வறுமைக்கோடு

ஏழைகள் யார்?
-பிருந்தா காரத் எம்.பி.,
வறுமைக்கோட்டுக்குக்கீழே உள்ள மக் கள் தொகைக்கணக்கீடு சில தேர்ந்தெடுக்கப் பட்ட மாநிலங்களில் நடத்தப்படத் திட்ட மிடப்பட்டுள்ளது. ஏராளமான ஏழைமக் களைக் கொண்ட இந்தியா போன்ற நாட்டில் ஏழைகளின் எண்ணிக்கையை கணக்கிடுவ தற்கான முயற்சியானது, அவர்களின் எண் ணிக்கையைக் குறைத்துக்காட்டுதல், அவர் களை பல பிரிவுகளாகப்பிரித்தல், அனை வருக்கும் வழங்கப்படவேண்டிய உரிமை களை சிலகுறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டும் சுருக்குதல் போன்ற நோக்கங்களை உள்ள டக்கியதாக இருக்கக்காண்கிறோம். தற்போ தைய நவீனதாராளமய வரைபடத்தின் உள் ளார்ந்த பகுதியாக இது இருப்பதால், இந்த மக் கள் தொகைக்கணக்கீட்டின் உண்மையான நோக்கத்தை கூர்மையாக உற்று நோக்க வேண்டியுள்ளது. இதேபோன்றதொரு மக்கள் தொகைக்கணக்கெடுப்பு 2002ம் ஆண்டில் நடத்தப்பட்டது. அதற்காக வெளியிடப்பட்ட கேள்வித்தாளில் ஒருவர் ஒருநாளைக்கு எத் தனைவேளை சாப்பிடுகிறார். ஒரு பெண்ணி டம் எத்தனை சேலைகள் சொந்தமாக இருக் கின்றன என்பது போன்ற கேள்விகள் கேட்கப் பட்டிருந்தன. இதன்நோக்கம் யாதெனில், ஒரு வேளை மட்டும் உணவு உண்பவரும், ஒரு சேலைக்கு மட்டுமே சொந்தமான பெண் ணும் தான் வறுமைக்கோட்டுக்குக் கீழா னோர் பிரிவில் சேர்க்கப்படுவார்கள் என்ப தாகும். இவை போன்ற ஆட்சேபணைக்குரிய கேள்விகள் 2011-ம் ஆண்டின் கேள்வித்தா ளில் இடம்பெறவில்லை. 2002-ம் ஆண்டின் கேள்வித்தாளில் 13 கேள்விகள் இருந்தன. அந்த ஒவ்வொரு கேள்விக்கும் 0 முதல் 4 வரையிலான மதிப்பெண்கள் வழங்கப்பட் டன. ஒருவர் 0 முதல் 52 மதிப்பெண்கள்வரை வாங்க முடியும். நீங்கள் 0 மதிப்பெண் வாங்கி னால் பரம ஏழையாகக் கருதப்படுவீர்கள். 2011-ம் ஆண்டின் கேள்வித்தாளில் 7 கேள்விகள் தான் உள்ளன.அதில் 0 முதல் 7 வரை மதிப்பெண்களை நீங்கள் பெறமுடியும். நீங்கள் 7 மதிப்பெண்களை வாங்கினால் மிகவும் ஏழையாகக் கருதப்படுவீர்கள்.

கணக்கெடுப்பின் போது 13 பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் எத்தகைய கேள்வியும் கேட் கப்படாமல், வறுமைக்கோட்டுக்குக் கீழான பிரிவிலிருந்து விலக்கி வைக்கப்படுவார்கள். இவ்வாறு அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர், சொந்தமாக டிராக்டர் வைத் திருப்போர். 50 ஆயிரம் ரூபாய் வரை கடன் பெறும் தகுதி கொண்ட கிசான் அட்டை வைத் திருப்போர் ஆகியோரை வறுமைக்கோட்டுக் குக் கீழானோர் பட்டியலிலிருந்து விலக்கி வைப்பதற்கு ஆட்சேபணை இருக்க முடி யாது. ஆனால் பாசனவசதியுடன் குழாய் கிணறு சொந்தமாக வைத்திருக்கும் 2.5 ஏக்கர் நிலமுள்ள விவசாயியும் விலக்கி வைக்கப் படும் பட்டியலில் இடம் பெற்றுள்ளார். கிராமப் புற ஏழை விவசாயிகளின் வருமானம் நிலை யற்றது. கடன் தொல்லை அவர்களை வாட்டி வதைக்கிறது. வறட்சியாலும் வெள்ளத்தாலும் மாறி மாறி பாதிக்கப்படும் அவல நிலையை அவர்கள் தொடர்ந்து எதிர்கொள்ள வேண்டி யுள்ளது. இப்படிப்பட்ட ஏழை விவசாயிகளை வறுமைக்கோட்டுக்குக் கீழானோர் பட்டியலி லிருந்து தொடர்ந்து விலக்கிவைப்பது, கிராமப் புற இந்தியாவின் விரிவான பகுதிமக்களுக்கு அநீதி இழைப்பதாக இருக்கும்.
        


