       அவர் அடைந்துள்ள கவலை நமக்கு மிக்கவியப்பை தருகிறது.பாகிஸ்தான்
 இப்படி அணுஆயுதம் குவிக்க உதவுவதே அமெரிக்க அரசுதானே.அது கொடுக்கும் உதவித்தொகைத்தானே. தொழில் நுட்ப உதவியும் செய் வதே
 அமெரிக்க அரசுதானே.தாலிபான் ஒழிப்பு பெயரால் இவை லவோயிக்கு
 தெரியாமல் போகுமா,?

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?