ராம்தேவின் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்ட அறிவிப்பால், டில்லி ராம்லீலா மைதானம் களைகட்டியது.
இரண்டு மாதங்களுக்கு முன், காந்தியவாதி அன்னா ஹசாரே, ஜந்தர் மந்தர் பகுதியில் உண்ணாவிரதம் இருந்த போது, அந்தப் பகுதி எப்படி களைகட்டியதோ, அதைவிட ஒருபடி அதிகமாக மக்களிடம் ஆர்வம் காணப்படுகிறது. ஆட்டம், பாட்டம், கோஷம் மற்றும் உயிரோட்டமான ஓவியங்கள் என, மைதானம் களேபரப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அன்னா ஹசாரே போராட்டத்தின் போது, அதற்கு ஊக்கம் அளிக்கும் வகையில், உயிரோட்டமான ஓவியங்களையும், அதற்கு தகுந்த வாசகங்களை எழுதி, அனைவரது கவனத்தையும் ஈர்த்த ஓவியர் தப்ரீம் ஆலம்தான், இன்றைய உண்ணாவிரதப் போராட்டத்திற்கும் ஓவியங்களை வரைந்துள்ளார். கறுப்புப் பணத்தை மீட்டுக் கொண்டுவர தேவையான செய்திகளை அதில் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், ""லோக்பாலுக்காக மட்டும் அன்னா ஹசாரே போராட்டம் நடத்தினார். ஆனால், பாபா ராம்தேவ் ஒட்டு மொத்த ஊழலுக்கு எதிராக போராட்டம் நடத்துகிறார்'' என்றார். ராம்தேவுடன் இன்றைய உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்ற உள்ள பல்வேறு மதத் தலைவர்கள் கூறுகையில், "ஊழல் ராவணன், ராம்லீலா மைதானத்தில் கொல்லப்படுவான்' என்றனர். உண்ணாவிரதம் நடக்கவுள்ள மைதானத்தில், பொதுமக்களுக்கு சாதம், சப்பாத்தி, பருப்பு மற்றும் காய்கறிகள் வழங்குவதற்காக, தனியாக கூடாரம் அமைக்கப்பட்டுள்ளது. உண்ணாவிரதம் இருப்போருக்கு எலுமிச்சை ஜூஸ் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
உண்ணா விரதம் இருப்பவர்களுக்கு எதற்கு சாதம்,சப்பாத்தி.?
இந்த உண்ணா விரத விழாவுக்காக் 18 கோடிகள் இதுவரை செலவிடப்பட்டுள்ளதாம்.இன்னும் செலவிருக்கிறது.
உண்ணாவிர தம் இருக்கும் பந்தலில் 780 மின்விசிறி, 130 கழிவறை, 100 கண்காணிப்பு கேமரா அமைக்கப்பட்டுள்ளது.
ராம்தேவ் அருகில் குளு,குளு, வசதிக்காக ஏர்கூலர் 10 அமைக்கப் பட்டுள்ளது.
மைதானத்தின் ஒரு பகு தியில் குளு குளு வசதியுடன் தீவிர சிகிச்சை பிரிவு அறை யும் அமைக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சி மைதானத் திற்கு ரூ.3.10 லட்சம் கட் டணமாக செலுத்தப்பட் டுள்ளது.
அன்னா ஹசாரே ஊழலை ஒழிக்கும் விழாவிற்கு 40 லட்சம் செலவிட்டுள்ளார்.ராம்தேவ் யோககுரு மட்டுமல்ல.ஆயுர்வேத மருந்துக்கள் [மாட்டு எலும்பு சேர்த்து சுத்தமான முறையில் ]தயாரிக்கும் நிறுவனம் உள்ள தொழிலதிபர் 18கோடி செலவிடுகிறார்.
