மொட்டையடியுங்கள்..........
2-ஜி யை விற்று விட்டு அதில் சில தகிடுதத்தம் செய்ததால் உள்ளே 15 மாதங்கள் இருந்து விட்டு வெளியே வந்துள்ள ஆ.ராசா வுக்கு எல்லோரையும் போல் நாமும் வாழ்த்துக்கள் ,வணக்கங்கள் கூறிக்கொள்வோம்.
பிணை கேட்கவே மாட்டேன் என்றவர் திடீரென ஏன் கேட்டார் என்று தெரியவில்லை.
இதனால் 2-ஜி வழக்கு வலுவிழந்து விடும் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.இதுபோல் பல வழக்குகளை பார்த்தவர்,மாட்டியவர் என்பதால் அவர் சொல்வது அனுபவபூர்வமான உண்மையாக இருக்கும்.
ஆனால் அந்த வழக்கு என்றோ வலுவிழந்து விட்டது.சி.பி.ஐ பல இடங்களில் மத்திய அரசு கூறியபடி சொதப்பியுள்ளது தெரிந்ததுதானே.
சொல்லப்போனால் விசாரணை உண்மையான திசையில் போயிருக்குமானால் சிதம்பரம்,மன்மோகன் சிங் ,அருண் ஜெட்லி போன்றோரையும் விசாரித்திருக்க வேண்டும்.
ஆனால் சிதம்பரத்தை விசாரிக்க மறுத்ததோடு அவருக்கு நற்சான்றையும் சிபிஐ வழங்கியுள்ளதே.சந்தேகம் என்று வந்து விட்டால் சீதையை கூட தீயில் இறக்கிய கதை உள்ளதே.ஏன் விசாரிக்க வில்லை.சுப்பிரமணிய சுவாமியும் எத்தனை நடை அலைந்து விட்டார்.சிபிஐ அசைந்து கொடுக்கவில்லையே.
அப்போதே இந்த வழக்கு திசை மாறி,வலுவிழந்து விட்டது.மாட்டியவர்கல் ஆ.ராசாவும்,கனிமொழியும்தான்.மாட்டாதவர்கள்தான் இந்தவழக்கின் அடித்தளம்.
அடித்தளங்கள் கண்ணுக்குத்தெரியாதுதான்.
இந்த 2-ஜி வழக்கினால் என்னைப்போன்ற அடிமட்டங்களும் அலைக்கற்றை என்றால் என்ன?அதன் உபயோகம்,போன்ற அடிப்படை விபரங்களை தெரிந்து கொண்டோம்.அது போதாதா?
இந்த வழக்கினால் பயன் இல்லை என்று இனியும் சொல்லாதீர்கள்.
@
நல்ல உடல் நல்த்துடன் இருக்கும் நமக்கு அந்த ஹெச் ஐ வி கிருமி தாக்கிவிடாமல் இருக்க ஒரு மருந்தை கண்டு பிடித்திருக்கிறார்கள்.அதன் பெயர் ட்ருவாடா.கொஞ்சம் மரியாதை குறைவான பெயரை வைத்திருக்கிறார்கள்.உய்ர் கொல்லி நோய்க்கு என்னடா மரியாதை என்று எண்ணி யிருப்பார்கள்.
ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு அந்த நோய் தொற்று அதிகம் உள்ளதால் அவர்களுக்கு அதிகம் கொடுக்கப்பட வேண்டும் என்று மருத்துவக்குழு அறிவித்துள்ளது.
இந்த சமயம் போய் பாரக் ஓபாமா ஓரினச்சேர்க்கை நல்லதுதானே என்று அமெரிக்க தேர்தலில் வாக்குகளை அப்படிப்பட்டவர்களிடம் இருந்து அள்ள சொல்லியிருக்கிறாரே?போகிற போக்கில் வாக்குக்காக நானும் அப்படித்தான் என்று சொல்லாமல் இருந்தா சரிதான்.
அமெரிக்கா தேர்தலில் ஒபாமா வெல்கிறாரோ என்னவோ .அவரின் ஓரின சேர்க்கையாளர்கள் திருமணம் செய்து கொள்ளலாம் என்ற பேச்சு அப்படிப்பட்டவ்ர்களிடமிருந்து ஓபாமாவுக்கு தேர்தல் நிதியாக 75 கோடியை பெற்று தந்துள்ளதாம்.
ஓபாமா இப்படி என்றால் மோட்கன் பெமாய் எய்ட்ஸை ஒழிக்க ரொம்ப நாள் ஆய்வு செய்தவர் போல் "பெண்களுக்கு மொட்டை அடிக்க வேண்டும்.அவர்கள் உடல் குளிர்ச்சியை தடுக்க குளிப்பதையும் நிறுத்த வேண்டும்.அதன் மூலம் எய்ட்ஸை குணப்படுத்தி விடலாம்" என்று கூறியுள்ளார்.
