கிரிக்கெட் போதை
இப்போதைய.ஐந்தாவது ஐ.பி.எல்., தொடருக்கும் -கிரிக்கெட் வீரரளுக்கும் நேரமே சரிஇல்லை. கிரிக்கெட் வீரர்கள் சூதாட்டத்தில் மாட்டிக்கொண்டவர்கள், ஷாருக்கான் சண்டை அதனால் உள்ளே வரத் தடை, செக்ஸ் புகாரில் ஆஸ்திரேலிய வீரர் பாமர்ஸ்பச் கைது .
இப்போது போதை மருந்து பயன்படுத்தி விருந்தில் ஆடியது புதிதாக வந்துள்ளது.
மும்பை, சபர்பன் ஜுகு பகுதியில் உள்ள ஆக்வுட் ஓட்டலில் பார்ட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் புனே வாரியர்ஸ் அணியில் பணத்துக்கு ஆடும் ராகுல் சர்மா (இந்தியா), பார்னல் (தென் ஆப்ரிக்கா) மற்றும் சில பிரமுகர்கள், அழகிகள் பங்கேற்றுள்ளனர். இநத விருந்தில் போதை மருந்து பயன்படுத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
ஓட்டலில் "சோதனை'க்கு சென்ற போலீசார், 2 கிரிக்கெட் வீரர்கள் <உட்பட 56 ஆண்கள், 38 பெண்களை ஸ்டேஷனுக்கு கொண்டு சென்றனர். இவர்களது ரத்தம், சிறுநீர் மாதிரிகள் சோதனைக்கு எடுக்கப்பட்டு, பின் விடுவிக்கப்பட்டனர்.
விருந்துக்கு ஏற்பாடு செய்த ஓட்டல் இயக்குனர் விஷாய் ஹண்டா மீது மட்டும்போதை மருந்து பயன்படுத்துதல், தடுத்தல் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளார்.போலீஸ் கூடுதல் கமிஷனர் விஸ்வாஸ் படேல் கூறுகையில்,"" 110 கிராம் எடையுள்ள கோகைன், எஸ்டசி மற்றும் சாரஸ் என்ற போதைப் பொருட்கள் பிடிபட்டன. இதில் சிக்கியவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது,'' என்றுள்ளார்.
சம்பவம் குறித்து தென் ஆப்ரிக்க வீரர் பார்னல் சொன்னது:கடந்த தொடரின் போது அறிமுகமான நண்பர் ஒருவரின், பிறந்த நாள் பார்ட்டிக்காக நானும், ராகுல் சர்மாவும் இரவு 7 மணியளவில் அங்கு சென்றோம். போதைப் பொருட்கள் சப்ளை செய்வது, பெரியளவில் பார்ட்டி நடப்பது எங்களுக்கு தெரியாது. ஓட்டலின் மொட்டை மாடியில் தான் பார்ட்டி நடந்தது. திடீரென போலீசார் வந்து சோதனை செய்தனர். பார்ட்டியில் நாங்கள் மது அருந்தவில்லை. புகை பிடிக்கவில்லை. தண்ணீர்[?] மட்டும் குடித்து விட்டு நடனம் ஆடினேன். இதில் குற்றம் இருப்பதாக தெரியவில்லை.
மற்றொரு தண்ணீர் மட்டும் குடித்து விட்டு ஆடிய ராகுல் சர்மா கூறுகையில், ""வாழ்க்கையில் "பீர்' கூட குடித்தது இல்லை. இந்நிலையில், இது போன்ற பார்ட்டியில் நான் பங்கேற்கிறேன் என, எப்படி செய்திகள் வெளியாகின்றன என்றே தெரியவில்லை. பிறந்தநாள் விருந்து என்ற அழைப்பில் தான் நானும், பார்ன<லும் சென்றோம். அடுத்த அரைமணி நேரத்தில் என்ன நடந்தது என்றே தெரியவில்லை. போலீசாரிடம் கேட்டபோது, "ரெய்டு' நடப்பதாக கூறினர். நடந்தது அனைத்தையும் அணி நிர்வாகத்திடம் கூறினேன். சோதனை முடிவு வந்த பின் உண்மை தெரியும். நான் போதைப்பொருள் பயன்படுத்தினேன் என தெரிந்தால், கிரிக்கெட்டை விட்டே விலகுகிறேன்,'' என்றார்.
