ராவண லீலா
ராம்தேவ் பேசியது: ”ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் பெண்கள் உட்பட 20 இளைஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு எல்லாவிதமான பயிற்சிகளும் வழங்கப்படும். இவர்கள், தங்கள் வாழ்க்கையை தியாகம் செய்வதற்கும் தயாராக இருப்பார்கள். ஆனால், இந்தப்படை அமைதியான முறையில் தான் போராடும்.நாட்டின் தற்போதைய தேவையைக் கருதி (ராம்லீலா மைதானத்தில் நடந்த அராஜகம்) இளைஞர்களுக்கு ஆயுதப்பயிற்சி வழங்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. எனது அடுத்த உண்ணாவிரதப் போராட்டம், டில்லி ராம்லீலா மைதானத்தில் தான் நடைபெறும். இதில், ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் பங்கேற்பர். அப்போதும், போலீஸ் அராஜகம் நடக்கும்பட்சத்தில், அதற்கு தகுந்த பதிலடி தரப்படும்”.இவ்வாறு ராம்தேவ் ஆவேசமாக பேசினார்.
பகவான் ராம்தேவின் ஆர்.எஸ்.எஸ். முகம் வெளிப்பட்டுவிட்டது. இவர் சாமியார் மாதிரி தெரியவில்லை.நக்ஸலைட் பேச்சல்லவா பேசுகிறார். ஆயுதம் தாங்கி ஊழலையும் ,கறுப்புப்பணத்தையும் ஒழிக்கப்போகிறாரா.?
உண்ணாவிரதம் என்பதே அகிம்சை எனும் கூறும் வழியில் வந்தது.தன்னை வருத்தி கோரிக்கைகளை அடையும் வழி.ஆனால் அதில் இந்த சாமியார் கலவரத்தை ஏற்படுத்தி தன்னை பெரியவராக்கிக் கொள்ள நினைக்கிறார்.
ஆயுதங்களுடன் இளைஞர்களை இவர் தயாரித்து வந்தால் இவரை விட பெரிய அதிகாரம் உள்ள அரசு ஆயுதங்களுடன் படையைக்கொண்டுவரும்.
பலியாகப் போவது இவரை நம்பிவரும் கூட்டம்தான்.
கறுப்புப் பணத்தை ஒழிக்க இவ்வளவு தீவிரமாக உள்ள சாமியார்.தன்னிடம் 50000 பணம் கொடுத்து முன் வரிசை யோகா பயிலவரும் நபர்களிடம் அந்தபணம் கணக்கில் உள்ளதா?கருப்புப் பணமா? எனக்கேட்டு பணத்தைக் கையில் தொடாமல் இருந்தாலே அவர் பக்த கேடிகளின் கருப்புப் பணத்தை ஒழித்து விடலாமே.
அவரின் 200 க்கும் மேற்பட்ட பினாமி நிறுவனங்களின் கணக்கு-வழ்க்குகளை ஒழுங்கு செய்தாலே நாட்டில் பாதி கருப்புப்பணம் ஒழிந்து போய்விடுமே.
ஆயுதம் எடுத்தவன் ஆயுதத்தாலே சாவான் ,இது பல மதங்களின் போதனைகளிலும் உள்ளது. ஒரு சாமியாரான உங்களுக்குத்தெரிய வில்லையா?
==========================================================================
#நமது பிறந்த ஆண்டின் முக்கிய நிகழ்வுகள் அறிந்து கொள்ள
ஒவ்வோரு ஆண்டும் இவ்வுலகில் என்னனென்ன செய்திகள் பிரபலம், யாருக்கு என்ன விருது கிடைத்தது, என்ன நிகழ்வுகள் நடந்தன, அந்த ஆண்டின் அரிய கண்டுபிடிப்புகள், பல விதமான நிகழ்வுகளை பற்றி நாம் அறிந்து கொள்ள ஒரு தளம் உதவுகிறது.நமது பிறந்த ஆண்டில் நடந்ததை அறிந்து கொள்வது எவ்வளவு மகிழ்வாக இருக்கும் .
இந்த இணையதளத்தில் நுழைந்தவுடன் நமக்குத் தேவையா்ன ஆண்டினை -அல்லது பிறந்த ஆண்டினைபதிவு செய்தால் உடனேஆண்டுகள் பின்னோக்கி நகர்ந்து அந்த ஆண்டின் முக்கிய செய்திகள் ஒன்றன் பின் ஒன்றாக வந்துக் கொண்டிருக்கும். இந்தத் தளம் சற்று வித்தியாசமாகவும், பயனுள்ளதாகவும் உள்ளது.
இணையதள முகவரிhttp://whathappenedinmybirthyear.com/