’புனிதர்கள்’,,,

      $ புட்டபர்த்தி சாய்பாபா பயன்படுத்தி வந்த யஜுர் மந்திர் அறைகளில் கண்டுபிடிக்கப்பட்ட 35 கோடி பணம், தங்கம், வெள்ளி நகைகள், பொருட்கள்தான் சர்ச்சையின் ஆரம்பம். கலெக்டர் முன்னிலையில் திறப்பதாக இருந்தது, டிரஸ்ட் உறுப்பினர்கள் சிலரால் அவசர அவசரமாக முதல்நாளே திறக்கப்பட்டது அடுத்த சர்ச்சை. இந்த நிலையில், யஜுர் மந்திரில் இருந்து பணம், நகைகள், பொருட்கள் கடத்தப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
 
Tamil news paper, Tamil daily news paper, Tamil news, Tamil movie news, Tamil news paper online, political news, business news, financial news, sports news, today news, India news, world news, daily news update
ஏற்கனவே, சனிக்கிழமை இரவு சொகுசு காரில் 35 லட்சம் ரூபாய், ஞாயிறு அதிகாலை வால்வோ பஸ்சில் 10 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவங்களில் காரில் சென்ற, ஆசிரம பணிகளை கவனிக்கும் சிவில் இன்ஜினியர் ஹரிஷ் ஷெட்டி கைது செய்யப்பட்டார். அவரிடம் பணம் கொடுத்து அனுப்பிய அவரது அண்ணன் சோகன் ஷெட்டியும் பிடிபட்டார்.

காரில் பணம் அனுப்பி வைத்ததாக கூறப்படும் அறக்கட்டளை டிரைவர் சந்திரசேகர் தப்பிச் செல்ல முயன்றபோது, கர்நாடக அரசு பஸ்சில் கைது செய்யப்பட்டார். இவர்கள் மூவரும் கோர்ட்டில் ஆஜர் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பஸ்சில் பணம் கடத்தியதாக கைது செய்யப்பட்ட இருவர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள். அவர்கள் பற்றிய விவரம் தெரியவில்லை. ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. இவர்கள் மூலம், டிரஸ்ட் உறுப்பினர்கள் உட்பட சில விஐபிக்களுக்கு போலீஸ் குறி வைத்துள்ளதாக தெரிகிறது.

இவர்களில் சோகன், ஹர்ஷ் இருவரும் கர்நாடக முன்னாள் டிஜிபி உமாநாத் ஷெட்டியின் மகன்கள். சென்னை தொழிலதிபரும், டிரஸ்ட் உறுப்பினருமான சீனிவாசனின் டிரைவர்தான் சந்திர சேகர். டிரஸ்ட்டுக்கு சொந்தமான பணம் தானா என்பதை ஆசிரம நிர்வாகிகள் உறுதி செய்யவில்லை. டிரஸ்ட்டும் அதிகாரப்பூர்வமாக எதுவும் சொல்லவில்லை. சில உறுப்பினர்கள் மட்டும்தான் இந்த விஷயத்தில் பரபரப்பு காட்டி வருகின்றனர்.

சீனிவாசனும், இன்னொரு டிரஸ்ட் உறுப்பினரான, பாபாவின் உறவினர் ரத்னாகரும்தான் இந்த பணம் தொடர்பாக விளக்கம்  அளித்து வருகின்றனர். ‘பணம் 12 ப க்தர்கள் தர இருந்த நன்கொடை; அதை அவர்கள் ஆவணங்களை காட்டி பெற்றுக் கொள்வர்’ என்று ரத்னாகர் கூறினார். ஆனால் இதுவரை எந்த பக்தரும் நேரில் வந்து பணத்தை பெற்றுக்கொள்ளவும் இல்லை; ஆவணங்களை காட்ட வரவும் இல்லை என்று போலீஸ் உயர் அதிகாரி  ஒருவர் கூறினார்.

