காவல் தெய்வம்,,,,,,

ந்தையர் தின பரிசு,,,,,,


தந்தையர் தின பரிசாக நோயில் பாதிக்கப்பட்ட தந்தைக்கு தனது சிறுநீரகத்தை மகன் தானமாக தந்தார். இந்த அற்புதமான தந்தையர் தின பரிசு க்ருய்க் ஷன்கிற்கு கிடைத்து உள்ளது. க்ருய்க் ஷன்கிற்கு 67 வயது ஆகிறது.

அவருக்கு முதல் வகை நீரிழிவு நோய் தாக்கம் ஏற்பட்டதால் 3 ஆண்டுகளாக டயாலிஸ் சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். 2008ம் ஆண்டில் அவரது ஒரு சிறுநீரகம் செயல் இழந்தது. இதனைத் தொடர்ந்து அவரது உடல் நிலையும் பாதிக்க தொடங்கியது. ஆர்தர் க்ருய்க் ஷன்க் மகன் டானா க்ருய்க் ஷன்க் தனது சிறுநீரகங்களில் ஒன்றை தந்தைக்கு பரிசாக அளிக்க முன்வந்தார்.
========================================================================

    *காவல் ஆரம்பம்,,,,,,,
  சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள இலக்கை தூதரகத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.இலங்கை வங்கி மற்றும் தூதரக அதிகாரிகளின் வீடுகள்,புத்ததுறவி மடம், ஆகிய பகுதிகளின் பாதுகாப்புக்கள் காவல்துறையினர் பாதுகாப்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.அத்துடன் சென்னை மற்றும் குறிப்பிட்ட சில பகுதிகளில் வாழும் ஈழத்தமிழ்மக்களின் வீடுகளும் தமிழக காவல்துறையினரால் சோதனைசெய்யப்பட்டு  ஈழத்தமிழர்இருப்புஉறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகதெரிகிறது.

         இச்சோதனையும்-இலங்கையினருக்குப்பாதுகாப்பும் தமிழக மீனவர்கள் இலங்கை அரசால் கடத்தப்பட்டத்ற்குத்தானாம்.    எங்களின் காவல் தெய்வம் என்று ஈழத்தமிழரில் சிலர் சிலநாட்களுக்கு முன்னர்தான் ஜெயலலிதாவை பாராட்டி தீர்மானங்கள் ஏற்றினர்.
    காவல் தெய்வம் தனது காவற்பணியை ஆரம்பித்து விட்டதுபோல் தெரிகிறது.
==========================================================================
எரிவாயு ஊழல்: இரட்டைக் கொள்ளை
-அசோகன் முத்துசாமி
உலகமயம் செயல்படுத்தப்பட்ட பின்பு ஊழல்களின் எண்ணிக்கையும், சுருட்டப் படும் மக்கள் சொத்தின் அளவும் அதிகரித்து விட்டது அனைவரும் ஏற்கனவே அறிந்தது தான். அதிலும் மன்மோகன்சிங் பிரதமராக இருக்கும் கடந்த ஏழு ஆண்டுகளில், ஆறு ஆண்டுகளில் நடந்த பெரிய ஊழல்களின் மூலம் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தின் மதிப்பு சுமார் ரூ.3,79,300 கோடிகள் இருக்கலாம் என்று ஒரு இணையதளம் மதிப்பிடுகின்றது. காமன்வெல்த் ஊழல், 2ஜி ஊழல், அரிசி ஏற்றுமதி ஊழல், ராணுவ ரேஷன் ஊழல், சுவிஸ் வங்கியில் ஹசன் அலி பதுக்கி வைத் திருக்கும் பணம் என்று மத்திய அரசாங்கம் சம்பந்தப்பட்டிருக்கும் ஊழல்களும் மற்றும் மாநிலங்களில் நடந்திருக்கும் தாஜ் காரிடர் ஊழல் (உபி), இரும்புச் சுரங்க ஊழல் (கர்நா டகம்), நில பேர ஊழல் (கர்நாடகம்), ஒரிசா கனிமவள ஊழல், சத்யம் கம்ப்யூட்டர் ஊழல் ஆகிய ஊழல்களும் மற்றவையும் அடங்கும். இப்போது எல்லாவற்றையும் முழுங்கும் ஊழல் விவகாரம் ஒன்று வெளிவந்திருக் கிறது. அல்லது வெளிவந்து கொண்டிருக்கி றது. அதுதான் இயற்கை எரிவாயு ஊழல்.