பெமாய் என்றால் யார் என்று பார்க்கிறீர்களா?அவர் ஜிம்பாப்வே மக்களவை உறுப்பினர்.எய்ட்ஸ் உள்ளவர்கள்.இல்லாதவர்கள் எல்லோரும் வாக்களித்து வென்றவர்.
பெண்கள் மொட்டை அடித்து விட்டால் காண சகிக்காது[அங்கேயும் அப்படித்தானா?] இதனால் ஆண்கள் பெண்கள் வலையில் சிக்காமல் அதாவது அடிக்கடி உடலுறவு கொள்ள மாட்டார்கள்.அதனால் எய்ட்ஸ் பரவுவது தன்னாலேயே குறைந்து விடும்.மேலும் அவர்கள் உடல் உறுப்புகள் ஈரப்பதமாக இருப்பதால் குளிப்பதை நிறுத்தி விடலாம்.என்று அதற்கு அவர் விளக்கமும் தந்துள்ளார்.
ஆனால் இந்த விளக்கம் போதாது என்று சிலர் அவருக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனராம்.அதில் பெண்கள்தான் அதிகமாம்.
நல்லதை நாடு கேட்காதே.பெமாய் மனந்தளராமல் இன்னும் பல நோய்களை ஒழிப்பது தொடர்பாக மேலும் ஆய்வுகளை மேற்கொண்டு அறிவிக்க வேண்டும்.
@
இந்தியா இறக்குமதி பொருட்களை கட்டுப்படுத்துவதை எதிர்த்து, உலக சுகாதார அமைப்பிடம் இந்தியா மீது அமெரிக்கா புகார் செய்துள்ளது. சிக்கன், முட்டை உட்பட வேளாண் பொருட்களை இறக்குமதி செய்ய இந்தியா பல கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என்று இந்தியாவிடம் அமெரிக்கா பலமுறை வலியுறுத்தியது. இதுதொடர்பாக இந்தியாவுடன் பல முறை பேச்சு நடத்தியும் பலன் இல்லை.
அதனால்உலக சுகாதார அமைப்பின் குறைதீர்வு கமிட்டியிடம் அமெரிக்கா குற்றம் கூறியுள்ளது. இந்தியாவில் தங்கள் பொருள்களை மக்கள் தலயில் கட்ட அமெரிக்க வேளாண் பொருள் உற்பத்தியாளர்கள் ஆர்வமாக உள்ளனர். இந்தியாவில் மிகப்பெரிய சந்தையும் உள்ளது.
ஆனால், அமெரிக்காவில் இருந்து கறிக்கோழி, முட்டை உட்பட வேளாண் பொருட்களை இறக்குமதி செய்ய இந்தியாகட்டுப்பாடுவிதித்துள்ளது. அவற்றை நீக்கி , அமெரிக்காவில் இருந்து வேளாண் பொருட்களை[கழிவுகளை?] இந்தியா அதிகமாக இறக்குமதி செய்ய வேண்டும். அதற்கு உலக சுகாதார அமைப்பின் குறைதீர்வு குழு நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று அமெரிக்க வர்த்தக பிரதிநிதி ரோன் கிர்க் கூறியுள்ளார்.
இங்கேயா உள்ள கோழி,முட்டைகளை அதிகமாக நம்ம நாமக்கல் காரர்கள் ஏற்றுமதி செய்து கொண்டிருக்கிறார்கள்.அதனால் பலர் பிழைத்துக்கொண்டிருக்கிறார்கள்.
இந்தியா அமெரிக்க முட்டைகளை வாங்க வேண்டுமாம் இந்த கூமுட்டை புலம்புகிறது.
இவர்கள் நாட்டில் வேளாண் பொருட்கள் அதிகம் இருந்தால் அதை தள்ளி விட இந்தியாதான் கிடைத்ததா?
அவர்களையும் குறை சொல்ல முடியாது .சரத் பவார்,மன்மோகன் சிங் ,அலுவாலியா மாண்டேக் சிங் கூட்டம்.இங்குள்ள கோதுமையை மலிவு விலைக்கு ஏற்றுமதி செய்து விட்டு அமெரிக்காவிடமிருந்து அதிகம் விலைக்கு இறக்குமதி செய்யும் அதி புத்திசாலிகள் அல்லவா?
பொருளாதாரப் பு[ளி]லிகள் அல்லவா?
அடுத்த மக்களவை கூட்டத்திலேயே அமெரிக்க கோழி முட்டைகளையும்,விட்டைகளையும்[உரத்துக்குதான்] வாங்க மசோதா கொண்டு வந்தாலும் கொண்டு வருவார்கள்.இந்தியாவின் தலை நகரம் இப்போது வாஷிங்டந்தானே?

மோர்கன் பெமாய் |

ஒரினத்திருமணம் ஒபாமா .கார்டூன். |

இதுதான் ஒரினச்சேர்க்கையோ? |