ருமேனியாவில் தற்போதுள்ள முதலாளித்துவ ஆட்சியைக் காட்
டிலும் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியி
லிருந்தபோது வாழ்க்கைத்தரம் சிறப்பாக இருந்ததாக சமீபத்தில் நடத்தப்பட்ட கருத்து வாக்கெடுப்
பில் பெரும்பான்மையானவர்கள் தெரிவித்துள்ளனர். இதில் பங்
கெடுத்தவர்களில் பெரும்பான்
மையோர் கம்யூனிச சிந்தனையை ஆமோதிக்கின்றனர், 60 சதவிகிதம் பேர் கம்யூனிசம் நல்ல சிந்தனை என்று தெரிவித்துள்ளனர். 4 வரு
டங்களுக்கு முன்பாக இதே போல கருத்து வாக்கெடுப்பு நடத்திய
போது இருந்ததைக் காட்டிலும் தற்போது கம்யூனிசம் மீதான ஈடு
பாடு அதிகரித்துள்ளதாக வாக்
கெடுப்பை நடத்தியவர்கள் தெரி
வித்தனர்.
ருமேனிய கருத்து வாக்கெடுப்பு நிறுவனமான சிஎஸ்ஓபி, தனது கருத்துக்கேட்பில் 49 சதமானவர்
கள், மறைந்த கம்யூனிஸ்ட் தலை
வர் நிக்கோலஸ் சேசெஸ்கு ஆட்
சிக்காலத்தில் வாழ்க்கை இன்னும் மேம்பட்டதாக இருந்ததாகக் கூறி
யுள்ளனர். அதே நேரம், வெறும் 23 சதமானவர்கள் மட்டுமே இப்
போது நல்ல வாழ்நிலை கொண்டி
ருப்பதாகச் சொல்லியுள்ளனர். மற்
றவர்கள் நடுநிலை அல்லது “தெரி
யவில்லை” என்று பதில் கூறியுள்
ளனர். இதில் பங்கேற்றவர்கள், தங்
கள் நேர்மறையான மதிப்பீட்டிற்கு தெரிவித்துள்ள காரணங்களைப் பார்த்தபோது, 62 சதமானவர்கள் பொருளாதாரம் மற்றும் வேலை
வாய்ப்பு என்றும், 26 சதமானவர்
கள் நல்ல வாழ்க்கைத்தரம் என்றும், 19 சதமானவர்கள் அனைவருக்கும் வீட்டுவசதி என்றும் தெரிவித்
துள்ளனர்.
இந்த கருத்தெடுப்பை நடத்திய நிறுவனம், ஐஐசிஎம்இஆர் எனப்
படும் அரசு உதவிபெற்ற நிறுவனமா
கும். (அந்த நிறுவனப் பெயரின் விரி
வாக்கம் - கம்யூனிசத்தின் குற்றங்
கள் மற்றும் வெளியேற்றப்பட்ட ருமேனிய நினைவுகள் குறித்த ஆய்
வுக்கான அமைப்பு என்பதாகும்) அவர்கள் கம்யூனிச அச்சுறுத்தல்
கள் குறித்து மக்களைப் “பயிற்று
விப்பதற்காக” இந்த ஆய்வைச் செய்துள்ளனர். அவர்களுக்கு ஏற்
பட்ட இந்த ஏமாற்றத்திலேயே மிக மோசமானது, கம்யூனிச ஆட்சி
யின்போது உங்கள் குடும்பம் எத்
தகைய பாதிப்புக்கு உள்ளானது? என்ற கேள்விக்கான பதில்களா
கும். மிகக் குறைவாக 7 சதவீதமா
னவர்களே தாங்கள் கம்யூனிச ஆட்
சியின்கீழ் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர், அத்துடன் 6 சதமானவர்கள் தாங்கள் தனிப்
பட்ட முறையில் எந்த பாதிப்பை
யும் சந்திக்கவில்லை என்றாலும் குடும்ப உறவுகளின் வகையில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்
துள்ளனர். இதிலும், தரப்பட்டுள்ள காரணங்களில், குறிப்பானது பொருளாதாரம். 1980களில் ருமேனி
யாவின் வெளிநாட்டுக் கடன்களை திரும்பச் செலுத்துவதற்காக மேற்
கொள்ளப்பட்ட சிக்கனத்திட்டத்
தின்போது ஏற்பட்ட பற்றாக்குறை
யால் பாதிக்கப்பட்டதாக பெரும்
பாலானவர்கள் சொல்லியுள்ளனர். ஒரு சிறிய அளவிலானவர்கள் மட்
டுமே, தங்கள் சொத்துக்கள் தேசிய
மயமாக்கப்பட்டதால் பாதிக்கப்பட்
டதாக தெரிவித்துள்ளனர். மற்றும் ஒரு பகுதியினர் கம்யூனிஸ்ட் ஆட்
சிக்காலத்தில் தாங்களோ அல்
லது தங்கள் குடும்ப உறுப்பினர்
களோ சிறையில் அடைக்கப்பட்ட
தாகச் சொல்லியுள்ளனர் (பாதிக்கப்
பட்டதாக கூறியவர்களிலும் 6 சத
மானவர்கள் இந்த பதிலை கூறி
யுள்ளனர்).
