ராஜபக்‌ஷே ஆலோசகர்,,,,,?


  இலங்கை சென்றுள்ள குழுவினரால் ஒரு நல்லது கூட நடக்கப்போவதில்லை.இக்குழுவினர் செல்லும் நோக்கம்இலங்கை இந்திய அரசாங்கங்களுக்கு இடையில் கடந்த காலங்களில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட பொருளாதார மற்றும் அரசியல் இணக்கப்பாடுகள் தொடர்பாக இக்குழு பேச்சு வார்த்தைகளை மேற்கொள்ளும் என இந்திய-இலங்கை அரசுகள் தெரிவித்துள்ளன.

இந்திய உயர்மட்டக் குழுவில் இந்திய பிரதமரின் செயலாளர் கே. நாயர், பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் மற்றும் இந்திய வெளிவிவகார செயலாளர் நிருபமா ராவ் ஆகியோர் அடங்குகின்றனர்.இக்குழுவில் உள்ள அனைவருமே காங்கிரஸ் அரசு வந்தகாலம் முதல் இலங்கை சென்று,சென்று வருகிறார்கள்.அவர்கள் செல்வதன் நோக்கமே ஈழத்தமிழர்களை ஒழிப்பது தொடர்பான ஆலோசனைகளை ராஜக்‌ஷேக்கு கூறத்தான் என சந்தேகம் ஒவ்வொரு தமிழனிடமும் உண்டு.இவர்களை நம்பி தான் கருணாநிதியும் அவப் பெயரை வாங்கிக்கட்டிக்கொண்டுள்ளார்.இவர்கள் கருணாநிதியையும் சந்தித்து-சந்தித்து சென்றுள்ளனர்.    

shivshankar menon and jayalalitha
                                                                                                  
சிவசங்கர மேனன்,நாயர் இருவரும் இதுவரை தமிழர் நலனுக்கு ஆதரவாக செயல் பட்டதே கிடையாது.நிருபமாராவ்வும் அப்படியே,மனிதாபிமானம் அற்றவர்கள் இவர்கள்.ஈழத்தமிழர் படும் சோகநிலையையும்,அவலங்களையும் நேரடியாகக் கண்டும் அவர்கள் நலனுக்காக எதையுமே செய்யாமல்-மத்திய அரசையும் ஈழத்தமிழர்களுக்கு எதிரான நிலையை எடுத்திட காரணமாக அமைந்தவர்கள் இவர்கள்.
         இவர்களுக்கு கேரள மாபியா என்ற பெயரை மத்திய அரசு வட்டாரம் வைத்டுள்ளது என முன்பு விக்கி லீக்ஸ் அம்பலப்படுத்தியுள்ளது நினைவிருக்கலாம்.
          இவர்களை சந்திப்பதையும் ,இவர்களின் தவறான ஆலோசனைகளையும் கேட்பதை உண்மையிலேயே ஈழமக்கள் மீது அன்பிருந்து-அவர்கள் நலனில் அக்கறை இருந்தால் ஜெயலலிதா தவிர்க்க வேண்டும்.
         இல்லை எனில் கருணாநிதி போல் ஈழநிலையில் அவமானத்தைதான் சந்திக்கவேண்டிய நிலை ஏற்படும்.
        சிவசங்கரமேனன் இந்திய ஆலோசகர் மட்டுமல்ல,ராஜபக்‌ஷேயின் ஆலோசகரும் கூட.இப்போது அவரின் இலங்கை செல்கை ஈழத்தமிழர் தொடர்பானதுதான்.ஆனால் அது பக்‌ஷே போர் குற்றத்தில் இருந்து தப்பிக்கும் வழிவகைகளைக் ஆராயும் வகைக்காக இருக்கலாம்.
         ஈழப்பிரட்சினையில்  ஜெயலலிதா தனது ராஜ குருக்கள் சோ,இந்து ராம்,தினமலர்  போன்றோர் ஆலோசனைகளை தவிர்க்க வேண்டும்.காரணம் இவர்களின் பக்‌ஷே ஆதரவு நிலைப்பாடு உலகம் அறிந்த ரகசியம் .
===================================================================
முன்பு நமது சுரன் வெளியிட்ட பதிவு .உங்கள் பார்வைக்கு மீண்டும்

