மின் சாரம்,,,,,,,,.

இப்போது எங்கள் பகுதியில் மின்தடை மிகக் குறைவாக அல்லது இல்லவே இல்லை எனலாம்.
மின் வெட்டில் பழகி,பழகி முழு நேரம் மின்சாரம் இருப்பது கூட சிரமமாக உள்ளது போல் தெரிகிறது.தெருவில் அலறும் பாடல்கள்,வீடுகளில் சத்தமாக வைக்கப்பட்ட தொலைக்காட்சியின் மகா தொடர்களின் மெகா அழுகை சத்தங்கள் எரிச்சலாகத்தான் உள்ளது.
சுரன்

மின் தடையினால் அமைதியை அனுபவித்து விட்டு இந்த ஒலி,ஒளி மாசு மனதை ஒட்டடையாக்கிவிடுகிறது.
இப்போது எப்போது மின்சாரம் போகும் என்று எண்ணும் அளவு மின் வெட்டு போதை ஏறிவிட்டது எனலாம்.
என்ன.இரவு மின் விசிறி தடை யின்றி சுழல மின்சாரம் தேவைப்படுகிறது.இல்லைஎன்றால் வியர்வைக்கு விசிறி வீசியும்,கடிக்கும் கொசுவை அடிப்பதற்கும் உபயோகித்து கைகள் வலிக்கிறது.தூக்கம் இல்லாமல் மனது கோபம் கொள்கிறது.
ஆனால் கோடிகளை வாங்கி விட்டும் தங்கக்கோல்களை பெற்றுக்கொண்டும் நித்தியானந்தாவை பதவில் அமர்த்தியதில் எந்த மாற்றமும் இல்லை என்றும் தனக்கு யாரும் போதை ஊசி போடவில்லை என்று தானாகவே அருணகிரி கூறியுள்ளார்.

அவர் இவ்வளவு நாள் பேசாமல் இருந்ததற்கு போதைஊசிதான் காரணமா? 
இந்த நித்தி காலை வைத்தவுடனேயே மதுரை ஆதீனத்திலும் வைஷ்ணவி என்ற பெண்ணைக்காணோம் என்ற குற்றசாட்டுகள் கிளம்பி விட்டதே.
அவர் காணாமல்போன பின்னர் காவல்துறையிடம் கூறாமல் மதுரை ஆதீனத்தை சேர்ந்தவர்கள் ரகசியமாகவே தேடி வருவதாக ரகசியத்தகவல்கள் எல்லாருக்கும் தெரியவந்துள்ளது.
சுரன்

அருணகிரி தான் ஆதீனம் இதுவரை காவல்துறை,நீதிமன்றம் படிகள் ஏறியதில்லை .மற்றவர்கள் வழக்கு தொடுத்தால் நீதிபதிகள் இங்கு வரலாம்.விசாரிக்கலாம் என்று கூறியுள்ளார்.
அதைவிட நித்தியானந்தாவை நியமித்ததன் மூலம் மதுரை ஆதீனம் புகழ்உலக நாடுகள் முழுக்க பரவும் என்றும் கூறி முடித்துள்ளார்.
அது உண்மை.இப்போது மதுரை ஆதீனம் பற்றிதான் உலகம் முழுக்க பேசுகிறதே. இப்பிடி இல்லை.அப்படி .
ஏப்ரல் 21 ம் தேதி கடத்தப்பட்ட தமிழக்த்தை சேர்ந்த ஒடிசா மாவட்ட ஆட்சியர்
12 நாட்களுக்குப்பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
சுரன்

அதற்காக தீவிரவாதிகள் மீதான வழ்க்கை மறு பரீசிலனை செய்ய அரசு ஒப்புக்கொண்டுள்ளது.
மாவோயிஸ்ட் என்று அவர்களுக்கு பெயர் வைப்பது சரியானதாக தெரியவில்லை.
தீவிரவாதிகள் மட்டும்தான் அவர்கள்.
பள்ளியை குண்டுவைத்து தகர்ப்பவர்கள்,ரெயில் தண்டவாளத்தை பெயர்த்து பொது மக்களை கும்பலாக க்கொல்பவர்கள் .அதன் மூலம் அரசினை மிரட்டுபவர்களை மாவோயிஸ்ட் என்பது சரியா?
ஏழைகளுக்காக பாடுபடுபவர்கள் அவர்கள் நலனுக்காக தீவிரவாதத்தில் இறங்குபவர்கள்தாம் மாவோயிஸ்ட்.
ஒடிசா கனிம வளங்களை அம்பானி,அனில் அகர்வால்,போஸ்கோ போன்ற பகாசுர பணக்காரர்கள் கொள்ளை அடிப்பதை கண்டு கொள்ளாதவர்கள்.
பழங்குடியினர் தங்கள் நிலங்களை விட்டு இவர்கள் கொள்ளையடிக்க ஏதுவாக விரட்டியடித்து நாடோடியாக்குபவர்களைக் கண்டு கொள்ளாதவர்கள்.அதற்காக போராடாதவர்கள் எப்படி மாவோயிஸ்டுகளாக,சித்தாந்தவாதிகளாக இருக்க முடியும்.
இதுவரை அவர்கள் கொலைகள்,கொள்ளைகள் அவரகள் ஏற்றுக்கொண்டதாகக்கூறும் மாவோ கொள்கைகளை ஒட்டி ஏதாவது நடந்துள்ளதா?

மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட் கட்சியை ஆட்சியில் இருந்து அகற்ற மம்தா கட்சியினருடன் இணைந்து செயல் பட்டவர்கள்.ஆட்சி மம்தாவிடம் மாறியதை தவிர என்ன பயனை பெற்றார்கள்.இன்று அதே சிங்கூர்நந்திகிராமம்.மக்கள் புலம்பிக்கொண்டுதானே இருக்கிறார்கள்,அவர்கள் நிலம் அவர்களிடம் ஒப்படைக்கப்படவில்லையே.
முந்தைய அரசு நில எடுப்புக்கு இழப்பீடாகக் கொடுத்த பணத்தையும் ,வேலை வாய்ப்பையும் ஏற்க விடாமல் செய்து போராட தூண்டி ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினார்கள்.
ஆட்சி மாற்றத்திற்கு பின் பணமும்,வேலை வாய்ப்பும் போய் இப்போது அவர்கள் நிலத்தையும் திருப்பி வழங்காமல்தானே மம்தா அரசு உள்ளது.
இதற்கு மாவோக்கள் என்ன செய்யப்போகிறார்கள்.?
சுரன்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?