ஊழல் விசாரணை.....
அண்ணா ஹசாரே குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்தஅறிக்கையில், அமைச்சர்கள் ஊழல்கள் தொடர்பாக விசாரிக்க வேண்டும் என்று கூறப்பட்டு குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்களாக மத்திய தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரியின் அறிக்கையிலிருந்து எடுக்கப்பட்ட பகுதிகள் இடம்பெற்றுள்ளன.
இதுவரை பரிசுத்தம் -கறை படியாதவர் என்று பெயர் போன[?]பிரதமர் மன்மோகன் சிங்கும் இடம் பெற்றுள்ளார்.
நிலக்கரி அமைச்சகம் மன்மோகன் சிங் வசம் இருந்தபோது ஊழல் நடந்ததாக அந்த அறிக்கை குற்றம்சாட்டுகிறது.
இதுவரைபிரதமர் ஊழல் செய்ததாக ஹசாரே குழு குற்றம்சாட்டியது கிடையாது. ஹசாரே குழு மன்மோகன் சிங் மீது இப்போதுதான் குற்றம்சாட்டுகிறது .
இக்குழு குற்றம் சாட்டுவது அமைச்சர்கள் மீது மட்டும்தான் ஒருவர் கூட மிஞ்ச முடியாது என்றாலும் பிரதமர், பிரணாப் முகர்ஜி தவிர, மத்திய அமைச்சர்களான ப. சிதம்பரம், மு.க. அழகிரி, ஜி.கே. வாசன், சரத் பவார், எஸ்.எம். கிருஷ்ணா, கமல்நாத், பிரஃபுல் படேல், பரூக் அப்துல்லா, கபில் சிபல், சல்மான் குர்ஷித், சுஷில்குமார் ஷிண்டே, விலாஸ்ராவ் தேஷ்முக், வீரபத்திர சிங் ஆகியோர் மீதுஇப்போதைக்கு குற்றம் சாட்டி அவர்கள் மீது சிறப்பு விசாரணைக் குழு ஒன்று அமைத்து விசாரணை நடத்த வேண்டும் கோரிக்கை விடுத்துள்ளது.
ஓய்வுபெற்ற 3 நீதிபதிகள் கொண்ட சுயேச்சையான சிறப்பு விசாரணைக் குழு ஒன்றை அமைக்குமாறு கோரி ஹசாரே குழு பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளது. அதில்நீதிபதிகள் சுதர்சன் ரெட்டி, ஏ.கே. கங்குலி, ஏ.பி. ஷா, குல்தீப் சிங், ஜே.எஸ். வர்மா, எம்.என். வெங்கடாசலய்யா ஆகியோரில் எவரேனும் மூவரை தேர்ந்தெடுத்து விசாரணைக் குழுவை அரசு அமைக்கலாம்.
இந்தக் குழு 15 "ஊழல்' அமைச்சர்கள் மீதும் ஊழல் குற்றசாட்டு சுமத்தப்பட்ட கட்சித் தலைவர்களான மாயாவதி, முலாயம் சிங் யாதவ், லாலு பிரசாத் யாதவ், ஜெயலலிதா ஆகியோர் மீதும் விசாரணை நடத்தவேண்டும்.அத்துடன் எங்கள் குழுவில் சிலர் மீது சுமத்தப்பட்ட குற்ற சாட்டுகள் மீதும் விசாரணை நடத்தி முடிவை அறிவிக்க வேண்டும்.என்று கடிதத்தில் எழுதப்பட்டுள்ளது.
இந்த விசாரணைக்குழு அமைக்கஜூலை 24-ம் தேதிவரை நாள் கொடுத்துள்ளனர் . அரசு நடவடிக்கை எடுக்கத் தவறினால், ஜூலை 25 முதல் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபடுவோம் என்றும் அந்தக் கடிதத்தில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
சரி.ஜெயலலிதா மேல் ஹசாரேக்கு என்ன கோபம்.பட்டியலில் அவரையும் சேர்த்து விட்டார்.நல்லாத்தானே போய்கிட்டிருந்தது.?.
____________________________________________________________________________________________________________
உள்ளே ஜெகன்,
இதுவரை பரிசுத்தம் -கறை படியாதவர் என்று பெயர் போன[?]பிரதமர் மன்மோகன் சிங்கும் இடம் பெற்றுள்ளார்.
இதுவரைபிரதமர் ஊழல் செய்ததாக ஹசாரே குழு குற்றம்சாட்டியது கிடையாது. ஹசாரே குழு மன்மோகன் சிங் மீது இப்போதுதான் குற்றம்சாட்டுகிறது .
