புது [கை] காய்ச்சல்

இன்று டெங்கு காய்ச்சல் தென் தமிழகத்தை தாக்கி பயமுறுத்தி வருகிறது.நாம் வளர்ந்து விட்டோம்.முன்னேறி விட்டோம் என்று அரசுகள் கூறி வந்தாலும் புதுப் புது வியாதிகளும் வளர்ந்து நம்மை துரத்துகிறது.எய்ட்சை விடுங்க.அதில் நாம் ஆப்பிரிக்க நாடுகளுடன் போட்டி போட்டு முன்னேறினாலும் காலராவும்,மலேரியாவும் மீண்டும் இந்தியாவில் தலை தூக்கிவருவதாக மருத்துவமனை வட்டார செய்திகள் வருகின்றது.


நம்மால் ஒழிக்கப்பட்ட மலேரியாவின் புதிய பிரதி கிட்டதட்ட கர்ணன் திரைப்படம் கதைதான்.அதாவது புத்தம் புதிய டிஜிடல் பிரதிபோல்.மலேரியாவும் தற்போது பழைய மருந்துக்கெல்லாம் மசிந்து ஒடுவதில்லையாம்.மிக வலிமையுடன் நம்[உயிரை]மை வந்து பார் என்று ஒருவழி செய்யும் பிரமாண்டமான ஆற்றலுடன் கொசுக்கள உற்பத்தி செய்கின்றதாம்.பார்த்து பயத்துடன் நடந்து கொள்ளுங்கள்.இல்லாவிடில் மலேரியா கொசுக்கள் நம்மை கொல்லும்ங்க.
மனிதனுக்கு என்று காய்ச்ச்ல் எதுவுமே இல்லை என்பது வருத்தத்திற்குரியதுதான்.
பறவை காய்ச்சல்,எலிக்காய்ச்சல்,பன்றிக்காய்ச்சல்,குரங்குக் காய்ச்சல் என்றுதான் வருகிறதே ஒழிய மனிதப்பயல் காய்ச்சல் என்று ஒன்றும் இல்லையே.


ஆனால் எந்த பெயரில் வந்தாலும் காய்ச்சலை விலையில்லா பொருளுக்கு அலைவது போல் அலைந்து வாங்குவது மனிதர்கள்தானே.
மனிதனுக்கு அதுவும் அரசியல் வாதிகளுக்கு வரும் முக்கிய காய்ச்சல் பெயர் நாற்காலி காய்ச்சல் .அது வந்தால் கூடவே பதவி வெறி,கூட்டணி நடுக்கம்,
வாக்கு வாங்க பிதற்றம்,வாக்கு எண்ணிக்கை பேதி எல்லாமே கூட வந்து விடும்.பதவியேறிய பின் ஒட்டு மொத்த வியாதியான வாக்குறுதிகள் -தொகுதி மறதி வந்து ஆளையே மாற்றி விடும்.
இப்போது புதுக்கோட்டைப் பகுதியில் இக்காய்ச்சல் நடமாடுகிறதாம்.பார்த்து வெவரமா இருந்துக்கோங்க.
@
இந்திய அரசு பிளாஸ்டிக் பைகளை தடை செய்வதில் சுற்று சூழல் தான் முக்கிய காரணம்.ஆனால் அதை தடை செய்வதில் இது போன்ற செயல்களையும் தடுக்கலாம்.
மெக்சிகோவின் மாண்டெர்ரி நகரில் நெடுஞ்சாலையில் 49பிளாஸ்டிக் பைகள்
கிடந்துள்ளது.அங்கு போதை மருந்து மாபியாக்கள் அதிகம் .
சுரன்


