சிபிஐ காவலில் ராசா
அலைக்கற்றை முறைகேட்டில் கைது செய்யப்பட்டுள்ள, ராசா மற்றும் இரு அதிகாரிகளை ஐந்து நாட்கள் சிபிஐ எனப்படும் மத்தியப் புலனாய்வுத்துறை காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
ராசா, அவரது தனிச் செயலர் சந்தோலியா மற்றும் முன்னாள் தொலைத் தொடர்புத்துறைச் செயலர் பேரஹுரா ஆகிய மூவரும் புதன்கிழமை சிபிஐ-யால் கைது செய்யப்பட்டார்கள்.
சட்ட நடைமுறைகளின்படி, வியாழனன்று பிற்பகல், அவர்கள் மூவரும் டெல்லியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்கள்.
சிபிஐ சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அகிலேஷ், ராசாவிடம் இதற்கு முன்பு நான்கு முறை விசாரணை நடத்திய போது, அவர் நேரடியாகப் பதிலளிக்காமல் மழுப்பலாகவே பதிலளித்ததால், அவரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ள ஏதுவாக, ஐந்து நாட்கள் சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க அனுமதியளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
அரசின் விதிமுறைகளுக்கு எதிராக ராசா செயல்பட்டதால், அலைக்கற்றை ஒதுக்கீட்டி்ல் முறைகேடு நடந்ததாகவும், தொலைத் தொடர்புத்துறையில் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் கூட இல்லாத நிறுவனங்களுக்கும், முதலில் வருவோருக்கு முன்னுரிமை அடிப்படையில், அலைக்கற்றை ஒதுக்கப்பட்டதால் அரசுக்கு இழப்பு ஏற்பட்டதாக சிபிஐ வழக்கறிஞர் குற்றம் சாட்டினார்.
ராசா மற்றும் சந்தோலியா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ரமேஷ் குப்தா, சிபிஐ வாதத்தை எதிர்த்தார். ராசா ஏற்கெனவே நடந்த விசாரணையில் சிபிஐக்கு முழு ஒத்துழைப்புக் கொடுத்திருக்கிறார். அப்படியிருக்கும்போது, ஐந்து நாள் காவலில் வைத்து விசாரிக்க சிபிஐ அனுமதி கோருவது, பத்திரிகையாளர்களை சந்தோஷப்படுத்தவா அல்லது யாரைத் திருப்திப்படுத்துவதற்கு? என்று ரமேஷ் குப்தா கேள்வி எழுப்பினார்.
ராசா தன்னிச்சையாக எந்த முடிவும் எடுக்கவில்லை என்றும், மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுடன்தான் அதைச் செயல்படுத்தியிருக்கிறார் என்றும், அவர் மீது சிபிஐ கூறும் குற்றச்சாட்டுக்கள் தவறானவை என்றும் ராசாவின் வழக்கறிஞர் வாதிட்டார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி. சைனி, குற்றம் சாட்டப்பட்டவர்கள் விதிமுறைகளுக்கு மாறாக உரிமங்களை ஒதுக்கியதில் அரசுக்கு 22 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் அடிப்படை இருப்பதாகவே தெரிகிறது. எனவே, குற்றச்சாட்டின் தீவிரத்தை கவனத்தில் கொண்டு பார்க்கும்போது, அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்த வேண்டிய அவசியம் இருக்கிறது. எனவே, சிபிஐ-யின் கோரிக்கை நியாயமானது என்று கூறி, ஐந்து நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதியளித்தார்.
இதை அடுது நடந்த தி.மு.க, பொதுக்குழுவில் ராசா கைது செய்யப்பட்டுள்ளதாலே
அவர் குற்றவாளி ஆகிவிட மாட்டார் என கலைஞர் திருவாய் மலர்ந்துள்ளார்.கொலை செய்ததாலேயே ஒருவன் கொலையாளி ஆகிவிடமாட்டான். செம்பை திருடியதாலேயே ஒருவன் செம்பு களவானி ஆகமாட்டான் ,என்ன பொன்மொழிகள் இது.கலைஞர் இப்படி
அதிகப்படி வக்காலத்துவாங்குவது அவர் மீதும் கூட சந்தேகத்தை மக்கள் மத்தியில் கிளப்பி
விடுகிறது. என்னையா நடக்குது இங்க,இவுக ரொம்ப நல்லவங்க[சொல்ல முடியலியே]ப்பா?