ஜாமீன் ராணியும்-வாய்தா ராணியும்,,,,,
சுவிஸ் நாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள இந்தியாவின் கறுப்புப் பணத்தில் பாதிப் பணம் காங்கிரஸ் கட்சித் தலைவர்களுக்கும், அமைச்சர்களுக்கும் மற்றும் அக்கட்சியினருக்கும் சொந்தமானது என பாஜக எம்பி மேனகா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
” சிபிஐ அமைப்பை காங்கிரஸ் தனது கைப்பாவையாக பயன்படுத்தி வருகிறது. இந்த அமைப்பை தனது லாக்கரில் காங்கிரஸ் பூட்டி வைத்துள்ளது. தேவைப்படும் போது அதை எடுத்து பயன்படுத்துகிறது. எதிர்க்கட்சிகளுக்கு எதிராக சிபிஐ ஏவி விடப்படுகிறது’.================================================
$புட்டபர்த்திசாய்பாபா ஆசிரமத்தில் சாய்பாபாவின் தனி அறை யஜூர்வேத மந்திர் திறக்கப்பட்டபோது,ஒரு மிகபெரும் புதையலே இருந்தது.
அறைய்iனுள் பல குவியல்கள் பணமும், தனித்தனிக் குவியல்களாக நகைகளும்,வைரங்களும் இருந்தது. இது தவிர ஏகப்பட்ட கம்ப்யூட்டர்களும் இருந்தன. பணம், நகையை வங்கியில் டெபாசிட் செய்துள்ளனர்.
பெரும் புதையலை ஒத்திருந்த குவியல் குவியலான பணம் மற்றும் நகைகளை பிரித்து கணக்கெடுக்க அங்குள்ள பெரும் எண்ணிக்கையிலான மாணவர்கள் குழுவாக சேர்ந்து செயல்பட்டுள்ளனர்.அந்த அளவு பணம் மற்றும் நகைகளின் குவியல் இருந்தது.
பாபா டிரஸ்டின் உறுப்பினர் ரத்னாகர் பத்திரிகையாளர்களிடம் கூறும் போது யஜுர் மந்திரில் மொத்தம் 11 கோடியே 56 இலட்சம் பணக்கட்டுக்களும், 98 கிலோ தங்கமும் கண்டெடுக்கப்பட்டதாக கூறினார்.
கணக்கெடுப்பு யாவும் முடிந்த பின்னர், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டு, அவர்கள் வந்தவுடன் பெருமளவில் இருந்த பணத்தையும், நகைகளையும் ஸ்டேட் பாங்கில் டெபாசிட் செய்துள்ளனர்.
சாய்பாபாவின் தனி அறையில் இருந்த இந்த புதையல் ஒரு சாமியாரின் பற்றற்ற வாழ்க்கையை பறைசாற்றிவிட்டது.
இவ்வளவு பணத்திற்கும் கணக்கு கிடையாது.அரசுக்கு வரியும் கட்டப்பட வில்லை.இது போன்ற சாமியார்கள்,அறக்கட்டளைகளின் கணக்கை அரசு சரியாகக் கண்காணிக்க வேண்டும்.இங்குதான் ஊழலும்-முறைகேடுகளும் ஆரம்பமாகின்றன.
@சுப்ரீம் கோர்ட்டில் கனிமொழி, சரத்குமார் இருவரின் மனுக்கள் மீது விசாரணை நடந்தது. கனிமொழி எம்.பி சார்பில் ஆஜரான வக்கீல் வாதாடுகையில், கோர்ட்டு விதிக்கும் எத்தகைய நிபந்தனையையும் ஏற்க கனிமொழி தயாராக உள்ளார்.