இலங்கை{பிரச்சினை}தீர்ந்த காரணம்,,

 


”சிறீலங்காவில் இந்திய அமைதிப்படை தரையிறங்கிய காலத்தில் இந்தியாவின் புலனாய்வுத்துறை அதிகாரியாக பணியாற்றிய நாராயணன் பின்னர் வன்னிப் போர் நடைபெற்றபோது இந்திய அரசின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக பணியாற்றியிருந்தார்.
நாராணயனும், சிவசங்கர் மேனனும் இணைந்தே வன்னிப்போரின் இந்த முடிவுக்கான காரணிகளை வகுத்திருந்ததாக” சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் அதிகாரி 2005 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அமெரிக்காவுக்கு அனுப்பிய தகவலில் தெரிவித்துள்ளார்.
இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா கந்தியின் பணிப்பின்பேரில் அதிகளவான துணைஇராணுவக்குழுக்களின் அதிகாரத்தை நாராயணன் ஏற்படுத்தியிருந்தார்.
சோனியா கந்தியுடன் தனிப்பட்ட உறவுகளை பேணியவாறு நாராயணன் முன்னாள் தூதுவர் டிக்சித் என்பவரை போலவே செயற்பட்டிருந்தார்.
ராஜீவ் காந்தியின் பரம்பரைக்கு அவர் விசுவாசமானவர். இந்திய காவல்துறையில் 1955 ஆம் ஆண்டு இணைந்த நாராயணன் இந்திய புலனாய்வுப்பிரிவில் பல காலம் பணியாற்றியிருந்தார்.
அவர் 40 வருடங்கள் காந்தி குடும்பத்துடன் நெருங்கிய தொடர்பை கொண்டவர்.இவர் விடுதலைப்புலிகளின் மீது வெறுப்பைக்கொண்டவர்.அவர்களை அழிப்பது என்பதை தனது குறிகோளாகக் கொண்டவர் போல் செயல் பட்டார்”என அமெரிக்கா தனது தகவலில் மேலும் தெரிவித்துள்ளதாக விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது.
      இப்படிபட்ட கேரள மாபியாக்களை நாம் இலங்கை பிரச்சினைக்காக தூது அனுப்பிக்கொண்டும், கடிதம் எழுதிக்கொண்டும் இருந்தால் பிரச்சினையின் முடிவு இப்போதையது போன்றுதானே இருக்கும்.
       தங்கள் சொந்த கருத்தின் படி அரசின் வெளியுறவுக்கொள்கைகளை வகுத்து செயல்படும் இதுகளைப்போன்றவர்களால்தானே இன்னும் காஸ்மீர் போன்ற பிரச்சினைகள் தீராமலே உள்ளன.
=====================================================================
எப்படி இருந்த நான்  இப்புடி ஆயிட்டேன்......
காங்கிரஸ் கட்சியின் பத்திரிகையான "சந்தேஷில்' நேற்று எழுதப்பட்டுள்ள தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:"2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழலால், தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டசபை தேர்தல்களில் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மற்ற கட்சிகள் இந்த மாநிலங்களில் ஆட்சியைப் பிடித்துள்ளன.கூட்டணிக் கட்சிகளின் தவறுகளால், தென் மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி தன் ஓட்டு வங்கியை இழப்பது சரியல்ல. அதனால், இந்த மாநிலங்களில் கூட்டணி தொடர்பான கொள்கையை மறு ஆய்வு செய்ய வேண்டியது அவசியம். தி.மு.க.,வைச் சேர்ந்தவர்கள் "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழலில் ஈடுபட்டதால், பொதுமக்கள் அதிருப்தி அடைந்து, தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக சட்டசபை தேர்தலில் ஓட்டளித்துள்ளனர்.
-இவ்வாறு காங்கிரஸ் பத்திரிகை எழுதியுள்ளது.அதிகாரபூர்வ பத்திரிகை செய்தியும் அதிகாரபூர்வமாகத்தானே வெளியாகியிருக்கும்.


