இ-கோலி இந்தியாவை நெருங்குகிறது,,,


இ.கோலி பக்டீரியாவுக்கு 17வது நபர் ஜெர்மனியில் பலியாகி உள்ளார். பயங்கர நச்சுப்பொருளுடன் புதிய வகை பக்டீரியாவாக இ.கோலி பக்டீரியா உருவாகி உள்ளது.இந்த நுண் பக்டீரியாவானது புதிய மரபணு மாற்றத்துடன் உருவாகியுள்ளது. இதில் மனிதர்களை கொல்லும் ஜீன்கள் உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. ஸ்பெயினில் இருந்து ஜெர்மனி போன்ற நாடுகளுக்கு வெள்ளரிக்காய் உள்பட காய்கறிகள் இறக்குமதி செய்யப்படுகின்றன. இந்த வெள்ளரிக்காயை சாப்பிட்டதால் உடலுக்கு தீங்கு விளைவிக்கும்  பக்டீரியாவான இ.கோலி பரவி உள்ளது என ஜெர்மனி முதலில் குறிப்பிட்டது.
இந்த கருத்துக்கு ஸ்பெயின் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ஜெர்மனி அறிவிப்பால் தங்கள் விவசாயம் செய்த உணவு வகைகளை ஏற்றுமதி செய்யமுடியாமல் போனது. எனவே எங்கள் இழப்புக்கு உரிய நிவாரணம் தரவேண்டும் என ஸ்பெயின் கூறியது.
இ.கோலி பக்டீரியா உயிரைக் கொல்லும் மரபணுக்களுடன் அமைந்துள்ளது. இந்த இ.கோலி நுண் உப பக்டீரியாவின் திடீர் மரபணு மாற்றம் காரணமாக ஏற்பட்டு உள்ளது என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் இகோலி பக்டீரியாவிற்கு பலியான 17வது நபராக ஹம்பர்க் மருத்துவமனையில் ஒருவர் உயிரிழந்தார். ஐரோப்பிய நாடுகளில் இ.கோலி பக்டீரியாவிற்கு இதுவரை 1500 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். பக்டீரியா வேகமாக பரவி வருவதால் பாதிப்பு வேகம் அதிகரித்து உள்ளது.
       இந்த இ-கோலி பற்றி முன்பே’சுரன்’ எச்சரித்திருந்தது.
 உலகில்  வேகமாக பரவும் இக்கிருமி மரணத்தை ஏற்படுத்துவது பலநாடுகளையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.இந்தியாவிலும் மேலைநாடுகளில் இருந்து இறக்குமதியாகும் இறைச்சி,காய்கறிகள் மூலம் பரவ வாய்ப்புள்ளது.
       மேலை நாட்டு மோகம் உள்ளவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.இது மனிதருக்கு,மனிதர் பரவும் தன்மையுள்ளதால் மிக பாதுகாப்பான நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும் .
             மரபணு மாற்றம் செய்யப் பட்ட வெள்ளரியில்தான் முதன் ,முதலில் இந்த இ-கோலி பாக்டிரியா கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.கிருமியிலும் மரபணு மாற்றம் உள்ளதால் தடுப்பு மருந்து கண்டுபிடிக்க இதுவரை இயலவில்லை.
            மரபணு மாற்று’ ,குளோனிங் போன்ற இயற்கைக்கு மாறான செயல்கள்,கண்டு பிடிப்புகளில் ஏற்படும் தவறுகளால்தான் ஹெச்.அய்.வி.+
 மற்றும் இது போன்ற புதிய கொடுமையான கிருமிகள் உருவாகுகின்றன.
              வம்பை விலை கொடுத்து வாங்கும் அறிவியல் கண்டுபிடிப்புகளில் முதன் ,முதல் தடை செய்ய வேண்டியது மரபணு மாற்றம்,குளோனிங் போன்றவைகள்தான்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?