நமக்குள்ள கவலை எல்லாம் இந்த 40லட்சம்.,18 கோடி வந்தது எப்படி? இவைகளை இவர்கள் மூலம் செலவிடும் மறைமுக ஊழலை ஒழித்தே தீரவேண்டும் என்று இருப்பவர்கள் யார் என்பதுதான்.
அன்னா வாகட்டும் ,ராம்தேவாகட்டும் இருவருமே முறைகேடுகள் செய்தவர்கள் பட்டியலில் உள்ளவர்கள்.இவர்களை விட்டு வேறு நல்லவர்கள் கிடைக்கவில்லையா?அந்த முகமூடிகளுக்கு.
அடுத்த ஊழல் ஒழிப்பு களத்தில் இறங்கப்போவது யாராக இருக்கலாம்? அநேகமாக ”சுவாமிகள் பிரமஷிரி நித்யானந்த அடிகளா”ராக இருக்கலாம்.
என்ன செய்ய முடியும் .வேடிக்கைப்பார்ப்பதைத் தவிர,,,,
===========================================================================
அம்பானி யின் குடில்
|
|
உலகிலேயே மிகப்பெரிய வீடு எங்கிருக் கிறது தெரியுமா? நமது இந்தியாவில்தான்! மும்பை, அல்ட்டா மவுன்ட் சாலையில் உள்ள இந்த வீட்டின் சொந்தக்காரர் முகேஷ் அம்பானி ஆவார். 2007-ல் ரூ.4,400 கோடி மதிப்பில் கட்டுமான வேலைகள் துவக்கப் பட்டு, 2010 இறுதியில் கட்டி முடிக்கப்பட்டுள் ளது. ஏசியன் கண்டெம்பொரரி எனும் அமெ ரிக்க நிறுவனம் இந்த வீட்டை கட்டித் தந் துள்ளது. இந்த வீட்டின் தற்போதைய மதிப்பு சுமார் ரூ.10,000 கோடியாகும். முகேஷ் அம் பானி 2011-ம் ஆண்டு உலக பணக்காரர்கள் பட்டியலில் 9 வது இடத்தை பிடித்துள்ளார்.. இவரின் இன்றைய சொத்து மதிப்பு 27 பில்லியன் அமெரிக்க டாலர் ஆகும்.
மின் கட்டணம் ரூ.70 இலட்சம்
முகேஷ் அம்பானி தனது வீட்டிற்கு குடி யேறியவுடன், முதல் மாதம் மின்சாரக் கட்ட ணமாக ரூ. 70 இலட்சம் கட்டியுள்ளார். முதல் மாத மின்சார உபயோகக் கட்டணமாக ரூ.70 லட்சத்து 69 ஆயிரத்து 488 பில் வந்துள்ளது. இது 6 லட்சத்து 37 ஆயிரத்து 240 யூனிட் மின் சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒரு நடுத்தர குடும்பத்தில் அதிகபட்சமாக பயன்படுத்தப் படும் சராசரி மின் அளவு 300 யூனிட் ஆகும். அம்பானியின் வீட்டு மின் பயன்பாட்டுடன் ஒப்பிட்டால் மலைக்கும் மடுவிற்கும் உள்ள இடைவெளியாகும். மின்சாரக் கட்டணத்தை சரியாக செலுத்திவிட்டதால் அம்பானிக்கு, ரூ.48 ஆயிரத்து 354 தள்ளுபடி செய்யப்பட் டுள்ளதாம். இதுபோகத்தான் அம்பானி ரூ.70 லட்சம் மின் கட்டணம் செலுத்தியுள்ளார்.
5 லட்சம் லிட்டர் தண்ணீர்
தினசரி இந்த வீட்டிற்கு மும்பை மாநக ராட்சி நிர்வாகம் 5 இலட்சம் லிட்டர் தண்ணீர் விநியோகம் செய்து வருகிறது. முகேஷ் அம் பானியும் அவரது மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் அவரது தாயார் உள்பட 6 பேர் மட்டும் இந்த வீட்டில் வசித்து வரு கின்றனர். இவர்களுக்கு சேவை செய்ய சுமார் 600 பணியாளர்கள் நியமனம் செய்யப் பட்டுள்ளனர்.
