விசாரணை ரகசியம்.

   இனி ரகசியம் இல்லை......
                                                                                 
மனித மூளையை இனிநம்மால் படிக்க முடியும் என்கிற தகவல் புதிய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. குறிப்பாக மூளையில் வார்த்தைகள் எவ்விதம் படிகின்றன என்பதை  அறிய முடியும்.
மூளையில் படியும் வார்த்தைகளை கண்டறிய விஞ்ஞானிகள் மின்கடத்தி எனப்படும் எல்க்ட்ரோடுகளை பயன்படுத்தினர். இதன் மூலம் எழுப்பப்படும் ஒலிகள் மூலம் மூளையில் பதிவாகும் மொழி, வார்த்தைகளை அறிய முடியும்.
மனம் எனப்படுவது மூளைதான். மூளையில் உள்ள தகவல்களை வேறு யாருமே அறிய முடியாது. மனதில் உள்ள ரகசியம் சம்பந்தப்பட்டவரைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது .என்பது இனிகிடையாது.                                                                                                மூளையில் உள்ள வார்த்தை பதிவுகளை கண்டறியும் ஆராய்ச்சியை வாஷிங்டன் பல்கலைகழகத்தின் நரம்பு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையினர் மேற்கொண்டனர். இந்த ஆய்வு இத்துறையின் இயக்குனர் எரிக் லெதார்ட் தலைமையில் நடத்தப்பட்டது.
சிந்திப்பதில் தடுமாற்றம் உள்ள நரம்பு குறைபாடுகள் உள்ளவர்களுக்கு 64 எலக்ட்ரோடுகளை மூளைப்பகுதியில் பதித்து ஆய்வு செய்யப்பட்டது. மூளை நரம்புப் பகுதியில் எதனால் குறைபாடு ஏற்படுகிறது என்பதை கண்டறிய கூடுதல் எல்க்ட்ரோடுகளை ஆய்வாளர்கள் பயன்படுத்தினர்.
ஒலிகளை பற்றி சிந்திக்கும் மூளை ஒருவித சமிஞ்ஞைகளை உற்பத்தி செய்கிறது. அதே நேரத்தில் அவர்கள் பேசும் போது வேறுவித நிலை காணப்படுகிறது. ஆபரேஷன் செய்யாமலே மூளை விவரங்களை இந்த புதிய ஆய்வின் மூலம் அறிய முடியும்.
     இனி குற்றவாளிகளிடம் உண்மையை எளிதாகக் கொண்டுவரலாம்.2ஜி,காமன்வெல்த்,ஆதர்ஸ்க்கு சி.பி.ஐ, விசாரணை என காலத்தைக்கடத்தவேண்டாம்.
 ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
விசாரணத் கூட்டத் தொடர் ஆரம்பம்,,,,?

