ஆனந்தம் தொலைக்காட்சி வழங்கும்,,,,,,,,,,,

இதுவரை நாம் நித்தியானந்தாவை விமர்சித்தே வந்துள்ளோம்.இப்போது அவரின் போட்டி பேட்டியை அப்படியே தருகிறோகம்.ஒரு ஆன்மீக குரு,ஆதினத்திற்குரிய தன்மை,குணம் இவருக்கு இல்லை என்பதையே இவரின் வார்த்தைகள் நமக்கு காட்டுகிறது.வெறும் அரசியல்வாதி போலும்,குழாயடிச்சண்டை போடும் தெருச்சண்டைக்காரர் குணமுமே இவரிடம் உள்ளது.இவரெல்லாம் ஒரு மதகுரு ஆகவே கொஞ்சமும் தகுதியில்லாதவர்.அதிலும் ஆதீனமாக்கியது படுபயங்கர முட்டாள்தனம்.அது முட்டாள்தனம் அல்ல கோடிகளினாலான காசுக்கு விற்கப்பட்டுள்ளது தெரிந்து விட்டது.
மதுரையில் நிருபர்களிடம் நித்தியானந்தா கூறிய திட்டியதாவது: "உள்நோக்கத்தோடு, தரம் கெட்ட விளம்பரத்திற்காக என் மீதுவழக்கு தொடர்ந்தவர்களுக்கு, கோர்ட் சரியான பதிலடி கொடுத்துள்ளது. குருசாமி தேசிகர் மீது வழக்கு தொடரப்படும். 13 ஆதீனங்கள் தான் என் நியமனத்தை எதிர்க்கின்றனர். கணக்கில் வராத சில "லெட்டர் பேடு' ஆதீனங்களும் அதில் உள்ளன.[ஆமாங்க திருச்செந்தூர் சைதன்யான்னா யாருங்க?] மதுரை ஆதீனத்தின் விபரங்களை தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் என்னால் கொண்டு வரமுடியும். எதிர்ப்பாளர்களால் முடியுமா. நான் வேண்டுமானால் நடு ரோட்டிற்கு வருகிறேன். தைரியம் இருந்தால், என்னை எதிர்ப்பவர்களும் ரோட்டிற்கு வரட்டும். அடுத்த ஒரு மாதத்தில், புதிய ஞான பீடம் உருவாக்கும் ஞானம் என்னிடம் உள்ளது. அவர்களால் முடியுமா? 
நான் பணத்தை சுற்றவில்லை; பணம் தான் என்னை சுற்றுகிறது.[ரஞ்சிதா,மற்றும் சிஷ்யைகள் சுற்றுவதை விட்டுட்டீங்களே?] நான் செய்யும் சேவைக்கு, பலர் அன்பளிப்பு தருகின்றனர். பணம் என்னை நிழலாய் தொடர்வதால், எனக்கு அதன் மீது ஆசை இல்லை.[பின் எதற்கு முன் வரிசைக்கு இவ்வளவு,தலையில் கையை வைத்தால் இவ்வளவு என்று கசாப்புக்கடை கட்டணவிபரம்} அவர்களுக்கு சம்மதம் என்றால், அனைத்து ஆதீனங்களையும் தமிழக அரசிடம் ஒப்படைத்துவிடலாம்.அதன் பின் ஆதீனம் அருணகிரிநாதரை, நித்யானந்தா ஞான பீடத்தில் அமர வைப்பேன். எதிர்பார்ப்பாளர்களின் தீர்மானத்தை காஞ்சி ஜெயேந்திரர் ஆதரிப்பதாக கூறியுள்ளார். "குற்றப்பின்னணி உள்ள ஒருவரை அனுமதிக்க முடியாது,' என, அந்த தீர்மானத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
கொலை வழக்கில் உள்ள ஜெயேந்திரருக்கும் அது பொருந்தும்
. [அவரை உள்ளேபோட்ட அம்மா உங்களுக்கு ஆதரவாக இருப்பதையும் எடுத்து சொல்லுங்க]மதுரை ஆதீன சம்பிரதாயங்களை பற்றி அவருக்கு என்ன தெரியும். எதிர்ப்பாளர்களின் தீர்மானத்தில் உள்ள விபரங்கள் தெரியாமல், கையெழுத்திட்டதாக சிலர் தெரிவித்துள்ளனர். அதை எழுத்துப்பூர்வமாக கேட்டுள்ளோம், என்றார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அர்த்தமண்டபம் வரை சென்று வழிபட, ஆதீனங்களுக்கு அதிகாரம் உண்டு. நான் அங்கு சென்றால், என்னை அவமதிக்கின்றனர். என் பாதுகாப்புக்கு வந்த போலீஸ் அதிகாரி ஒருவரே, என்னை சோதனையிடுகிறார், அவமதிக்கிறார். என் சிஷ்யைகளை தகாத முறையில் நடத்துகிறார். [இன்னமும் சிஷ்யைகள் கூடதான் உலவுகிறார்]ஆதீனத்துடன் சென்றால் இந்த பிரச்னை இருப்பதில்லை. நான் தனியாய் சென்றால் , என்னை மிரட்டுறாங்க, என்றார். 
