நடுங்கவைக்கும் காணொளி


                    
இலங்கையின் போர்க்குற்றம் மற்றும் இனப்படுகொலைக்கான வீடியோ ஆதாரங்களை முழுமையாக வெளியிட முடிவெடுத்துள்ள பிரிட்டனின் சேனல் 4, அதற்கான விளம்பரங்களை பெரும் செலவில் வெளியிட்டு வருகிறது.
“இலங்கையின் கொலைக்களம்” என்னும் தலைப்பில் இந்த விளம்பரங்கள் உலகின் முன்னணி நாளிதழ்களில் வெளியாகியுள்ளன.
இலங்கையின் போர்க்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்த விடியோவின் முழுத் தொகுப்பை இதில் ஒளிபரப்பவுள்ளது சேனல் 4.
த சண்டே டைம்ஸ், த இன்டிபென்டன்ட், மெயில் ஒன் சண்டே உள்ளிட்ட பிரிட்டன் பத்திரிகைகளில் இந்த விளம்பரம் வெளியாகியுள்ளன.
ஈழத் தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை வெளிப்படுத்தவும், தமிழர் அல்லாதவர்களும் இந்த விடியோ காட்சியை பார்க்கச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்திலும் பெரும் செலவில் இந்த விளம்பரங்களை சேனல் 4 வெளியிட்டு வருகிறது.
உலகின் மிகக் கொடூரமான வீடியோ
மேலும், ஜூன் 14-ம் தேதி சேனல் 4-ல் ஒளிபரப்பவிருக்கும் இலங்கை போர்க்குற்றம் தொடர்பான விடியோ குறித்து பிரிட்டன் தமிழர் பேரவை உள்ளிட்ட பல்வேறு தமிழர் அமைப்புகள், துண்டுப் பிரசுரங்கள் மூலம் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.
அதேநேரம், உலக வரலாற்றில் மிகக் கொடூரமான இந்த வீடியோ பதிவுகளை கர்ப்பிணிகள், பலவீனமான இதயமுள்ளோர் பார்க்க வேண்டாம் என சேனல் 4 தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இறுதிப் போரில் நடந்த அத்தனை போர்க்குற்றங்களுக்கும் முழுப் பொறுப்பு இலங்கை ராணுவமே என்பதற்கு 100 சதவீத ஆதாரங்களை இந்த வீடியோ பதிவுகள் வெளிக்கொணரவிருப்பதால், இலங்கை பெரும் அச்சத்துக்குள்ளாகியுள்ளது.
   இந்த வீடியோ மூலம் ஐ.நா,சபை போர்க்குற்றவாளி குற்றசாட்டு வெளிவுலகுக்கு உண்மையாக்கப்பட்டுவிடும் என்ற பயம் ராஜபக்‌ஷேக்கு ஏற்பட்டுள்ளது. 
----------------------------------------------------------------------------------------------------------------

இலங்கைக்கு ஆறுதல் கூறிச்சென்ற இந்திய உயர்மட்டக் குழு


இலங்கை அரசு மீது பொருளாதாரத் தடையை கொண்டுவரவேண்டும் என்று தமிழக அரசு கொண்டுவந்துள்ள தீர்மானம் குறித்து இந்திய காங்கிரஸ் கட்சி கருத்து எதனையும் தெரிவிக்க மறுத்துவிட்டது.

தமிழகத்தின் தீர்மானத்தை தொடர்ந்து தனியாக சிறப்பு விமானம் ஒன்றை அமர்த்திய இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன், மற்றும் வெளிவிவகாரச் செயலாளர் நிருபாமா ராவ் ஆகியோர் அவசரமாக தமிழகம் சென்று ஜெயலலிதாவைச் சந்தித்திருந்தனர்.
இலங்கைக்கு ஆதரவானபுதுடில்லியின் கொள்கை  பற்றி    அவர்கள் ஜெயலலிதாவிடம் எடுத்துரைத்தனர்,இலங்கையை  பகைத்தால் அது சீனாவிடம் சென்றுவிடும் எனவும் எச்சரித்தனர். ஆனால் ஜெயலலிதாவுடன் ற 45 நிமிட ம் பேசியதையும் ,ஜெயலலிதா கருத்தையும் அக்குழுவினர் வெளியிடவில்லை.

கலந்துரையாடலின் முடிவில் அவர்கள் அங்கு காத்திருந்த ஊடகங்களுக்கும் எதனையும் தெரிவிக்க விரும்பவில்லை. அதன் பின்னர் தமிழக அரசு ஒரு உத்தியோகபூர்வ அறிக்கையை வெளியிட்டபோதும், அதில் ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கை மற்றும் கச்சதீவு திரும்பப்பெறல் போன்ற   விடயங்கள் உள்ளடக்கப்படவில்லை.

