இலங்கை ஊடகப் படுகொலை
இலங்கை அரசை விமர்சித்து வந்த பிரபல இணையதள பத்திரிகையின் அலுவலகம், மர்ம நபர்களால் நேற்று பெட்ரோல் ஊற்றி தீவைத்துக் கொளுத்தப்பட்டது.
இலங்கை தலைநகர் கொழும்பு புறநகர் பகுதியில் உள்ள மாலேபே என்ற இடத்தில் அமைந்துள்ளது, லங்கா இ நியூஸ் இணையதள பத்திரிகையின் அலுவலகம். இந்த இணையதளம் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வெளியாகி வருகிறது.
நேற்று அதிகாலை இந்த அலுவலகத்திற்குள் புகுந்த மர்ம நபர்கள், பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனர். இதில், அங்கிருந்த கணினிப் பொருட்கள், விலை மதிப்பற்ற நூலகம் உள்ளிட்டவை எரிந்து சாம்பலாயின. இதுகுறித்து, அந்த பத்திரிகை தன் இணையதளத்தில் நேற்று அதிகாலையில் செய்தி வெளியிட்டது.
பத்திரிகை ஆசிரியர் பென்னட் ரூபசிங்கே கூறுகையில்,"பல நாட்களாக இந்த அலுவலகத்தை சிலர் மர்மமான முறையில் கண்காணித்து வந்துள்ளனர். இங்கு பணியாற்றும் ஊழியர்கள் பற்றி அக்கம்பக்கத்தில் விசாரித்துள்ளனர். சம்பவம் நடப்பதற்கு முதல் நாள் இரவு எனக்கு கொலை மிரட்டல் வந்தது. நாங்கள் அரசை விமர்சித்து பல கட்டுரைகள் வெளியிட்டது தான் இதற்குக் காரணம்' என்று தெரிவித்தார்.
நுகேகோடா என்ற இடத்தில் உள்ள இந்த பத்திரிகையின் அலுவலகம் கடந்தாண்டு தாக்கப்பட்டது. அதேபோல், இப்பத்திரிகையில் பத்திரிகையாளராகவும், அரசியல் கார்ட்டூனிஸ்ட்டாகவும் பணியாற்றி வந்த பிரகீத் எக்னெலிகொட என்பவர், கடந்தாண்டு திடீரென காணாமல் போனார். இன்று வரை, அவர் என்ன ஆனார் என்பது தெரியவில்லை. கடந்தாண்டு பத்திரிகையின் ஆசிரியராகப் பணியாற்றி வந்த சந்துருவன் சேனாதீராவுக்கு வந்த மிரட்டலையடுத்து, அவர் பிரிட்டனுக்கு தன் குடும்பத்துடன் சென்று விட்டார்.
அதிபர் ராஜபக்ஷே பதவிக்கு வந்த பின், இதுவரை 13 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டிருப்பதாகவும், பலர் காணாமல் போய்விட்டதாகவும் லங்கா இ நியூஸ் குற்றம்சாட்டியுள்ளது. இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து விசாரிக்க ராஜபக்ஷே உத்தரவிட்டுள்ளதாக, அதிபரின் செய்தித் தொடர்பாளர் பந்துல ஜெயசேகர தெரிவித்துள்ளார்.
இவர்கள்விசாரணை எப்படி இருக்கும்.
தொட்டிலையு ம் ஆட்டிவிட்டு பிள்ளையையும் கிள்ளி விட இவர்களுக்கு
சொல்லியாகொடுக்க வேண்டும்.
இலங்கையில் நடப்பது அறிவிக்கப்படாத
சர்வதிகார ஆட்சிதானே.
ஆனால் சிங்கள இன வெறியைத்தூண்டிவிட்டு
ராஜபக்சே தனது சிம்மாசனத்தில் இன்னும் இருக்கமாக அமர்ந்துள்ளார்.