இந்திய வரலாற்றிலேயே இவ்வளவு பெரிய ஊழல் நடந்ததில்லை என்று அலைக் கற்றை ஊழலில் 1,76,000 கோடி ரூபாய்கள் சுருட்டப்பட்டபோது கூறினோம். அப்போதே சிலர் அவசரப்படாதீர்கள், இதைவிடப் பெரி தாக நடக்கலாம் அல்லது நடந்து கொண்டி ருக்கலாம் என்று எச்சரித்தார்கள். இதோ அது உண்மையாகிவிட்டது. கிருஷ்ணா-கோதாவரி ஆற்றுப் படுகை யில் இயற்கை எரிவாயு வளம் மிதமிஞ்சி கிடக்கிறது. ஆற்றுக்குள்ளும் ஆற்றுக்கு வெளியே சுமார் 8100 சதுர கி.மீ. பரப்பில் பூமிக் கடியிலும் இருக்கும் எரிவாயுவைத் தேடி எடுத்து விற்கும் உரிமம் ரிலையன்சின் அம் பானி நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. சகோ தரர்கள் ஒன்றாக இருக்கும்போது வழங்கப்பட்டு பின்னர் அவர்களுக்கு இடையில் பாகப்பிரி வினைத் தகராறு வந்தபோது (இதில் நல்லவர், வல்லவர் என்று இட்டுக் கட்டப்படும் மன் மோகன்சிங்தான் தலையிட்டு சமரசம் செய்து வைத்தார்) மூத்தவரான முகேஷ் அம்பானி யின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீசுக்கு அந்த உரிமம் ஒதுக்கப்பட்டது தெரிந்த விஷயம். இப்போது இதில் என்ன ஊழல்? கிருஷ்ணா-கோதாவரி ஆற்றுப் படுகை யில் உள்ள எரிவாயுவைத் தேடி எடுத்து விற் கும் உரிமம் 2000த்தில் (அப்போது பாஜக தலைமையிலான தே.ஜ.கூட்டணி அரசாங் கம் பதவியில் இருந்தது) இரண்டு நிறுவனங் களுக்கு அளிக்கப்பட்டது. ரிலையன்ஸ் நிறு வனத்திற்கு 90சதவீதமும், நிக்கோ ரிசோர் சஸ் என்கிற நிறுவனத்திற்கு 10 சதவீதமும் வழங்கப்பட்டது. அரசாங்கத்திற்கும் இந்த நிறுவனங்களுக்கும் இடையிலான ஒப்பந்தம் என்னவெனில், எரிவாயுவைத் தேடும் செலவு இந்த நிறுவனங்களுடையது. அதாவது மூல தனம் தனியாருடையது. தேடி எடுக்கப்படும் வாயுவை விற்று வரும் லாபத்தில் அரசாங்கத் திற்கு பங்கு உண்டு.இந்த ஒப்பந்தத்திற்கு உற்பத்தி பங்கீடு ஒப்பந்தம் என்று பெயர். அம்பானி முதலீடு போட்டிருக்கிறார். முத லீடு போட்டவர் தன்னுடைய முதலீட்டை விரைவாக திரும்ப எடுத்துக்கொள்ள வகை செய்யும் முறையில் இந்த பங்கு ஒப்பந்தம் போடப்படுகின்றது. ஆனால், அதுவரை மக்கள் சொத்திலிருந்து அரசாங்கத்திற்கு வரு மானம் எதுவுமே வராமல் இருக்கக் கூடாதில் லையா? எவ்வளவு நியாயவான்கள் பாருங் கள். ஆதலால்... அம்பானியின் மூலதனச் செலவுகள் திரும்ப எடுக்கப்படும் வரையில் வெளியில் எடுக்கப்படும் எரிவாயுவில் (அல்லது அதன் விலையில்) 90 சதவீதம் ‘அசல் பெட்ரோலிய மாகக் கருதப்படும்’. அதாவது, அடக்கவிலை யாகக் கருதப்படும். எஞ்சியுள்ள 10 சதவீதம் ‘லாபப் பெட்ரோலியமாகக்’ கருதப்படும். அதா வது லாபமாகக் கருதப்படும். இந்த லாபத்தில் அம்பானிக்கும் அரசுக்கும் பங்கு. அரசுக்கு 70; அம்பானிக்கு 30. இதுதான் ஒரிஜினல் ஒப்பந் தம். இதில் என்ன தில்லுமுல்லுகள் நடந்தன என்பதை பின்னர் பார்ப்போம். இந்த அடக்கவிலையில் என்னென்ன அடங்கும்? அரசுக்குச் செலுத்த