20 ஆம் நூற்றாண்டு கம்யூனி
சம் குறித்து பொதுவான நேர்மறை மதிப்பீட்டிற்கு ருமேனியர்கள் மட்
டும் வரவில்லை என்று ஐஐசிஎம்
இஆர் குறிப்பிடுகிறது. மத்திய மற்
றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில், கடந்த 2009 ஆம் ஆண்டு பியூ ஆய்வு மையம் என்ற அமெரிக்க நிறுவனம் நடத்திய கருத்துக்
கணிப்பின் படி, முன்னாள் சோச
லிச நாடுகளின் மக்களில் குறிப்
பிட்ட பகுதியினர் முதலாளித்துவ ஆட்சியைக் காட்டிலும் கம்யூ
னிஸ்ட் கட்சி ஆட்சியிலிருந்த
போது வாழ்க்கைத்தரம் சிறப்பாக இருந்ததாக குறிப்பிட்டுள்ளனர். அந்த விபரங்கள் பின்வருமாறு: போலந்து 35 சதவீதம், செக் குடிய
ரசு 39 சதவீதம், ஸ்லோவேகியா 42 சதவீதம், லிதுவேனியா 42 சதவீ
தம், ரஷ்யா 45 சதவீதம், பல்
கேரியா 62 சதவீதம், உக்ரெய்ன் 62 சதவீதம், ஹங்கேரி 72 சதவீதம்.
ருமேனியாவில் மேற்கொள்ளப்
பட்ட 2010 சிஎஸ்ஓபி மற்றும் ஐஐசிஎம்இஆர் கருத்துக் கணிப்பு
கள், “சந்தைப் பொருளாதாரத்தின்” கீழ் பெற்றுள்ள அதிகப்படியான அனுபவங்களில் இருந்து, மக்கள் முதலாளித்துவத்துக்கு எதிராக
வும், கம்யூனிசத்துக்கு ஆதரவாக
வும் மாறி வருகிறார்கள் என்று காட்
டியுள்ளது முக்கியத்துவம் வாய்ந்
தது. 2006 ஆம் ஆண்டு நடத்தப்
பட்ட வாக்கெடுப்பில் 53 சதவீதம் ருமேனியர்கள் கம்யூனிசத்திற்கு ஆதரவான கருத்தை தெரிவித்த
னர். 2010 வாக்கெடுப்பில் அந்த எண்ணிக்கை 61 சதவீதமாக அதி
கரித்துள்ளது.
ருமேனியாவின் மருத்துவத்
துறை தற்போது நெருக்கடியில் சிக்
கியுள்ளது மற்றும் பொதுத்துறை ஊழியர்கள் தற்போது 25 சதவீத சம்பளக் குறைப்பை சந்தித்திருக் கிறார்கள். முதலாளித்துவம் மறு அறிமுகப்படுத்தப்பட்டதற்கு பின் னர் நடந்தவைகளை - அதிகரித் திருக்கும் ஏழ்மை, வேலையின்மை மற்றும் பாதுகாப்பின்மை இன்னும் மற்றவைகளை தொகுத்துப் பார்க் கையில் சிஎஸ்ஓபி கணி
பு முடிவு கள் ஆச்சரியம் தருவதாக இல்லை.நிழலின் அருமை வேயிலில்தானே தெரியும்.
ஒருவன் மட்டுமே அம்பானி ஆவதும் மற்றவன் சாலையோரத்தில் தூங்குவதும்.விதியால் வந்தது என்று
எத்தனைக்காலம் ஏமாற்ற முடியும்.