ராஜ் நாராயணன் வரிசையில் மம்தா,

இந்திய அரசியலில் அவ்வப்போது ஒரு தலைவர் மக்களுக்கு அரசியல் ரசனையாக இருக்க வடிவேலு பாணியில் நடந்து கொள்வது உண்டு.
ஜனதா காலத்தில் தலையில் கைக்குட்டையை கட்டியபடி எப்போதும் காட்சி தரும் ராஜ் நாராயணன் இந்திரா காலத்தில் அரசியலை சுவையாகக்கொண்டு போனார்.
அப்புறம் லாலு பிரசாத்யாதவ்,அவ்வப்போது சுப்பிரமணியன் சுவாமி,இப்போது இவர்கள் வரிசையில் சேர்ந்து கலகலப்பாக்கி வருகிறார் .மம்தா பானர்ஜி.


வெளிநாட்டு உதவியுடன் என்னை கொலை செய்ய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சதியில் ஈடுபட்டுள்ளது என்று மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதான் அவரின் புதிய நகைச்சுவை குண்டாகும்.
சுரன்

 அமெரிக்காவில் வெளியாகும் "வாஷிங்டன் போஸ்ட்' பத்திரிகையில் மம்தா குறித்து வெளியாகியுள்ள கார்ட்டூன், கட்டுரை குறித்து அவரிடம் சில பத்திரிக்கையாளர்கள் கேட்டபோது மமதா பொங்கி எழுந்து விட்டார்.. மார்க்சிஸ்ட் கட்சி தனக்கு எதிராக பல்வேறு சதிகளைச் செய்வதாக அவர் கடுமையாகக் குற்றம்சாட்டினார். "என்னை கொலை செய்வதற்காக மாவோயிஸ்டுகளுடன் இணைந்து மார்க்சிஸ்ட் கட்சியினர் சதி செய்து வருகின்றனர். இதற்கு பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-யும் உதவி செய்கிறது.
வடகொரியா, வெனிசுலா, ஹங்கேரி ஆகிய நாடுகள் இந்தத் திட்டத்துக்கு நிதியுதவி அளிக்கின்றன. அவர்கள் எனக்கு மரணதண்டனை அளித்துள்ளனர். என்னைப் பற்றிய தவறான எண்ணங்களை ஏற்படுத்தும் ஜோடிக்கப்பட்ட புகைப்படங்களையும், அவதூறான தகவல்களையும் இணையதளங்கள் மூலம் பரப்பி வருகின்றனர்' என்றார்.
இவரை கொல்ல அவ்வளவு பணமா மார்க்சிஸ்டுகளுக்கு தேவைப்படுகிறது,
மூன்று நாடுகள் இணைந்து செய்யும் அளவு மகாதிட்டமா?
பாகிஸ்தான் ஐஎஸ் ஐயை சேர்த்த மம்தா இந்திய ரா வை விட்டு விட்டாரே.அதையும் சொன்னால் மன்மோகன் சிங் இன்னும் அதிகமாக இவரைப்பார்த்துப் பயப்படுவாரே.
சுரன்
   

வாஷிங்டன் போஸ்ட் நாளிதழில்அப்படி என்ன எழுதிவிட்டார்கள்.அக் கட்டுரையில்:, "இந்தியாவில் காங்கிரசு அரசுக்கு மிகப்பெரிய தடையாக இருப்பது மம்தா பானர்ஜி' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில் மொத்தமுள்ள 543 மக்களவைத் தொகுதிகளில் வெறும் 19 இடங்களில் மட்டுமே மம்தா பானர்ஜியின் கட்சி வெற்றி பெற்றுள்ளது.
எனினும் மத்திய அரசில் அனைத்து நிலைகளிலும் குறுக்கிடும் செல்வாக்கு அவருக்கு உள்ளது. மாநில அளவில் சிறிய கட்சியை நடத்தி வரும் அவர், பிரதமர் மன்மோகன் சிங்கைவிட அதிக அதிகாரம் படைத்தவராக வலம் வருகிறார்.என்று அந்த கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க பத்திரிகையின் விமர்சனங்கள் குறித்து கருத்துத் தெரிவித்த மம்தா, "எனது அரசியல் கொள்கை மார்க்சியமோ, முதலாளித்துவமோ இல்லை. ஏழை மக்கள் நலனுக்கானது. மேற்கு வங்கத்தில் ஆண்ட கம்யூனிஸ்ட்கள் கஜானவை காலி செய்ததுடன், பெரும் கடன் சுமையைத்தான் விட்டுச் சென்றுள்ளனர். ஆனால் மக்களை ஒருபோதும் ஏமாற்றமாட்டேன்' என்று மம்தா கூறினார்.