விருந்தில் கலந்து கொண்டு விட்டு ஒருவர் தண்ணீர் மட்டும் குடித்து விட்டு ஆட்டம் போட்டேன் என்பதும்.
மற்றவர் விருந்தில் நான் கலந்தகொண்டேன் என்று செய்தி எப்படி வெளியானது என்று தெரிய வில்லை என்பதும் வேடிக்கையானது.
ஆனால் இவ்விருந்தில் கோகைன், எஸ்டசி,சாரஸ் போன்ற தடை செய்யப்பட்ட போதை மருந்துக்கள் கைப்பற்றப்பட்டது வேடிக்கையானது அல்ல.
கிரிக்கெட் வீரர்கள் பின்னே ஓடும் நமது மக்களை திருந்த இன்னும் இப்படி ஏதாச்சும் செய்து கொண்டே இருங்க.அப்போதாவது கிரிக்கெட் பைத்த்யம் குறைகிறதா என்று பார்ப்போம்.
_________________________________________________________________________________

இஸ்லாத்தை அவமதிக்கும் விடயங்களை அகற்ற மறுத்த காரணத்தால், டுவிட்டர் இணையத்தளத்தை தடை செய்வதாக பாகிஸ்தானில் உள்ள தொலைத்தொடர்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முகமது நபியை உருவகம் மூலம் குறிப்பிடுவதை மத நிந்தனையாகமுஸ்லீம்கள் கருதும் நிலையில், டுவிட்டரில் வந்த ஒரு கேள்வி, அவருக்கு ஒரு உருவப்படத்தை ஃபேஸ்புக்கில் பரிந்துரைப்பதை போட்டியாக வைத்திருந்தது.
அந்தப் போட்டி குறித்தவற்றை எடுக்க ஃபேஸ்புக் ஒப்புக்கொண்டிருந்ததாகவும்,ஆனால் டுவிட்டர் உடன்படவில்லை என்றும் பாகிஸ்தானிய தொலைத்தொடர்புத்துறையின் தலைவரான முகமட் ஜசீன் கூறியுள்ளார்.
அந்த விடயங்கள் அகற்றப்பட்டால் மட்டுமே அந்த இணையத்துக்கான தடை நீக்கப்படும் என்று பாகிஸ்தான் அரசு கூறியுள்ளது.
டுவீட்டரா முஸ்லீம் மதவாதமா எது விட்டுக்கொடுக்கும்?
_________________________________________________________________________________
உலகெங்கும் பக்கவாதம், இதய நோய் மற்றும் புற்று நோய் அபாயங்களை கூடுதலான மக்கள் எதிர்கொள்கிறார்கள் என்று சர்வதேச சுகாதார ஸ்தாபனம்(WHO)தெரிவித்துள்ளது.
மக்கள் கூடுதலாக கொழுப்புள்ள உணவுகள், சர்க்கரை மற்றும் உப்பை அதிகமாக உட்கொண்டு, குறைவான உடற்பயிற்சிகளை செய்கிறார்கள்.இதனால் அதிகமான நோய்கள் வருகின்றதாம்.194 நாடுகளிலிருந்து சுகாதாரம் பற்றி கிடைக்கப்பெற்ற புள்ளி விபரங்களை ஆராய்ந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் உயர் ரத்த அழுத்தம் மற்றும் உடல் பருமன் போன்ற நிலைமைகள் உலகெங்கும் அதிகரித்து வருவதாக எச்சரித்துள்ளது.
உலகின் மக்கட் தொகையில் 12 சதவீதமானவர்கள் உடல் பருமனுடையவர்களாக இருக்கிறார்களாம்.