மீண்டும் எனது போராட்டம்.

மற்றவர்களுக்கு ஏதாவது தொல்லை கொடுக்க ஏதாவது செய்வதே சிலருக்கு வேலையாக இருக்கும்.
அதுபோல்தான் ஜெர்மன்காரர்களுக்கு இப்போது திடீர் தேவையற்ற யோசனை தோன்றியுள்ளது.அதை யோசனை அளவில் கேட்கும்போதே யூதர்களுக்கு வயிற்றில் புளியைக் கரைத்துள்ளது.
ஹிட்லர்1924இல் ஜெர்மனியின் அதிகாரத்திற்கு வருவதற்கு 9 ஆண்டுகளுக்கு முன்னர் மூனீச் சிறையில் இருக்கும்போது நேரம் போகாமல் "எனது போராட்டங்கள்'[மெயின் காம்ப்] என்ற பெயரில் தனது வாழ்வில் கொஞ்சம்,சிந்தனைகள் கொஞ்சம்,உலக நடப்புகள் என்று எழுதியத புத்தகத்தை மீண்டும் வெளியிடப்போகிறார்களாம்.
சுரன்
பழைய மெய்ன் காம்ப்




அந்த புத்தகத்தில்தான் நாசியக் கொள்கைகள் விலாவரியாக விளக்கப்பட்டுள்ளது.அதை படிப்பவர்கள் அந்த கொள்கையின் பிடிக்குள் சிக்கும் அளவு ஒரு கவர்ச்சிகரமான எழுத்து நடை.ஹிட்லர் காலத்தில் நாசியக் கொள்கை வளர இப்புத்தகம் விற்பனையும் ஒரு காரணம்.விற்பனை அப்போது 10 மில்லியன் பிரதிகள்.
நாசியக் கொள்கைகளின் அடிநாதமாக விளங்குவதே யூத எதிர்ப்புதான்.
இப்புத்தகத்தில் யூதர்கள் எவ்வாறு உயர்ந்த வம்சமான ஆரியர்களை[ஜெர்மனியர்களை] ஏமாற்றி தங்களை வளர்த்துக்கொண்டு ஜெர்மனியர் வாழ்க்கையை அதல பாதாளத்துக்கு தள்ளினார்கள்.
அந்த யூத வம்சம் இருக்கும் வரை ஜெர்மானியர்கள் வாழ்வில் கடைந்தேற முடியாது என்பதெல்லாம் விலாவாரியாக எழுதித்தள்ளியுள்ளார்.கையை நீட்டி வணக்கம் சொல்லும் முறை,ஸ்வஸ்திக் சின்னம் எல்லாமே இப்புத்தகத்தின் வழி வந்ததுதான்.
ஹிட்லர்.அவர் ஆட்சிக்கு வந்த பின்னர் யூதர்களை ஒட்டு மொத்தமாக வித,விதமாக கொன்று குவித்தது வரலாறு.
ராஜ பக்‌ஷே தமிழின ஒழிப்பு படுகொலைக்கு முன்னுதாரணமே ஹிட்லர்தான்.
இதனால் 1945 ஹிட்லர் தற்கொலை-வீழ்ச்சிக்குப்பின்னர் உலக அளவில் ஹிட்லரின் மெய்ன் காம்ப் புத்தகம் பிரசுரிக்க ,விற்க தடை செய்யப்பட்டு அத்துடன் அந்த புத்தக வரலாறே மூடப்பட்டது.
இப்போது இந்த வில்லங்க புத்தகத்தை வெளியிட ஜெர்மனில் உள்ள சிலர் முயற்சிக்கிறார்களாம்.
சுரன்

அதற்கு பல இடங்களில் இருந்து எதிர்ப்பு கிளம்பிய நிலையில் இந்த புத்தகத்தை வெளியிட காரணமாகக்கூறுவது கொஞ்சம் வேடிக்கையானது.
இப்புத்தகத்தின் காப்புரிமை வைத்திருக்கு ஜெர்மனிய பவரியா மாநில நிர்வாகம் "இப்புத்த்கம் 70 ஆண்டுகளுக்கப் பின் தற்போது வெளியிட காரணமே இப்புத்தகத்தின் காப்புரிமை 2015-இல் முடிகிறது.அந்த காரணத்திற்காகவேஇப்புத்தகத்தை மறுபதிப்பிட முடிவு செய்தோம்"என்கிறார்கள்
இப்புத்த்கத்தை வெளியிட பிரிட்டனில் உள்ள ஒரு நிறுவனம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
சுரன்
யூத பிணக்குவியல்

'இந்த புத்தகம் மறு பிரசுரம் ஜெர்மனியிலும் உலக அளவிலும் ஒரு எதிர்பார்ப்பை கொண்டுள்ளது.அதன் மூலம் பணம் சம்பாதிக்கவே முயற்சிக்கிறார்கள்.ஆனால் இதன் விளைவாக மீண்டும் யூத எதிர்ப்பும் நாசியக் கொள்கையும் உயிர் பெற்று விடக்கூடாது."-என்று ஒரு யூத வணிகர் பெருமூச்சு விட்டார்.
ஆமாம் காப்புரிமை காலாவதியாகிறது என்பதற்காக ஒரு மோசமான வழிகாட்டும் புத்தகத்தை வெளியிடலாமா?அப்படி காப்புரிமை போனால்தான் என்ன?
ஏற்கனவே ஜெர்மனியில் ஆங்காங்கே நாசிய அமைப்புகள் மறைமுகமாக இயங்குகிறது என்று ஜெர்மன் அரசே கவலையுடன் கூறியுள்ளது.இப்புத்த்கம் அதன் வளர்ச்சியை அசுரமாக்கிவிடாதா?
காப்புரிமை வீணாகிறது .பிறகு கிடைக்காது என்பதால் விசத்தை யாராவது உட்கொள்வார்களா என்ன?
______________________________________________________________________________
save image
----------------------------------------------------------------------------------------------------------
நண்பர் ஒருவர் தனது தளத்தில் உலகநாயகன் விஸ்வரூபத்தில் முக்காடு உடையுடன் வருகிறார்.எனவே ஆங்கில படத்தின் நகல் என்று கிடா வெட்டியிருந்தார்.

ஆனால் அதற்கு முன்பு இளைய தளபதி விஜய் இதே முக்காடுடன் கில்லியில் நடித்திருந்தாரே.ஒருவேளை கில்லியின் நகலாக இருக்குமோ விஸ்வரூபம்?
முக்காடு போட்டால் அப்படி என்றால் ஒவ்வொரு படத்திலும் பேண்ட்-கோட்டு என்று வருகிறார்களே அதெல்லாம் எதன் நகல்?
அதற்காக அவர் கூறியபடியே நகலாக அமைந்துவிடவும்கூடும்.
ஆனால் முன்னதாக வெறும் படத்தை வைத்துக்கொண்டே ஆருடம் கூறி கடுப்பாகவேண்டாம் என்பதுதான் என் கருத்து.




------------------------------------------------------------------------------------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?