யாரும் உரிமை கோராத அந்த பணம், ஆசிரமத்தில் இருந்துதான் வெளியே கடத்தப்பட்டிருக்கலாம் என்பதால் போலீசார் விசாரணை நடத்த உள்ளனர். இதனால், சீனிவாசன், ரத்னாகர் ஆகியோருக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. போலீஸ் நிலையத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க இவர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். புட்டபர்த்தியில் நடக்கும் பணம் கடத்தல் சம்பவங்கள், பக்தர்களுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இப்போதே ஆசிரமத்துக்கு வருவோர் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இந்த நிலையில் போலீஸ் குவிக்கப்பட்டு உள்ளது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

ஹரிஷ் ஷெட்டி கைது செய்யப்பட்டு, காரில் இருந்து 35 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதும், பல விஐபிக்கள் போன் செய்து, அவரை விடுவித்து, பணத்தை ஒப்படைத்து விடும்படி மிரட்டப்பட்டது.  இப்படி மிரட்டல் வரும் என்று தெரிந்த உயர் அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் மொபைல் போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டனர். மத்திய அமைச்சர் ஒருவரின் பெயரையும் சொல்லி சிலர் மிரட்டியுள்ளனர். எனினும், இவர்களை எல்லாம்  கண்டுகொள்ளாமல், ஹரிஷ், சோகன் மட்டுமின்றி, டிரைவர் சந்திரசேகரையும் போலீஸ் கைது செய்து கோர்ட்டில் ரிமாண்ட் செய்து விட்டது விட்டனர்.

புட்டபர்த்தி ஆசிரமத்தில் இருந்து இப்படி அடிக்கடி பணம், நகைகள் கார்களில் கடத்தப்படுவதுண்டு. முறையான ஆவணங்கள் எதுவும் இருக்காது. வழியில் மடக்கினால், உயர் போலீஸ் அதிகாரிகள் முதல் அமைச்சர்கள் வரை போனில் எச்சரிப்பதுண்டு. அதனால் நாங்கள் விட்டுவிடுவோம். இதுதான் இத்தனை நாளாக நடந்து வந்துள்ளது என்று போலீஸ் அதிகாரிகள் கூறுகின்றனர்.