இந்த வீட்டிற்கு ‘ஆண்டிலா’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. 4532 சதுர அடி தரை பரப்பளவும், 4,00,000 சதுர அடி மொத்த பரப்பளவும் கொண்ட இந்த வீட்டின் உயரம் 570 அடியாகும். 60 தளங்களை அமைப்பதற் கான அடித்தளம் அமைக்கப்பட்டு, தற்போது 27 தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்கட் டிடத்தில் மூன்று ஹெலிகாப்டர் தளங்கள் உள்ளன. விலை உயர்ந்த, வெளிநாடுகளி லிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 168 கார்கள் உள்ளன. இவைகளை நிற்க வைப்பதற்கு இந்த வீட்டில் 6 தளங்கள் ஒதுக்கப்பட் டுள்ளன. எட்டாவது மாடியில் பொழுதுபோக் கிற்காக ஒரு மினி சினிமா தியேட்டரும் உள் ளது. மூன்று தளங்களில் தோட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 4-ம் மாடியில் அமைக்கப்பட்டுள்ள பூங்காவில் நுழைந்தால் குளிர்காலத்தில் சூடாகவும், வெயில்காலத் தில் குளிராகவும் இருக்குமாம். 9-வது தளம் அவசர காலத்திற்கு பயன்படுத்த ஒதுக்கப்பட் டுள்ளது. 10, 11-வது தளங்கள் விளையாடு வதற்காகவும் உடற்பயிற்சிக்காகவும் ஒதுக் கப்பட்டுள்ளது. இதில் ஒரு நீச்சல் குளமும் உள்ளது. விருந்தினர்கள் தங்குவதற்காக இரண்டு தளங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலே உள்ள நான்கு தளங்களில் முகேஷ் அம்பானியும் அவரது மனைவி நீத்தா மற்றும் மூன்று குழந்தைகளுடன் தாயார் கோகில பென் ஆகியோர் வசித்து வருகின்றனர். இந்த தளங்களிலிருந்து அரபிக்கடலின் அழகிய தோற்றமும், மும்பை நகரத்தின் எழிலையும் கண்டு களிக்கலாம். அதற்கு மேல் உள்ள இரண்டு தளங்கள் ஹெலிகாப்டர் இயக்கு வதற்கான கட்டுப்பாட்டு அறைகளை கொண் டுள்ளது. மும்பை மாநகராட்சி நிர்வாகம் ஹெலிகாப்டர் இறங்குவதற்கு இன்னும் அனுமதி தரவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.
முகேஷ் அம்பானியின் வீட்டின் மதிப்பு 1 பில்லியன் அமெரிக்க டாலர் என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. உலக பணக்காரர் பட்டி யலில் இரண்டாம் இடத்தில் உள்ள பில் கேட்ஸ் வீட்டின் மதிப்பு 100 மில்லியன் டாலர். இந்திய நாட்டின் இன்னொரு பணக்காரரும் உல பணக்காரர் பட்டியலில் இடம் பெற்ற வருமான லட்சுமி மிட்டல், கடந்த ஆண்டு லண்டனில் 60 மில்லியன் டாலர் மதிப்பில் ஒரு வீடு வாங்கியுள்ளார். முகேஷ் அம்பானி இவ்வளவு செலவு செய்து இப்படி ஒரு வீட் டை கட்டியிருக்க வேண்டிய அவசிய மில்லை என்று இந்திய நாட்டின் பெரும் பணக்காரரான ரத்தன் டாடா கருத்து தெரி வித்துள்ளார். உலகம் முழுவதும் பேசப்படக் கூடிய ஒரு விஷயமாக இன்று அம்பானி யின் ஆடம்பர வீடு அமைந்துள்ளது.
|