தமிழ் மக்களின் மீள்குடியேற்றம், தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தாக்குதல்கள் போன்றனவே அதில் உள்ளன.

அதன் பின்னர் கொழும்பு சென்ற இந்தியாவின் உயர்மட்ட அணியினர், இலங்கை வெளிவிவகார அமைச்சர் மற்றும் குடியரசுத்தலைவர் உட்பட பலரையும் சந்தித்துள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அவர்கள் சந்தித்தபோதும், ஈ.பி.ஆர்.எல்.எஃப், புளொட், தமிழர் விடுதலைக்கூட்டணி போன்ற இலங்கைஅரசின் துதிபாடும்கட்சிகளையும் சந்தித்ததால் இந்தியாவின் கபட நாடகம் விரைவாகவே வெளிப்பட்டுவிட்டது.

எதிர்வரும் செப்டம்பர் மாதம் ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இந்தியா கலந்துகொள்கின்றது. தற்போது அதில் அங்கம் வகிக்கும் பாகிஸ்தான் அதில் இருந்து விலகிக் கொள்கின்றது. இந்த நிலையில் இந்தியாவின் ஆதரவை பெறுவதற்கு இலங்கை அரசு இந்திய அதிகாரிகளுக்கு பல சலுகைகளை அளித்துள்ளதுடன், சிகப்புக்கம்பள விரிப்பு வரவேற்பும் அளிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம், இந்திய பிரதமரின்  மன்மோகனின் இலங்கை பயணமும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால் அனைத்துலகத்தில் எழுந்துள்ள அழுத்தங்களை குறைக்கும் வாய்ப்பு இலஙகை அரசுக்கு கிடைத்துள்ளதாகவும், மறுபுறம் தமிழகத்தை இந்திய மத்திய அரசு மறைமுகமாக எச்சரிக்கும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாகவும் கருதப்படுகின்றது.

தமிழகத்தின் தீர்மானம் குறித்தோ அல்லது இலங்கைஅரசின் மனித உரிமை மீறல்கள் குறித்தோ பேசாத இந்திய அதிகாரிகளின் பயணம் மற்றுமொரு ஏமாற்று நாடகமாகவே அமைந்துள்ளது. தமிழகத்தின் தீர்மானத்திற்காக இலங்கை அரசுக்கு ஆதரவு கூறவே அவர்கள் வந்து சென்றுள்ளனர். அதேசமயம் தமிழ் மக்களை ஏமாற்றுவதற்காக  மக்கள் அதவற்ற  தமிழ்க் கட்சிகளையும் சந்தித்து பேசி சென்றுளளனர்.
        மீண்டும் ,மீண்டும் இலங்கை சென்ற கேரள மாபியாக் குழுவை பற்றி கூற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.இச்செய்தி இலங்கைத்தமிழர்கள் வெளியிட்ட செய்தி என்பதால்  உண்மை நிலவரம் தெரியவேவெளியிடப்பட்டுள்ளது.
 தகவல்-படங்கள்: சங்கதி தளம்,.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ன்லைன் மூலம்  நம் புகைப்படங்களுக்கு அழகான பல வகையான எபெக்ட்ஸ் கொடுக்கலாம்.
புகைப்படங்களுக்கு அழகான இமெஜ் எபெக்ட்ஸ் செய்ய வேண்டும் என்றால் போட்டோஷாப் போன்ற மென்பொருள்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.
எந்த மென்பொருள் துணையும் இல்லாமல் எளிதாக ஆ ன்லைனில் இருந்தபடியே நம் புகைப்படங்களுக்கு எபெக்ட்ஸ் கொடுக்கலாம்.
இத்தளத்திற்கு சென்று Browse என்ற பொத்தானை சொடுக்கி நம் கணினியில் இருக்கும் நாம் மாற்ற விரும்பும் புகைப்படத்தை தேர்ந்தெடுத்து Upload என்ற பொத்தானை சொடுக்கவும்.
அடுத்து வரும் திரையில் நமக்கு பலவிதமான எபெக்ட்ஸ் கொடுக்கப்பட்ட மாதிரி புகைப்படம் கிடைக்கும். இதில் நமக்கு எந்த மாதிரி எபெக்ட்ஸ் வேண்டுமோ அதை தேர்ந்தெடுத்து சொடுக்கினால் போதும்.
உடனடியாக நம் புகைப்படம் நாம் தேர்ந்தெடுத்த எபெக்டிற்கு தகுந்தாற் போல் மாற்றப்பட்டு விடும். படத்தை Right Click செய்து Save Image என்பதை சொடுக்கி படத்தை நம் கணினியில் சேமிக்கலாம்.
           முகவரி:http://imageoid.com/
   


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?