சாய்பாபா மறைந்த நிலையில், அவர் இதுவரை யாரையும் உள்ளே விடாத யஜுர் மந்திரில் கோடிக்கணக்கில் பணம், நகைகள் இருப்பது தெரியவந்ததும்தான் இப்படி  கடத்தல் அதிகரித்துள்ளது. அதனால் இனியும் கடத்தல் நடப்பதை தவிர்க்க ஆசிரமத்தை மட்டுமின்றி, புட்டபர்த்தியை சுற்றி போலீஸ் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
சாய்பாபாவின் அக்கா மகள் சேத்னா ராஜு. ஆசிரம பெண்கள் நல டிரஸ்ட்டின் தலைவி இவர். பொறுப்பை விட்டு இவரை வெளியேற்ற சிலர் முயற்சி செய்து வருகின்றனர். ‘எனக்கு கொலை மிரட்டல் வருகிறது. யஜுர் மந்திரை திறக்கும் போது, பாபாவின்  குடும்பத்தினர் யாரையும் விடவில்லை. ரத்னாகர் தவிர யாருக்கும் அனுமதியில்லை. டிரஸ்டில் உள்ள சிலர் திட்டமிட்டு சதி செய்கின்றனர்’ என்று அவர் கூறியுள்ளார்.
சாய்பாபா படத்தில் இருந்து திருநீர் கொட்டியது போல் வந்ததுதான் இந்த பணம்.எனவே அரசுக்கு தெரிவிக்க வேண்டியதில்லை என்று கூறிவிடுவார்களோ.
=============================================================================
பிரதமர்கள்  புனிதர்களா,,,,,,,,,,,
பிரதமர் மற்றும் உயர்நிலை நீதிபதிகளை விசாரணை வரம்புக்குள் கொண்டு வருவது, நாடாளுமன்றத்துக்குள் எம்.பி.க்களுக்கு நடத்தை விதிகளை வகுப்பது, லோக்பால் அமைப்புக்கு உறுப்பினர்களைத் தேர்வு செய்வது, அவர்களை நீக்கும் நடைமுறையை வகுப்பது ஆகியவற்றில் இரு தரப்பினருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டதாகத் தெரிகிறது.    இது தொடர்பாக அமைச்சர் கபில்சிபல் கூறுகையில், "அவர்கள் அவர்களது வரைவு மசோதாவைக் கொடுத்தார்கள். நாங்கள் எங்களது மசோதாவைக் கொடுத்தோம். இரண்டின் மீதும் குறுகிய விவாதம் நடந்தது. 6 முக்கியப் பிரச்னைகளில் ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை. மேலும் இரு பிரச்னைகள் தீர்வு காணப்படாமல் இருக்கின்றன' என்றார்.    அரசு தரப்பில் தரப்பட்டிருக்கும் மசோதா தொடர்பாக ஹசாரே குழுவினர் கருத்துத் தெரிவிக்க இன்னும் இரண்டு மூன்று நாள்கள் அவகாசம் இருக்கின்றன என்று அவர் மேலும் தெரிவித்தார்.     அரசு அளித்திருக்கும் வரைவு மசோதா குறித்து ஹசாரே குழுவினர் கடும் அதிருப்தி தெரிவித்திருக்கின்றனர். லோக்பால் அமைப்பின் உறுப்பினர்களைத் தேர்வு செய்யும் குழுவில் ஆளும் கட்சியைச் சேர்ந்த 7 பேர் இருக்கும் வகையில் அரசின் மசோதா உருவாக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார் பிரசாந்த் பூஷண்.    இதற்கு முந்தைய வரைவிலாவது, பிரதமரை விசாரணை வரம்புக்குள் கொண்டு வருவதற்கான வாய்ப்பு இருந்தது. ஆனால் இப்போதைய வரைவில் அதுவும் இல்லை என்று அரவிந்த் கேஜரிவால் குறைகூறியிருக்கிறார்.   லோக்பால் வரைவுக் குழுவின் கடைசிக் கூட்டம் தோல்வியில் முடிந்திருப்பதால் திட்டமிட்டபடி, "அரசுக்குப் பாடம் புகட்டும் வகையில்மீண்டும் ' ஆகஸ்ட் 16-ம் தேதி ஊழலுக்கு எதிரான போராட்டத்தைத் தொடங்கப் போவதாக அண்ணா ஹசாரேகுறியுள்ளார்.
                  

    மத்திய அரசு பிடிவாதம் தேவையற்றது.
 பிரதமர்கள்-நீதிபதிகள் எல்லோரும் புனிதர்களா?எவ்வளவு மகா,மகா ஊழல்கள் இந்த ஆட்சிகாலத்தில் தொடர்ந்து வருகிறது.இதனைப்பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது என உயர் பொறுப்பில் உள்ள பிரதமர் ஒருவர் சாதாரண பாமரன் போல் சொல்லிக்கொண்டேயிருந்தால் அவரின் சுத்தம் கேள்விக்குரியதாக மட்டுமல்ல-கேலிக்குரியதாகவும் ஆகிவிடுகிறதே.
     அவரின் ‘அய்யா சுத்தம்’[Mr,clean] நிருபிக்கப்படுவதற்காகவாட்டும் பிரதமரை
 இந்த லோக்பால் வரையறைக்குள் கொணரவேண்டும்.
      இப்போது நமது தி.மு.க, ஆளும் கூட்டணி கூட்டத்தில் பிரதமரை லோக்பாலில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தியதாக தெரிகிறது.
     பின்னே காங்கிரசார் மட்டும் திகாரை பார்க்காமல் நழுவினால் எப்படி.அந்தகோபம் தி.மு.க,விற்கு இருப்பது நியாயம்தானே.  

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?