வேண்டிய உரிமத் தொகை 5 சதவீதம்; உற்பத்திச் செலவு, எரி வாயுவைத் தேடும் செலவு, நடைமுறைச் செலவு ஆகியவை. ஒப்பந்தத்தின் துவக்கத்தில் ரிலையன்ஸ் 240 கோடி டாலர்கள் முதலீடு செய்ததாக அல்லது முதலீட்டுச் செலவு என்று கூறியது. இதன் பொருள் என்னவெனில், இந்தப் பணத்தை ரிலையன்ஸ் நிறுவனம் திரும்ப எடுத்துக் கொள்ளும் வரையில், வெளியில் எடுக்கப்படும் எரிவாயுவின் மதிப்பில் 90 சத வீதத்தை அசல் என்கிற வகையில் ரிலை யன்ஸ் எடுத்துக் கொள்ளும். மீதி 10 சதவீதம் மட்டுமே பங்கிட்டுக் கொள்ளப்படும். ஆனால், நடந்தது என்னவென்றால், 2006ம் ஆண்டு மூலதனச் செலவு அல்லது முதலீடு 520 கோடி டாலர்கள் ஆகிவிட்டது என்று ரிலையன்ஸ் நிறுவனம் கூறியது. இதை அரசாங்கம் ஏற்றுக் கொண்டது. இதன் பொருள் என்னவெனில், மூலதனச் செலவு அதிகரித் துள்ளதால் உற்பத்தியில் 90 சதவீதத்தை மேலும் சில ஆண்டுகளுக்கு எடுத்துக் கொள் ளலாம் என்பதாகும். அத்தோடு நிற்கவில்லை. இது முதல் கட்டம்தான். இரண்டாவது கட்டத் திற்கு அது மேலும் 330 கோடி டாலர்கள் அதிகமாக்கப்பட்டு, மொத்த மூலதனச் செலவு 850 கோடி டாலர்கள் என்று கணக்கு கொடுக் கப்பட்டுள்ளது. இது மேலும் அதிகரிக்கப்படு வதற்கான வாய்ப்பு அதிகம் என்று சிஏஜி அறிக்கை கூறுகின்றது. மிகவும் எளிமையாகச் சொன்னால் கொள் முதல் விலையை அதிகமாகக் காட்டி, லாபத் தைக் குறைத்துக் காட்டி ஊழல் செய்வது. இப் படி பில் விலையை அதிகமாகப் போடுவது என்பது ஒன்றும் கடினமான வேலையல்ல. அது சாதாரணமாக பல சில்லரைத் திருடர் களும் செய்யக் கூடிய வேலைதான். தேவை யான பொருட்களை சப்ளை செய்பவர்கள், துணை ஒப்பந்தக்காரர்கள் (இவற்றில் பல ரிலையன்சின் துணை நிறுவனங்கள்) போன் றோரிடம் சொன்னால் ‘ஆகட்டும் சாமி’ என்று செய்து கொடுத்து விடுவார்கள். 2007ம் ஆண்டு இப்படி எடுக்கப்படும் ரிலையன்ஸ் எரிவாயுவின் விலை பத்து லட் சம் பிரட்டிஷ் தெர்மல் யூனிட்டிற்கு (நீரின் வெப்ப நிலையை ஒரு டிகிரி அதிகரிப்பதற்குச் செலவாகும் எரிசக்தியின் அளவு. அது ‘பிடியு’ என்று சுருக்கமாகக் குறிப்பிடப்படுகின்றது) 4.2 டாலர் என்று பிரணாப் முகர்ஜியின் தலை மையிலான அமைச்சர்கள் குழு நிர்ணயிக் கின்றது. இது மிகவும் அதிகமாகும். ஏனெ னில், முகேஷ் அம்பானியின் நிறுவனமே, அடக்கவிலை வெறும் 1.43 டாலர்தான் என்று பங்காளிச் சண்டை வழக்கு நடந்தபோது நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. ஆதலால், 2.34 டாலர் விலைக்கு தேசிய அனல்மின் நிலையத்திற்கும், அனில் அம்பானிக்கும் விற்பதாகவும் ஒப்புக் கொண்டிருந்தது. 