  •                 

    இதேபோல விவசாயமற்ற வணிக நிறு வனத்தை நடத்துவதாக அரசாங்கத்தில் பதிவு செய்து கொண்ட குடும்பங்களும் எத்த கைய பரிசீலனையுமின்றி விலக்கி வைக்கப் படும். மகளிர் சுய உதவிக் குழுக்களால் நடத் தப்படும் நுண் நிறுவனங்களும், இவை போன்ற வேறுபலவும் அரசாங்கத்தால் பதிவு செய்யப்படுகின்றன. இவற்றையெல்லாம் எத்தகைய பரிசீலனைக்கும் உட்படுத்தாமல் விலக்கி வைப்பது நியாயமா?

    மானியங்களின் பயன் வேண்டாமென்று தங்களைத் தாங்களே விலக்கி வைத்துக் கொள்ளும் தமிழ்நாட்டு அனுபவம் சரியான தாகவும் நியாயமானதாகவும் இருப்பதாக எடுத்துக் கொள்ளலாம். சிலரை பரிசீலனை யின்றி விலக்கி வைக்கும் போது, எஞ்சியவர் கள் அனைவரையும் பரிசீலனையின்றி பட் டியலில் இணைத்துக் கொண்டால் அது அர்த்தமுள்ளதாக இருக்கும்.

    பரிசீலனையின்றி 5பிரிவினரை மட்டுமே இணைக்க தற்போதைய வரையறை அனு மதிக்கிறது. இதன் மூலம் கிராமப்புற ஏழை களில் 5விழுக்காட்டினர் கூட வறுமைக் கோட்டுக்குக்கீழே உள்ள பிரிவில் வரமாட் டார்கள். ஆதரவற்றவர்கள் என்ற பிரிவின் கீழ் பிச்சை எடுப்பவர்கள் மட்டுமே சேர்க்கப்படு வார்கள். இரண்டு மூத்த குடிமக்களைக் கொண்ட குடும்பம் வாரத்தில் நான்கு, ஐந்து நாட்கள் மட்டுமே வேலை செய்து கொஞ்சம் வருவாய் ஈட்டினாலும் கூட, அவர்கள் ஆதர வற்றவர் பட்டியலில் வரமாட்டார்கள். ஏனென் றால் அவர்கள் பிச்சை எடுப்பதில்லை. ஒண்டக்குடிசை இல்லாதோர், கைகளால் மலம் அள்ளுவோர், ஆதிப்பழங்குடியினர், கொத்தடிமை முறையிலிருந்து சட்டப்பூர்வ மாக விடுவிக்கப்பட்டவர்கள் போன்றவர் மட்டும் பரிசீலனையின்றி சேர்த்துக் கொள் ளப்படுவார்கள். சட்டப்பூர்வமில்லாமல் தானே தப்பியோடிய கொத்தடிமைக்கு இந்த சலுகை கிடையாது. எஸ்.சி., எஸ்டி பிரிவினர், மாற்றுத்திறனாளிகள், உடலுழைப்பின் மூலம் வருவாய் ஈட்டும் அத்துக்கூலிகளுக்கும் இதுபோன்ற சலுகை கிடையாது.

    இப்போதைய மதிப்பெண் முறையின்படி, பின்வரும் நிலையிலுள்ள ஒரு ஆதிவாசிக் குடும்பம் பெறக்கூடிய மதிப்பெண்களைக் கணக்கிட்டால், இதன் மோசமான தன்மை யைப் புரிந்துகொள்ள முடியும். மினா உசேன்டி என்ற ஏழை ஆதிவாசிப் பெண்ணின் குடும் பம் ஐந்து உறுப்பினர்களைக்கொண்டது. அதில் 35 வயதான உசேன்டி, அவரது 58 வயது தாயார், 17 வயது பையன், போலியோவி னால் பாதிக்கப்பட்ட இரண்டு சிறுமிகள் ஆகி யோர் இடம் பெற்றுள்ளனர். ஒரு ஏக்கர் விவ சாய நிலம் உள்ள அக்குடும்பம் உழைத்துப் பிழைக்கிறது. இக்குடும்பம் பெறக்கூடிய மதிப்பெண்கள் பின்வருமாறு அமையும்.