இக்குழு குற்றம் சாட்டுவது அமைச்சர்கள் மீது மட்டும்தான் ஒருவர் கூட மிஞ்ச முடியாது என்றாலும் பிரதமர், பிரணாப் முகர்ஜி தவிர, மத்திய அமைச்சர்களான ப. சிதம்பரம், மு.க. அழகிரி, ஜி.கே. வாசன், சரத் பவார், எஸ்.எம். கிருஷ்ணா, கமல்நாத், பிரஃபுல் படேல், பரூக் அப்துல்லா, கபில் சிபல், சல்மான் குர்ஷித், சுஷில்குமார் ஷிண்டே, விலாஸ்ராவ் தேஷ்முக், வீரபத்திர சிங் ஆகியோர் மீதுஇப்போதைக்கு குற்றம் சாட்டி அவர்கள் மீது சிறப்பு விசாரணைக் குழு ஒன்று அமைத்து விசாரணை நடத்த வேண்டும் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த விசாரணைக்குழு அமைக்கஜூலை 24-ம் தேதிவரை நாள் கொடுத்துள்ளனர் . அரசு நடவடிக்கை எடுக்கத் தவறினால், ஜூலை 25 முதல் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபடுவோம் என்றும் அந்தக் கடிதத்தில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
சரி.ஜெயலலிதா மேல் ஹசாரேக்கு என்ன கோபம்.பட்டியலில் அவரையும் சேர்த்து விட்டார்.நல்லாத்தானே போய்கிட்டிருந்தது.?.
____________________________________________________________________________________________________________
உள்ளே ஜெகன்,
இன்று முன்னிரவு 7.30 க்கு ஜெகன் மோகன் ரெட்டி சி.பி.ஐ.ஆல் கைது செய்யப்பட்டார்.அவர் கைது விவகாரம் வெளியே தெரிந்தா உடன் சட்டம் -ஒழுங்கு பிரச்னை வரலாம் என்று வேகமாக செய்தி பரவுவதை தடுக்க ஆந்திரா முழுக்க சில மணி நேரம் மின் தடை செய்யப்பட்டிருந்ததாம்.
ஒய்.எச்.ஆர் காங்கிரஸ் என்று தந்தையார் பெயரில் கட்சி ஆரம்பித்து நடத்தும் ஜெகன் மோகன் ரெட்டி ராயல சீமா,கடலோர ஆந்திரப்பகுதியிலும் இனம் வழியிலும்செல்வாக்கு உள்ளவர்.
ஜெகனின்VSNPIC[ Vadarevu and Nizampatnam Ports and Industrial Corridor ]நிறுவனம் தொடர்பான முறைகேடுகளுக்குத்தான் இந்த விசாரணையும் கைதும்.இதற்கு அப்பா முதல்வராக இருந்த போது ரூ 850 கோடி பெறுமான நிலத்தை முறைகேடாக ஒதுக்கி அதன் மூலம் லாபம் பார்த்தார் ஜெகன் என்பதுதான் குற்றசாட்டு.
இதற்காக ஜெகன் முன் ஜாமீன் கேட்டும் கிடைக்கவில்லை.இப்போது ஜெகன் மீது 120-பி,420,477-ஏ,409,போன்றவைகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மார்ச்-2007 ல் ஜெகன் இயக்குநராக உள்ள ரகுராம் சிமெண்ட் நிறுவனத்துக்கு 487 ஏக்கர் முறைகேடாக ஒதுக்கப்பட்டுள்ளது.
2011 இல் ஜெகனின் சொத்து 365 கோடியாக உயர்ந்துள்ளது.
ஜுலையில் ஆந்திர நீதிமன்றம் இது பற்றி விசாரிக்க சி.பி.ஐ.யை பணித்தது.
18ஆகஸ்ட்-2011 சிபிஐ ஜெகன் வீடு,நிறுவனங்களில் சோதனை யிட்டது.
31 மார்ச்-2011 தந்தையின் முதல்வர் பதவியை முறைகேடாக பயன் படுத்தியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
கைது மற்றும் மோதல்விபரம்:
தனது சாக்ஷி தொலைக்காட்சியில் சோனியாவை விமர்சித்து ஒளிபரப்பினார் ஜெகன்.பின் மன்மோகனையும் தாக்கி செய்தி வெளியானது.அப்போது காங்கிரசில்தான் இருந்தார்.ரோசையா முதல்வர் பதவியை விட்டு விலகியதும் தன்னை முதல்வராக்க வேண்டும் என்று ஜெகன் முயன்றார்.முடியவில்லை.கிரன் குமார் ரெட்டி முதல்வரானார்.இவர் ஜெகனின் தந்தை ஆதரவாளர்தான்.
2010 நவம்பர் 29காங்கிரசில் இருந்து விலகிய ஜெகன்.பெப்ரவரியில் தந்தையின் செல்வாக்கை தக்க வைக்க அவரது பெயரிலேயே ஒய் எஸ் ஆர் கான்கிரசை ஆரம்பித்தார்.
அதன் பின் காங்கிரஸ் தனது பழி வாங்கலை துவக்கி விட்டது.இந்த முறைகேடுகள் அனைத்தும் காங்கிரசில் இருந்த போது செய்தவைதான்.அப்போது கண்டு கொள்ளாத சிபிஐ காங்கிரசுக்கு எதிராக வேலை பார்த்ததும் நடவடிக்கை எடுத்து உள்ளே தள்ளி விட்டது.
_________________________________________________________________________________