காணொளி அல்ல கண்ணீரொளி


லங்கை ராஜபக்‌ஷேயின் கோரத்தாண்டவம்  
*லண்டனின் சானல்-4,நேற்றிரவு ‘இலங்கையின் படுகொலைக் களம்” என்னும் தலைப்பில் ஓர் ஆவணத் திரைப்படத்தை நேற்று இலண்டன் நேரம் இரவு 23.05 pm மணிக்கு ஒளிபரப்பியது. 
சனல் 4 வெளியிட்டுள்ள ‘இலங்கையின் படுகொலைக் களம்’ ஆவணப்படம்…
                                                                                                                                                                          

ர்ப்பிணிகளும்-சிறுவர்களும் பார்க்க வேண்டாம் என்ற வேண்டுகோளுடன் இந்த இனஓழிப்பு படுகொலை காணொளி ஒளிபரப்பப் பட்டது.எனில் சம்பவங்களின் கொடூரம் எத்தகையது என தெரிந்துகொள்ளலாம்.
ஐ.நா.சபையின் அறிக்கை இக்கொடுரத்தினை முழுமையாக கொணரவில்லை.இக்கொடுரத்தின் கால்வாசிதான் கணக்கில் கொணரப்பட்டுள்ளது.
ஆனால் அதற்கேக் கூட இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
.நா,சபையும்.அம்னிஸ்டியும்,பொது மன்னிப்பு சபையும் எதற்காக என்ற கேள்வியை இக்காணொளி அனைவர் மனதிலும் எழுப்புகிறது.
 கண்களை குளமாக்கும் காட்சிகள் ராஜபக்‌ஷே நம் எதிரில் மட்டும் கிடைத்தால் மன வேதனையால் ஏற்பட்ட வெறியில் நாம் என்ன செய்வோம் என்பதை உணர்வால் மட்டுமே அறிய
முடியும்.
இக்காணொளியைக் காண கீழே அழுத்தவும்.
http://www.youtube.com/watch?v=Rz_eCLcp1Mc&feature=youtube_gdata
 கண்டபின்னர் ஏற்படும் மனவேதனையைத்தாங்க முடிந்தவர்களே பாருங்கள்.
  இதைவிட கேவலமான செய்தி.
  இலங்கை அரசு வட்டாரம் இக்காணொளி போலி ,விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் தயாரித்து லண்டன் சானல்-4 க்கு அதிகப் பணம் கொடுத்து ஒளிபரப்புவதாகக் கூறிவருகிறதாம்.
இலங்கையில் அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடந்த இறுதிகட்ட யுத்தத்தின் போது இடம் பெற்றதாகக் தெரிவிக்கப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்த ஆவணப்படம் பிரிட்டனின் சானல் 4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகியுள்ள நிலையில், இலங்கை அரசு இது குறித்த விசாரணைகளை நடத்த வேண்டும் என்று பிரிட்டிஷ் பிரதமர் கோரியுள்ளார்.
பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தின் போது உரையாற்றிய டேவிட் கேமரன் இந்தக் கோரிக்கையை வைத்துள்ளார்.
சானல் 4 தொலைக்காட்சியால் "இது வரை வெளியாகாத படங்கள்" என்று கூறப்படும் ஒளிப்படங்களில், இலங்கை இராணுவம் தமிழ் மக்களை சட்டவிரோதமாக கொலை செய்வதாகக் கருதப்படக் கூடிய படங்கள் இடம் பெற்றிருந்தன.
ஆனால் இந்த ஒளிப்படங்கள் பொய்யாக புனையப்பட்டவை என்று கூறி, இலங்கையின் பாதுகாப்பு அமைச்சகம் இவற்றை நிராகரித்துள்ளது.
ஆனால் பிரிட்டனின் வெளியுறவுத்துறையின் துணை அமைச்சரான அலிஸ்ட்டர் பர்ட், இந்த ஆவணப்படத்தை பார்த்து தாங்கள் அதிர்ச்சி அடைந்ததாகவும், அதை பார்க்கும் போது சர்வதேச மனிதாபிமான சட்டங்களை மீறியதற்கான ஆதாரங்கள் இருப்பது போல இருக்கிறது என்றும் கூறியுள்ளார்.
பிரிட்டனின் அந்தத் தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்ட ஆவணப்படத்தில், பிடிபட்ட தமிழ் மக்கள் அருகாமையிலிருந்து சுட்டுக் கொல்லப்படுவதாக காண்பிக்கப்படுகிறது.
இந்த ஒளிப்படத்தில் கூறப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகள் உண்மையானதாக இருக்கும்பட்சத்தில், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இலங்கை அரசு கூறியுள்ளது.
சானல் 4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆவணப்படத்தில், விடுதலைப் புலிகளின் பெண் போராளிகள் பாலியல் வன்முறைகளுக்கு உட்படுத்தப்பட்டிருக்கக் கூடும் என சூசகமாக தெரிவிக்கும் காட்சிகளும் இடம்பெற்றுகின்றன.
இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு இந்த ஒளிநாடா போலியானது என்று கூறும் அதே வேளை, நாட்டின் வெளியுறவு அமைச்சகமோ எச்சரிக்கையுடன் தனது பதிலை வெளியிட்டுள்ளது.
இந்த ஆவணப்படத்தில் எழுப்பப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளில் உண்மைத்தன்மை இருக்குமாயின், கடந்த ஆண்டு அரசால் அமைக்கப்பட்டுள்ள ஆணைக்குழுவானது, அதை கவனத்தில் எடுத்து சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
எனினும் இந்தப் படத்தில் வைக்கப்பட்டுள்ள விமர்சனங்கள் கெட்ட நோக்கம் கொண்டவை என்றும், விடுதலைப் புலிகளின் ஆதரவு நபர்கள் என்று அரசு கூறுபவர்களால் கொடுக்கப்பட்ட ஆதாரங்களை கொண்டது எனவும் வெளியுறவு அமைச்சகம் கூறுகிறது.
இந்த விடயங்கள் குறித்து நடவடிக்கை எடுக்க இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் சர்வதேச சமூகத்துடன் இணைந்து அனைத்து சாத்தியக்கூறுகளையும் கண்டறிய பிரிட்டன் தயாராக இருப்பதாக பிரிட்டனின் வெளியுறவுத்துறையின் துணை அமைச்சர் அலிஸ்ட்டர் பர்ட் தெரிவித்துள்ளார்.
                                                                                                                                                           