4.2 டாலர் என்று விலை நிர்ணயிக்கப்பட்டதும் அனில் அம்பானி ஆட்டத்திலிருந்து விலகிக் கொண்டார். பொதுத்துறை நிறுவனமான என்டிபிசி புதிய விலைக்கு தொடர்ந்து வாங் கிக் கொண்டிருக்கின்றது. அது மட்டுமின்றி 1.25 டாலர் போக்குவரத்துக் கட்டணமும் ரிலையன்ஸ் நிறுவனத்தால் வசூலிக்கப்படு கின்றது. இதை நிர்ணயிப்பதிலும், கண் காணிப்பதிலும் அரசாங்கத்திற்கு எந்தப் பாத் திரமும் இல்லை. அதாவது இப்படி விலையை அதிகமாக நிர்ணயிப்பதன் மூலமும் அரசுக்கு அல்லது பொதுத்துறைக்கு இழப்பு ஏற்படுத்தப்படுகின் றது. அந்த இழப்பு அம்பானியின் பாக்கெட் டுக்குப் போயிருக்கின்றது. அமைச்சர்களுக் கும், அதிகாரிகளுக்கும் இதன் மூலம் ‘மேல் வருமானம்’ எனச் சொல்லப்படுவது வரும் என்பதைக் கூற வேண்டியதில்லை. இதில் கவனிக்க வேண்டியது என்ன வென்றால், 2.34 டாலருக்கு விற்றாலே ரிலை யன்சுக்கு 50 சதவீதம் லாபம் கிடைக்கும். எத்தனை சதவீத லாபமும் முதலாளித்துவத் திற்குப் போதாது என்கிற மார்க்சின் கூற்று நினைவிற்கு வருவதைத் தவிர்க்க முடியாது. மேலும் இதே காலகட்டத்தில் (2005-2008) பொதுத் துறை நிறுவனமான இந்திய எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கமிஷ னுக்கு ஒரு பிடியு எரிவாயுவிற்கு வெறும் 1.8 டாலர்தான் அரசாங்கம் கொடுத்தது. 4.2 டாலர் கொடுத்திருந்தால் ஒரு வேளை பெட்ரோலி யப் பொருட்களின் விலைகளை உயர்த்துகிற பிரச்சனையே வந்திருக்காது? ஆனால், மக்க ளிடம் இருந்து பணத்தைப் பிடுங்கி முத லாளிகளின் கைகளில் கொடுப்பதுதானே முதலாளித்துவ அரசின் வேலை? ஒரு முத லாளித்துவ அரசு வேறு எப்படி செயல்படும்? அம்பானி இப்படி மக்கள் பணத்தைச் சுருட்டுவதற்கு முதலிலேயே திட்டமிட்டிருக் கிறார். அதனால்தான், ஆரம்பத்தில் கொடுத்த மூலதனச் செலவு மதிப்பீட்டை ‘முதல் கட்ட வளர்ச்சித் திட்டம்’ என்று கொடுத்திருக் கிறார்; முழுமையான வளர்ச்சித் திட்டம் எனக் கொடுக்கவில்லை என்று சிஏஜி அறிக்கை கூறுகின்றது. அம்பானிகளுக்கும், டாடாக்களுக்கும், இதர முதலாளிகளுக்கும் அரிதிலும் அரிதான இயற்கை வளங்கள் அற்ப விலைக்குத் தூக் கிக் கொடுக்கப்படுகின்றன. ஆனால் மக்கள் அதே பொருட்களுக்கு சர்வதேச விலை கொடுக்க வேண்டியிருக்கிறது. பொதுச் சொத் துக்கள் ரகசியமாகக் கொள்ளையடிக்கப்படு கின்றது; மக்களின் வருமானம் பகிரங்கமாகக் கொள்ளையடிக்கப்படுகின்றது. இதுதான் நமது பெட்ரோலியக் கொள்கையின் சாராம்சம் என்கிறார், பிரபீர் புர்கயஸ்தா. மன்மோகன்சிங் இந்த விஷயத்திலும் தனக்கு ஒன்றும் தெரியாது என்று சொல் வதையோ அல்லது அவருக்கு உண்மையி லேயே ஒன்றும் தெரியாது என்று மற்றவர்கள் சொல்வதையோ ஏற்பவர்கள் அப்பாவிகளா கத்தான் இருக்க வேண்டும். மேலும், அவர் சட்ட விரோதமாக நடந்து கொண்டிருக்கிறாரா இல்லையா என்கிற கேள்வியே எழவில்லை. ஏனெனில், அவர் தான் ஊழலையே சட்டப் பூர்வமாக்கிவிட்டாரே? அதாவது, கொள்கை யாக்கிவிட்டாரே?
  நன்றி:தீக்கதிர்.
=============================================================================================================== 

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?