வறுமைக்கில்லை வறுமை.


இந்திய கிராமங்களில் உள்ள 65 சதவீதம் மக்கள், தினம் ரூ.35 க்கு குறைவான மதிப்பில் வாழ்க்கை நடத்து கிறார்கள். ஆனால் நகரங் களில் பல மக்கள் தினம் ரூ.66ல் தங்கள் அன்றாட வாழ்வை நடத்துகிறார்கள் என வருவாய் மற்றும் செல வினம் மீது நடத்தப்பட்ட அரசு ஆய்வில் தெரியவந் துள்ளது.
சுரன்



66வது தேசிய மாதிரி சர்வே (என்எஸ்எஸ்) கடந்த 2009ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் ஜூலை 2010 வரை நடந்தது.இந்த ஆய் வின்படி அனைத்து இந்திய மாத தனி நபர் நுகர்வு செலவினம் (எம்பிசிஇ) கிராமப்பகுதிகளில் ரூ.1054 ஆகவும் நகர்ப்புறங்களில் ரூ.1984 ஆகவும் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள் ளது.

இதுகுறித்து தேசிய மாநில சர்வே அமைப்பின் (என்எஸ்எஸ்ஓ) இயக்குநர் ஜே.தாஸ் அறிக்கை முன்னு ரையில் தனிநபர் அன்றாட செலவினம் இந்திய கிராமப் புறங்களில் ரூ.35 ஆகவும் நகர்ப்புறங்களில் ரூ.66 ஆக வும் சராசரியாக உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
சுரன்


கிராமப்புறங்களில் 10 சதவீதத்தினர் அன்றாடம் ரூ.15ல் தங்கள் வாழ்க்கையை நடத்தும் துயர நிலை உள் ளது. ஆனால் நகர்ப்புறங்க ளில் 10 சதவீதம் ஏழைகள் உயிர் வாழ்வதற்கு, ஏதே னும் சாப்பிடும் ஏழைகள் செலவினம் அன்றாடம் ரூ.20 என்ற அளவில் உள் ளது. இந்த சர்வேயின்படி 10 சதவீத கிராம மக்கள் தங் கள் மாத செலவினம் ரூ.453 லும், நகர்ப்புறங்களில் ரூ. 599லும் வாழ்க்கையை நடத்த வேண்டியுள்ளது.

என்எஸ்எஸ்ஓ ஆய்வின் படி இந்தியாவில் பீகார், சத்தீஸ்கர் மாநில கிராமப் புறங்களில் தனிநபர் மாதாந் திர செலவின அளவு மிக மோசமாக உள்ளது. இந்த மாநிலங்களின் கிராம மக்கள், தனிநபர் மாத செல வினமாக ரூ.780க்குள் வாழ்க் கையை நடத்த வேண்டி இருக்கிறது. இதைத் தொடர்ந்து, குறைந்த வரு வாயில் வாழ்க்கையை நடத் தும் மாநிலங்களாக ஒரிசா, ஜார்க்கண்ட் உள்ளன. இந்த மாநிலங்களில் கிராம மக் கள் மாதம் ரூ.820 செலவி னம் செய்யக்கூடிய வறுமை நிலை உடையவர்களாக இருக்கின்றனர்.

கேரள கிராம மக்கள் மாதாந்திர செலவினம் (எம்பிசிஇ) ரூ.1835 என, கிராமங்களில் மாதாந்திர தனிநபர் செலவினம் திறன் வாய்ந்ததாக உள்ளன. இதையடுத்து பஞ்சாப் கிராமங்கள் ரூ.1649 என்றும் ஹரியானா மாநில கிராமங் கள் ரூ.1510 என்றும் உள்ளன.
சுரன்


நாட்டின் மிக அதிக தனி நபர் மாதாந்திர செலவினம் உள்ள மாநிலமாக மகாராஷ் டிரா உள்ளது. அங்கு தனி நபர் மாதாந்திர செலவினம் ரூ.2,437 என்ற நிலையில் உள் ளது. இதையடுத்து கேரளா (ரூ.2413) ஹரியானா (ரூ.2321) உள்ளன. பீகார் நகர்ப்புறங் களில் தனிநபர் மாதாந்திர செலவினம் ரூ.1238 என்று மிகக்குறைந்த நிலையில் உள்ளது.

ஆய்வின்படி செலவினத் தில், 57 சதவீத மதிப்பு இந் திய கிராமப்புறங்களில் உணவு நுகர்வுக்காக 2009-10ல் இருந் துள்ளது. நகர்ப்புறங்களில் உணவுக்கு தனிநபர் செலவி னம் 44 சதவீதமாக இருந்தது.

என்எஸ்எஸ்ஒ மதிப் பீட்டின்படி கிராமப்புறங் களில் நாள் ஒன்றுக்கு தனி நபர் செலவினம் ரூ.22.42 என்றும் நகர்ப்புற நுகர்வு ரூ.28.65 என்றும் உள்ளவர் கள், வறுமைக்கோட்டு நிலையில் இருப்பவர்களாக உள்ளனர் என திட்டக்குழு முடிவு செய்துள்ளது.

திட்டக்குழு மதிப்பீட் டின்படி 2009-10ல் வறுமைக் கோட்டுக்கு கீழே 36.46 கோடி மக்கள் நாட்டில் உள் ளனர் என கூறப்பட் டுள்ளது. 2004-05ம் ஆண்டு இந்த எண்ணிக்கை 40.72 கோடி மக்கள் என இருந்தது.
இந்த வறுமைக்கோடு எண்ணைக்கையை குறைக்கத்தான் மன்மோகனும்,மான்டேக் சிங் அலுவாலியாவும் கிராம்த்திற்கு ரூ27 ,நகரம் ரூ 35 என்று கோட்டை கிழிக்க ஆசைப்படுகிறார்கள்.
சுரன்


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?