துயர் ஆரம்பமாகி 30 ஆண்டுகள்.......
யாழ்ப்பாண வன்முறை இடம்பெற்று 30 ஆண்டுகள்
பார்ப்போம் இன்னும் திகார் நோக்கிய பயணத்தை யாரெல்லாம் துவக்குகிறார்கள் என.
===========================================================================
சாம்பலான யாழ் நூலகம், |
இலங்கையில் முப்பது ஆண்டுகளுக்கு முன், 1981 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் வாரம் யாழ்ப்பாணத்தில் இடம் பெற்ற வன்செயல்கள், இலங்கையின் அரசியல் போக்கையே மாற்றி அமைத்தது.
நாட்டில் அதிகாரப் பகிர்வு மற்றும் பரவலாக்கத்துக்கான ஒரு முன்னெடுப்பு என்று கூறப்பட்டு மாவட்ட அபிவிருத்தி சபைகளுக்கான தேர்தல்களை ஜூன் மாதம் நான்காம் தேதி நடத்த இலங்கை அரசு முன்வந்தது.
அப்போது கொழும்பில் ஆட்சியிலிருந்த ஐக்கிய தேசியக் கட்சி தனது வேட்பாளர்களை வடக்கே யாழ்ப்பாணத்தில் போட்டியிட வைத்து தேர்தலில் தமக்கு சாதகமான ஒரு நிலையை ஏற்படுத்த முயன்றனர் என்கிற குற்றச்சாட்டுகள் அப்போது எழுந்தன.
அந்தத் தேர்தலில் போட்டியிட்ட, தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியினர் நாச்சிமார்கோயிலடி என்ற இடத்தில் ஒரு தேர்தல் கூட்டத்தை நடத்திக் கொண்டிருந்தபோது நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இரண்டு போலீசார் கொல்லப்பட்டனர்.
இதையடுத்து அப்பகுதிக்கு வந்த நூற்றுக்கும் அதிமான போலீசார் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டனர் என்று வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
இதன்பிறகு நடந்தேறிய வன்செயல்களில், ஈழநாடு பத்திரிகை அலுவலகம், யாழ்ப்பாண நூலகம், பூபாலசிங்கம் புத்தகக்கடை உட்பட பல இடங்கள் வன்முறையாளர்களால் தீக்கிரையாக்கப்பட்டது.
அந்த வன்முறைகளை கட்டுக்குள் கொண்டு வர இனங்களுக்கு இடையே நீதிக்கும் சமத்துவத்துக்குமான இயக்கத்தின் யாழ் கிளை தீவிர முயற்சிகளை எடுத்தது என்று அந்த அமைப்பில் அப்போது உறுப்பினராக இருந்த சீலன் கதிர்காமர் தெரிவித்தார்.
முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் ஜூன் மாதம் முதல் வாரம் இடம் பெற்ற இந்த வன்செயல்கள் தமிழ் மக்களுக்கு இலங்கை அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையை இழக்க வைத்தது என்று கூறும் கதிர்காமர், அந்த வன்செயல்களே 1983 ஆம் ஆண்டு இடம்பெற்ற வன்முறைகளுக்கு முன்னோடியாக இருந்தது என்றும் கூறுகிறார்.
யாழ்ப்பாண நூலகம் |
1981 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் வாரம் இடம்பெற்ற வன்செயல்கள் இடம்பெறாமல் இருந்திருந்தால், அதிகாரப்பகிர்வு நடைமுறையில் செயல்படுத்தப்பட ஒரு சூழ்நிலை ஏற்பட்டிருக்கும் எனவும் சீலன் கதிர்காமர் கூறுகிறார்.
தற்போதைய சூழலில், அதிகாரப் பகிர்வு குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில், தமிழ் மக்கள் விழிப்புணர்வுடனும் புத்திசாலித்தனத்துடனும் நடந்து கொள்ள வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டுகிறார். குறிப்பாக புலம் பெயர்ந்த இலங்கை தமிழ் மக்கள் இதை மனதில் வைத்திருக்க வேண்டும் எனவும் அவர் மேலும் கருத்து வெளியிடுகிறார்.