அதில் யாரோ கடத்திய பைகள்தான் தவறி விழுந்து விட்டதோ என்று காவலர்கள் துண்டிக்கப்பட்ட மனிதத் தலைகளை காவலர்கள் கைப்பற்றியுள்ளனர்.சுமார் 49 தலைகள் துண்டிக்கப்பட்டு பிளாஸ்டிக் பைகளில் அடைக்கப்பட்டு நெடுஞ்சாலையில் வீசியெறியப்பட்டுள்ளன.கடத்தல் கும்பல்களுக்கு இடையே அடிக்கடி மோதல்கள் ஏற்படுவதுஉண்டு. அது போன்ற மோதலில் இந்த படுகொலைகள் நடந்து இருக்கலாம் என்று காவலர் தெரிவித்துள்ளனர்.பிளாஸ்டிக் கேரிப்பைகளால் இப்படி கூட பயன் உள்ளது.
@
மலேசியாவில் தமிழ் தொலைக்காட்சிகளின் மகாத்தொடர்களுக்கு தடை போட வேண்டும் என்று குரல்கள் எழும்பியுள்ளது.
காரணம் அதனால் இளம் வயதினரிடையே ஒழுக்கக் கேடுகள் உண்டாகி வருகிறதாம்.
பலரும்-பலருடன் பல காதல்கள் செய்வதும்,கள்ளக்காதலை நியாயப்படுத்துவது போலும்,அது ஒன்றும் தப்பேயில்லை என்று நியாயப்படுத்துவதாக இத்தொடர்கள் அமைந்துள்ளதாம்.
சுரன்


பெண்களை வில்லிகளாகவும் போலவும்,ஆண்களை காமாந்தகாரர்களாகவும் காட்டுக்கிறார்கள்.
மேலும் பெரியவர்களை மதிப்பதையும் கேலிக்குரியதாக்கி வருகிறது.தமிழ் கலாச்சார சீரழிவைத்தான் இந்த மகாத்தொடர்கள் உருவாக்கிவருவதாக பினாங்கு பயனீட்டாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
இங்கே எப்போது தடை வரும் என்று பார்த்தால் எல்லா சானல்களும் அரசியல்வாதிகளிடம்தானே இருக்கிறது.தடையாவது,கடையாவது


மக்களுக்கு வருகின்ற புற்றுநோய்களில் ஒரு பங்கு தவிர்க்கக்கூடிய மற்றும் குணப்படுத்தக்கூடிய கிருமித் தொற்றுகளினால்தான் ஏற்படுகிறது என புதிய ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
உலக அளவில் புற்றுநோய் வரும் ஆட்களில் ஆறில் ஒருவருக்கு இந்த நோய் கிருமித் தொற்றுக்களினால் ஏற்படுவதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது.கிருமித் தொற்றினால் புற்றுநோய் வருபவர்களின் எண்ணிக்கை வருடத்திற்கு கிட்டத்தட்ட இருபது லட்சம் ஆகும்.
சுரன்
புற்றுநோய் ஏற்படுத்தும் கிருமி-பாப்பிலோமா.
வளர்ந்துவரும் நாடுகளில் இந்த கிருமித் தொற்றினால் ஏற்படுகின்ற புற்றுநோய்களின் விகிதம் மேலும் அதிகம் என்றுஆய்வு கூறுகிறது.
பிரான்சில் உள்ள சர்வதேச புற்றுநோய் ஆராய்ச்சி அமைப்பு இந்த ஆய்வை மேற்கொண்டனர்.
புற்றுநோயையும் தொற்று நோயாக அங்கீகரிக்க வேண்டும் என இந்த அமைப்பு கோருகிறது.
புற்றுநோயை உண்டாக்ககூடிய கிருமித் தொற்றுக்களை தடுப்பூசிகள் மற்றும் கிருமித் தொற்று சிகிச்சை முறைகள் கொண்டு கட்டுப்படுத்த கூடுதல் ஆராய்ச்சிகளும், முயற்சிகளும் மேற்கொள்ள வேண்டும் என்று இந்த அமைப்பு கூறியுள்ளது.


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?