    கேள்வி (1) சுவர்கள் மற்றும் மேற்கூரை யுடன் கூடிய ஒரு அறை மட்டும் கொண்ட வீடாக இருந்தால் ஒரு மதிப்பெண் வழங்கப் படும். ஆனால் உசேன்டியின் வீடு இரண்டு அறைகள் கொண்டது என்பதால் அவர்களுக்கு மதிப்பெண் கிடையாது.

    (2) 16 வயது முதல் 59 வயதினர் இல்லாத குடும் பத்துக்கு ஒரு மதிப்பெண் வழங்கப்ப டும். தாயாரின் வயது 58 என்பதால் மதிப்பெண் கிடையாது.

    (3) பெண்கள் குடும்பத்தலைவராக இருந் தால், 16முதல் 59 வயது வரையிலான ஆண் உறுப்பினர் இல்லாத குடும்பத்துக்கு ஒரு மதிப்பெண் வழங்கப்படும். உசேன்டியின் குடும்பத்தில் 17 வயது பையன் ஒருவன் இருப்பதால் இக்கேள்விக்கும் மதிப்பெண் கிடையாது.

    (4) இரண்டு மாற்றுத்திறனாளிகளைக் கொண்ட குடும்பமாக இருந்த போதிலும், நன்குசெயல்படக்கூடிய ஒரு உறுப்பினர் இருப்பதால் மதிப்பெண் எதுவும் கிடையாது.

    (5) ஆதிவாசிப்பிரிவைச் சேர்ந்தவர் என்ப தற்காக உசேன்டியின் குடும்பத்துக்கு ஒரு மதிப்பெண் வழங்கப்படும்.

    (6) 25 வயதுக்கு மேற்பட்ட எழுதப்படிக் கத் தெரியாதவரைக் கொண்ட குடும்பத்துக்கு ஒரு மதிப்பெண் உண்டு. ஆனால் மினா உசேன்டி 4 வது வரை படித்துள்ளதால் மதிப் பெண் கிடையாது.

    (7) நிலமற்ற விவசாயக் குடும்பங்களுக் குக் கொடுக்கப்படும் ஒரு மதிப்பெண்ணும் இவருக்குக் கிடைக்காது.

    அரசாங்கத்தின் வரையறையின்படி இந்த ஏழை ஆதிவாசிக் குடும்பத்துக்கு 7க்கு 1 மதிப் பெண் மட்டுமே கிடைக்கும். இவ்வாறு நிர்ண யிக்கப்படும் மதிப்பெண்கள் சம்பந்தப்பட்ட மாநிலத்துக்கான கட் ஆப் மதிப்பெண்களுக் குள் வந்தால் தான், ஒருவர் வறுமைக்கோட் டுக்குக் கீழானோர் பட்டியலுக்குள் வரமுடியும். அதாவது, ஒவ்வொரு மாநிலத்திலும் எத் தனை விழுக்காடு மக்கள் வறுமைக்கோட் டுக்குக் கீழே வருகின்றனர் என்பதை திட்டக் குழு தீர்மானித்துள்ளது. மேற்குவங்கத்தின் உச்சவரம்பு 42 சதமே. இவ்வாறு கணக்கிடும் போது 4 மதிப்பெண்கள் பெறுபவர் மட்டுமே இந்த 42 சதத்துக்குள் வருபவர்களாக இருக் கலாம். மத்தியப்பிரதேசத்தில் 5 முதல் 7 மதிப்பெண்கள் பெறுபவர்கள் கூடுதலாக இருக்கக் கூடுமாதலால் அங்கு கட் ஆப் மதிப்பெண் 5 ஆக இருக்கக்கூடும்

    இத்தகைய சூழலில் ஏழை ஆதிவாசிப் பெண்ணாகிய மினா உசேன்டியின் குடும்பத் துக்கு பிபிஎல் அட்டை கிடைக்காமல் போய் விடும். திட்டக்குழு மேதாவிகளால் தன்னிச் சையாகவும், அநியாயமாகவும் நிர்ணயிக்கப் பட்டுள்ள வரையறைகள், கோடிக்கணக்கான ஏழை மக்களின் உணவுப் பாதுகாப்புக்கு வேட்டுவைக்கும் முறையில்தான் அமைந் துள்ளன. இந்த மக்கள்தொகைக் கணக்கெ டுப்பு நாட்டிலுள்ள ஏழை மக்களின் எண் ணிக்கையை குறைத்துக்காட்டுவதற்காகவே செய்யப்பட்டுள்ளது என்பது கண்கூடு.

    நன்றி: தி இந்து (9.6.2011)

    இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

    2025ல் தங்கம் விலை

    வினேஷ் போகத் வென்றார்!

    முடிவுக்கு வருகிறதா?