யாழ்ப்பாண மக்களை கல்வி ரீதியில் மேம்பாடு அடையச் செய்ய வேண்டியதே தற்போது முக்கியமாக தேவைப்படும் நடவடிக்கை எனவும் கூறும் அவர், தமிழ் மக்கள் மத்தியில் அரசியல்வாதிகளின் தரமும் குறைந்து காணப்படுகிறது எனவும் கூறுகிறார்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++=
இது சன் தொலைக்காட்சியின் வாக்குமூலம்,,,
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் தங்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று சன் டிவி நிறுவனம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
முன்னதாக சன் டிவியை 2ஜி ஊழலுடன் தொடர்புப்படுத்தி செய்திகள் வந்ததாலும், சென்னையில் தனது வீட்டில் டெலிபோன் எக்சேஞ்சை அமைத்து அதை சன் டிவிக்காக பயன்படுத்தியதாக கூறப்படும் புகார்கள் குறித்து மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் மீது சிபிஐ விசாரணையைத் தொடங்கியுள்ளதாலும் மும்பை பங்குச் சந்தையில் சன் டிவியின் பங்குகளின் விலை 28 சதவீதம் அளவுக்கு சரிந்தது. இது கடந்த ஓராண்டில் ஏற்பட்ட மிகப் பெரிய சரிவாகும்.
அதே நேரத்தில் இன்று இதன் பங்குகளின் விலை 13.85 சதவீதம் அளவுக்கு உயர்ந்தது. இந் நிலையில் மும்பை பங்குச் சந்தையில் சன் டிவி தாக்கல் செய்துள்ள விளக்க அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

”சன் டிவி நெட்வொர்க் மற்றும் கலாநிதி மாறன் ஆகியோருக்கும் தற்போது நடைபெற்றுவரும் சம்பவங்களுக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என்பதைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறோம்.
பிஎஸ்என்எல்லின் 323 தொலைபேசி இணைப்புகளை தயாநிதி மாறன் தனது இல்லத்தில் பயன்படுத்தினார் என்று கூறப்படும் குற்றச்சாட்டையும் உறுதியாக மறுக்கிறோம்.
சன் நெட்வொர்க்கிலோ, சன் டைரக்ட் நிறுவனத்திலோ தயாநிதி மாறனுக்கு சொந்தமாக எந்தப் பங்குகளும் இல்லை. சன் டைரக்ட் நிறுவன பங்குகளை சன் டிவி வைத்திருக்கவில்லை. மேலும் சன் டைரக்டில் 20 சதவீத பங்குகளை வைத்திருக்கும் மலேசியாவின் மேக்ஸிஸ் நிறுவனத்துடனும் எந்தவிதத் தொடர்பும் சன் டிவிக்கு இல்லை.
இத்தகைய குற்றச்சாட்டுகளால் வர்த்தகம் எந்த விதத்திலும் பாதிக்கப்படாது
நிறுவனத்தின் புகழை சீர்குலைக்க வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு இதுபோன்ற குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன.”

- இவ்வாறு சன் நிறுவனம் அறிக்கையில் கூறியுள்ளது.
பல மொழிகளில் 20 தொலைக்காட்சி சேனல்கள், 45 வானொலி நிலையங்கள், 4 வார இதழ்கள், 2 தினசரிகள், ஒரு டிடிஎச் சேவை நிறுவனம் ஆகியவை சன் குழுமத்தில் உள்ளன. சன் டிவியில் மாறன் குடும்பத்தினர் 77 சதவீதப் பங்குகளை வைத்துள்ளனர்.
இவை இப்படியிருக்கையில் சி.பி.ஐ, தயாநிதியிடம் விரைவில் விசாரணையை துவக்கும் எனத் தெரிகிறது.இந்த நிறுவனத்தின் துணை நிறுவனமான சன் பிக்சர்ஸ் திரைப்படங்களைத் தயாரித்து வினியோகித்து வருகிறது. மேலும் தமிழகம் முழுவதும் சுமங்கலி கேபிள் விஷன் என்ற கேபிள் வினியோக நிறுவனத்தையும் நடத்தும் சன் டிவி நிறுவனம் சமீபத்தில் ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனத்தின் பெரும்பாலான பங்குகளையும் வாங்கி அதையும் சொந்தமாக்கியுள்ளது.
பார்ப்போம் இன்னும் திகார் நோக்கிய பயணத்தை யாரெல்லாம் துவக்குகிறார்கள் என.
===========================================================================
பாபா ராம்தேவ் சாமியாரின் அடியாள்
செய்தியாளர் கூட்டத்தில் நுழைந்து காங்கிரசு பேச்சாளர் ஜனார்தன் திவேதி யை செருப்பால் அடித்தார். சாமியாரோ பெண்களின் சுடிதாரை வாங்கி அணிந்து தலைமறைவாக முயற்சித்து மாட்டிக்கொண்டார்.
==========================================================================