சாமியார்களின் தனி அறை மர்மம். | ||
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு அனைத்துக்கும் அவர் கட்டுப்பட்டு நடப்பார். அவர் தன் மகனை பிரிந்துள்ளார். எனவே கருணை அடிப்படையில் கனிமொழியை ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இதற்கு சி.பி.ஐ தரப்பில் ஆஜரான வக்கீல் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அவர் வாதாடுகையில் கூறியதாவது: கலைஞர் டி.வி.க்கு டி.பி.ரியாலிட்டி நிறுவனம் கொடுத்த ரூ.214 கோடி கடனாக பெறப்பட்டது அல்ல. அது ஊழல் பணம் தான். இது தொடர்பான விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மேலும் சட்டவிரோதமாக நடந்த ரூ.214 கோடி பண பரிமாற்றத்துக்கான அசல் ஆவணங்கள் இன்னும் கைப்பற்றப்படவில்லை.
இந்த சூழ்நிலையில் கனிமொழி விடுதலை செய்தால் அவர் அசல் ஆவணங்கள் உள்ளிட்ட ஆதாரங்களை அழித்து விடுவார். எனவே அவரை ஜாமீனில் விடுவிக்கக் கூடாது. சி.பி.ஐ கோர்ட்டும், டெல்லி ஐகோர்ட்டும் இந்த காரணங்களுக்காக ஏற்கனவே கனிமொழி மனுவை நிராகரித்து இருப்பதை உங்கள் கவனத்துக்கு கொண்டு வருகிறேன்.
சுமார் 1 1/2 மணி நேரம் வக்கீல் விவாதம் நடந்தது. இரு தரப்பு வாதத்துக்குப் பிறகு நீதிபதிகள் சிங்வி, சவுகான் இருவரும் தீர்ப்பை மதியம் 12.30 மணிக்கு ஒத்தி வைத்தனர். 12.35 மணிக்கு தீர்ப்பு வழங்கப்பட்டது. சி.பி.ஐ வக்கீலின் கோரிக்கைகளை ஏற்றுக் கொண்ட சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் இருவரும், கனிமொழி, சரத்குமாரின் மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்தனர்.
ஸ்பெக்ட்ரம் வழக்கில் முக்கிய சதியாளர்கள் என்று குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளதால் ஜாமீனில் விடுவிக்க இயலாது என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். நீதிபதிகள் மேலும் கூறுகையில்,"குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்ட பிறகு கனிமொழி, சரத்குமார் இருவரும் சி.பி.ஐ சிறப்புக் கோர்ட்டை ஜாமீன் கோரி அணுகலாம்" என்றனர்..
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரம் காரணமாக கனிமொழி எம்.பி கைதாகி இன்றுடன் சரியாக ஒரு மாதம் முடிகிறது.
அது சரி.ஜெயலலிதாவை கருணாநிதி கட்சியினர் வாய்தா ராணி என்பார்களே,கனிமொழியை அ.தி.மு.க,வினர் ஜாமீன் ராணி எனக் கூப்பிடுவார்களோ..
சி.பி.ஐ, மாதக்கணக்கில் என்ன செய்கிறார்கள். விசாரணைதானே நடக்கிறது.அதற்குள் சிறையில் அடைக்க கனிமொழி குற்ற வாளி என தீர்ப்பு கூறப்பட்டு விட்டதா என்ன?
அப்படி என்றால் சொத்துக்குவிப்பில் மாட்டிக்கொண்ட ஜெயலலிதாவை ஏன் சிறையில் அடைக்கவில்லை.?
சரி அவர் போகட்டும் ,இதேபோல் சி.பி.ஐ, வழக்கில் மாட்டிக்கொண்ட மாயாவதி-முலாயம் சிங்- லல்லு பிரசாத் இவர்கள் வெளியில் தானே உள்ளனர்.
கனிமொழி,ஆ.ராசா.சரத்குமார் குழுவினர் மட்டும் சிறையில் ஏன்? அதுமட்டுமின்றி பிணை கூட கொடுக்க மறுப்பதும் ஏன்.
இது எனக்கு ரொம்ப நாளா இருக்கும் சந்தேகம்.யாராவது சந்தேகத்தைப் போக்குங்களேன்,,,,,