புதிய தலைமைச் செயலகக் கட்டடப் பணிகளுக்கு கூடுதலான மற்றும் பயனற்ற செலவு, காலதாமதம், தரமற்ற கட்டுமானப் பணிகள் போன்ற குறைபாடுகள் குறித்து விசாரிக்க, ஓய்வு பெற்ற ஐகோர்ட் நீதிபதி தலைமையில் விசாரணைக்குழு அமைக்கப்படும் மற்றும் தனியார் கேபிள்"டிவி' அரசுடைமையாக்கப்படும்' என, சட்டசபையில் கவர்னர் பர்னாலா  ஆற்றிய உரையில்தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், கடந்த ஆட்சியில் கொண்டு வரப்பட்ட இலவச வீடு வழங்கும் திட்டம், மருத்துவ காப்பீடு, கான்கிரீட் வீடு வழங்கும் திட்டம், மேலவை அமைத்தல் உள்ளிட்ட திட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையில் வெளியிடப்பட்ட இலவச லேப்-டாப், மின்விசிறி, கிரைண்டர் வழங்குதல், பசுமை வீடு உள்ளிட்ட பல புதிய திட்டங்கள் செயல்படுத்துவது குறித்த  அறிவிப்புகளும் இடம்பெற்றுள்ளன.
புதிய தலைமைச் செயலகக் கட்டடப் பணிகளுக்கு கூடுதலான மற்றும் பயனற்ற செலவு, காலதாமதம், தரமற்ற கட்டுமானப் பணிகள் போன்ற குறைபாடுகள் உள்ளதாக பல குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதுகுறித்து விசாரணை செய்ய, ஓய்வு பெற்ற ஐகோர்ட் நீதிபதி தலைமையில் விசாரணைக்குழு அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. விசாரணை நியாயமாக நடைபெற ஏதுவாக, அதுவரை புதிய தலைமைச் செயலக கட்டுமானப் பணிகள் நிறுத்தி வைக்கப்படும்.  மேலும், தனியார் கேபிள்"டிவி' சேவை அரசுடைமையாக்கப் படும். இவ்வாறு கவர்னர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த தி.மு.க., ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பல திட்டங்கள் ரத்து செய்யப்படுவதற்கான அறிவிப்பும், சில திட்டங்களுக்கு மாற்று அறிவிப்புகள், அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றும் திட்டங்கள் கவர்னர் உரையில் இடம்பெற்றிருந்தன .
       நாம் எதிர்பார்த்ததுதான்.இவ்வாறு இல்லாவிட்டல்தான் நமக்கு ஏமாற்றமாக இருந்திருக்கும்.
 மொத்தத்தில் கருணாநிதி கட்டிய தலைமைச்செயலகத்தில் தான் கால்பதிக்கக்கூடாது என்ற வைராக்கியம்தான் ,தலமைச்செயலகம் பற்றிய குற்றச்சாட்டுகள்,விசாரணை,கட்டுமானம் நிறுத்தம் என உரையாகியுள்ளது.இவர்கள் மானப்பிரச்சினையில் பலியாவது மக்களின் வரிப்பணம்.
 கேபிள் டி.வி.தேவையானதுதான்.ஆனால் அதேநேரம் மெட்ரோ ரயில் போய் மோனோ ரயில் என்பது வீம்புத்தனமானது. கிட்டத்தட்ட அநேக கட்டுமான வேலைகள் முடிந்த நிலையில் ,போக்குவரத்துக்கு நன்மைதரும் திட்டத்தை நிறுத்தி மோனோரயில் என்பது  வீண் .செலவு மட்டுமல்ல-மக்கள் இன்னும் இடஞ்சலில் மாட்டிக் கொள்ளும் தவறையும் செய்கிறார்.
 கலைஞர் காப்பீடு திட்டத்தை எதற்காக நிறுத்துகிறார்கள்.கலைஞர் பெயர்தானே கண்ணை உறுத்துகிறது.அப்பெயரை நீக்கி தமிழக அரசு மக்கள் காப்பீடு என்றோ தங்கத்தலைவி ஜெயலலிதா காப்பீடு என்ற பெயரில் அதில் உள்ள குறைகளைக் களைந்து செயல்பட வைக்கலாமே.
   இலவச வீடு,கான்கிரீட் வீடு திட்டத்தையும் அப்படியே பெயரை மாற்றி பயனாளிகளுக்கு வழங்கலாமே?
     இலவசத்திட்டங்கள் என்றாலே முறைகேடுகள் வந்துவிடுமே.ஜெயலலிதா கூறிய மிக்சி,கிரைண்டர்,லேப்டாப் இவைகளில் அது வராதா? வந்தால் அடுத்து வரும் ஆட்சி அத்ற்கு விசாரணை வைப்பார்களே. அதற்கு ஜெயலலிதா தயாராக இருப்பாரா? இருக்காமலென்ன இதற்கு முன் போடப்பட்ட வழக்குகள் என்னவானது எனத் தெரியாதா நமக்கு?இருக்கவே இருக்கு வாய்தா. கலைஞர்,இனி கனிமொழிக்கு மட்டுமல்ல தனக்கும்,ஸ்டாலினுக்கும் கூட வாய்தாக்களை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும்.முதல் விசாரணை அறிவிக்கப்பட்டு விட்டது.இனி இது தொடரத்தானே செய்யும்?
===========================================================================

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?