        ஆனால் இன்னும் ஏன் காங்கிரசை விட்டுவிடாமல் கருணாநிதி பிடித்து தொங்குகிறார் எனத்தெரியவில்லை.          காங்கிரசு தி.மு.க,வை வேண்டா விருந்தாளியாக -தீண்டத்தகாததாக பார்க்கிறது.காங்கிரசு கட்சியினரும் அப்படித்தான் பார்க்கிறார்கள் என்றால்,தி.மு.க,தொண்டர்களும் காங்கிரசின் உறவை -கூட்டணியை வெறுக்கத்தான் செய்கிறார்கள்.
        கருணாநிதி இன்னும் காங்கிரசைக் கட்டிப்பிடித்துக் கொண்டிருந்தால் தி.மு.க,தொண்டர்களின் மனம் கட்சியின் மீது வெறுப்பை தந்துவிடும்.அதனால் கட்சியே காணாமல் போய்விடும் அபாயம் உள்ளது.
      இப்போது தோல்வியால் துவண்டுள்ள தொண்டனை உற்சாகப்படுத்த வேண்டிய தருணம் .இப்போதும் விரட்டும் காங்கிரசின் பின் ‘கூட்டணி தொடரும்-சுமுக உறவு” என ஒடுவது மிகத்தவறான முடிவாகும்.
        கட்சியை விடுங்கள்.உங்கள் மகள்,ராஜா.இப்போது தயாநிதி[உங்கள் பேரன்] என யார் விடயத்திலும் எந்த உதவியும் செய்யாமல்.சி.பி.ஐ,யை கையில் வைத்துக் கொண்டு  கைக்கழுவும்  சோனியாவை இப்போதும் எந்த நம்பிக்கையில் சுற்றி,சுற்றி வருகிறீர்கள்.
         முலாயம் சிங்,மாயாவதி ,லல்லு பிரசாத் போன்றோர் மீதான சி.பி.ஐ,வழக்குகளை ஒரங்கட்டி வைத்துள்ள் சோனியா உங்கள் விடயத்தில் எப்படியான நிலை எடுத்துள்ளார் என்பதை குறலோவியம் எழுதிய உங்களால் புரிந்து கொள்ள இயலவில்லையா?
       கூடா நட்பு,கேடா நட்பு என எதுகையில் பேசிய பின்னும் உங்கள் முந்தைய தன்மான,பகுத்தறிவு,போன்ற  பழைய உணர்வுகள் எல்லாம் எங்கே போனது?
        முன்பு இளங்கோவனை வைத்துச் சொன்னார்கள்.இப்போது அவர்கள் கட்சி பத்திரிகையில் எழுதிவிட்டார்கள்.
        பிரியாங்கா குழந்தை கூறட்டும் எனக்காத்திருக்கிறீர்களா/?
கூட்டம் முடிந்த பின், கருணாநிதி நிருபர்களிடம் கூறியதாவது”:காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணியில், எந்தச் சிக்கலும் இல்லை. ஸ்பெக்ட்ரம் வழக்கில், மத்திய அரசு தலையிட வேண்டும் என நினைக்கவில்லை; நிர்பந்திக்கவும் இல்லை. அன்றாட நடைமுறை குறித்து விவாதித்து முடிவு செய்வதற்காக, உயர்நிலை செயல்திட்டக்குழு கூட்டம் நடந்தது. கூட்டணி குறித்து பொதுக்குழு தான் முடிவு செய்யும். சி.பி.ஐ.,யை மத்திய அரசு ஆயுதமாகப் பயன்படுத்தவில்லை. அரசியல் ஆயுதமாக இருக்குமா என்பது எனக்கு தெரியாது”.இவ்வாறு கருணாநிதி தெரிவித்தார். 
         எப்படியிருந்த நான் இப்புடியாயிட்டேன். -இதையும் சொல்ல மறந்திட்டீங்களே.
       மிசாக் கால தி.மு.க,வின் வீரமான -தன்மான செயல்பாடுகள்.அதன் பின் இப்போது ஆட்சியில் அமரும் வரையிலான உங்கள் செயல் பாடுகள் இப்போது தேவையின்றி மனக்கண்ணில் தோன்றுகிறது.

       அது அந்த காலக் கட்சியை குடும்பமாக எண்ணிய கருணாநிதி.

        இப்போது குடும்பத்தை கட்சியாகக் கருதும் கருணாநிதி.

அலைவரிசை உங்களை இப்படி அலைபாய வைத்து விட்டதே..........
   

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?