"நான் ரஞ்சிதாவுடன் இருக்கிறேன். என்னுடனே அவர் வருகிறார் என ஜெயேந்திரர் கூறிய கருத்துக்கள் அவதூறானது. பத்து நாட்களில் இக்கருத்தை வாபஸ் பெற வேண்டும்,
காஞ்சி மடம் மீது எனக்கு மதிப்பு உண்டு. யாரோ சொன்னதை கேட்டு ஜெயேந்திரர் பேட்டி கொடுத்துள்ளார். நான் ரஞ்சிதாவுடன் இருக்கிறேன். என்னுடனே அவர் வருகிறார் என என் மீது கூறிய கருத்துக்கள் அவதூறானது. பத்து நாட்களில் இக்கருத்தை வாபஸ் பெற வேண்டும். இல்லாதபட்சத்தில் 10 நாட்களுக்கு பின் எனது முடிவை அறிவிப்பேன். பொறுமையாக இருப்பதால் நான் பலசாலியானவன் இல்லை என கருத வேண்டாம். நான் உலகம் அறிந்தவன்.மற்ற ஆதீனங்களுக்கு நான் விதித்த கெடு இன்னும் முடியாததால், அதுகுறித்து தற்போது கூற முடியாது. என்னை புரிந்துக்கொண்டவர்கள் ஆதரிக்கின்றனர். நான் பணம் கொடுத்துதான் ஆதரவு பெற வேண்டும் என்ற அவசியமில்லை. ஜெயேந்திரர் கூறிய கருத்துகள் குறித்து விளக்கம் கேட்க, நேற்று காலை அவரது மடத்திற்கு நான்கு முறை தொடர்பு கொண்டோம். ஆனால் "கட்' செய்துவிட்டனர். அவர்கள் விருப்பப்பட்டால், நேரில் விளக்கம் அளிக்க தயாராக இருக்கிறேன், என்றார்.
நித்தியானந்தா, தன் அடுத்த முயற்சியாக, "ஆனந்தம்' என்று தொலைக்காட்சி ஒன்றை தொடங்குகிறார். தனக்கென "சானல்' தொடங்கும் முயற்சி தான் அது. ஆன்மீக தகவல்கள் அடங்கியதாக அந்த சேனல் இருக்கும். சேனல் தொடங்குவதற்கான உரிமம்பெற்றுள்ள நிலையில், விரைவில் சோதனை ஒளிபரப்பு தொடங்க உள்ளது.அன்பர்களுக்கு விருந்தாக இருக்குமாம்.
முதல் நாள் சிறப்பு நிகழ்ச்சியில் "ரஞ்சிதா-நித்தி மற்றும் கட்டில்"குறும்படத்தை போட்டீங்கீனா டிஆர்பி ரேட்டிங்க் னு சொல்லுவாங்களே அது ஆனந்தம் சானலுக்கு ரொம்ப கிடைக்கும்.அதோட அன்பர்களுக்கு விருந்து தரும்ஆனந்தம் தரும் காட்சிகளாக ஒளிபரப்பினால் தடை செய்திட மாட்டாங்களா?

சுரன்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?