    ஆனால் அண்டைநாடான இந்தியா வழமைபோல் வாயையும்,காதையும்,கண்ணையும் காந்தியின் குரங்குப்பொம்மை போல் மூடிக்கொண்டுள்ளது.
     நாம் உரக்க ஏதாவது கூறினால் சிவசங்கர மேனன்,நிருபமா குழுவினர் இன்னுமொருமுறை இலங்கை சுற்றுப்பயணம் சென்று பக்‌ஷே வீட்டில் விருந்து சாப்பிட்டு விட்டு வருவார்கள்.
    அது தேவையா நமக்கு,,,
 உலகநாடுகளின் மனசாட்சியை உசுப்பி விடுவோம்.இக்கொலைகளுக்கு பதில் கேட்போம்.
 நாதியற்ற தமிழனால் வேறு என்ன செய்ய முடியும்,,? 
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


உலகிலேயே அதிகுள்ளமானவர்

பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த பொலோவிங் என்பவர் உலகிலேயே அதி குள்ளமானவர் என கின்னஸ் புத்தகத்தில் பதியப்பட்டுள்ளார். இவரது பிறந்தநாள் விழாவின் போது இது அறிவிக்கப்பட்டுள்ளமை சிறப்பம்சம்.
கின்னஸ் சாதனைப் படைத்த இவருக்கு தற்பொழுது 18 வயது. ஜன்ரி பொலோவிங் 59.93 சென்டி மீட்டர் அல்லது 23.6 அங்குலம் உயரம் உடையவர் எனக் கூறப்படுகிறது. இவரது 12 ஆவது வயதில், இவருடைய வளர்ச்சி பாதிக்கப்பட்டதாக பொலோவிங்கின் தந்தையார் தெரிவித்துள்ளார்.
இறுதியாக கின்னஸ் சாதனைப் படைத்த நேபாள நாட்டைச் சேர்ந்த கஜேந்திரா தாப்பா மகாரை விடவும் பொலோவிங் 7 சென்டி மீட்டர் உயரம் குறைந்தவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இவர் நடக்கவும், நிற்கவும் சிரமப்படுகிறார்.பிறர் இவருக்கு உதவும் நிலையில் இவர் உள்ளார்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?