எது எப்படியோ ஊடகங்களில் தனது பெயர் அடிக்கடி வரும்படி செய்து விடுகிறார் மம்தா.
ஆனால் மம்தா பானர்ஜியின் குற்ற சாட்டைமார்க்சிஸ்ட் சும்மாவிடாது போல் தெரிகிறது.
 "அவரது குற்றச்சாட்டு முட்டாள்தனமானது. மார்க்சிஸ்ட் கட்சி மீது மோசமான குற்றச்சாட்டைக் கூறியுள்ள அவர் மீது அவதூறு வழக்குத் தொடருவது குறித்து ஆலோசித்து வருவதாக"வும் மார்க்சிஸ்ட் கட்சி தலைவர் சீதாராம் யெச்சூரி அறிவித்துள்ளார்.
வாஷிங்டன் போஸ்டில் அப்படி தாக்கி செய்தி வந்தால் மம்தா ஓபாமாவைத்தானே எச்சரிக்க வேண்டும்?
அமெரிக்கர்களை வங்காளிகள் காதலிக்கக்கூடாது,திருமணம் செய்யக்கூடாது என்று ஏதாவது ஆணைகளை பிறப்பிக்கலாமே?


_________________________________________________________________________________


மதிப்பெண் பட்டியல்
===================

கருணாநிதி மத்திய அரசு செயல்பாடுகளுக்கு மதிப்பெண் போட இயலாது என்றுள்ளார்.தமிழ் நாடு அரசுக்கு ஓடி ,ஓடி மதிப்பெண்களை போடுபவர் இதற்கு போட மறுப்பது.தானும் அதில் கையை நனைத்துள்ளதால்தான்.
ஊழல், வேலையில்லாத் திண் டாட்டம், அத்தியாவசியப் பொருட் கள் விலை உயர்வு மற்றும் இந்தியர் களால் வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத் தைப் பறிமுதல் செய்வது போன்ற அனைத்துத் துறைகளிலும் ஐ.மு.கூட் டணி அரசு தோல்வியடைந்து விட் டது.
சுரன்


ஐமுகூட்டணி அரசின் 3 ஆண்டு ஆட்சி காலத்தில் சாமானிய மக்களின் சுமையைக் குறைக்க எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. அரசு செயலற்ற நிலையில் உள்ளது என்று சிபிஐ(எம்) மூத்த தலைவர் சீத்தாராம் யெச்சூரி பத் திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.

அதிகரித்து வரும் விலைவாசி, வேகமாகச் சரிந்து வரும் பொருளா தாரம் மற்றும் ஊழல் போன்ற பிரச் சனைகளைச் சுட்டிக்காட்டிய யெச் சூரி, அரசு தனது வாக்குறுதிகளில் எதையும் நிறைவேற்றவில்லை என்று குறிப்பிட்டார். பெண்கள் இட ஒதுக் கீடு மசோதா மற்றும் உணவுப் பாது காப்பு மசோதா போன்றவற்றை முதல் 100 நாட்களுக்குள் நிறைவேற் றுவோம் என்று குறிப்பிட்ட ஐ.மு. கூட்டணி, அரசு இவை எதனையும் நிறைவேற்றவில்லை.

ஐ.மு.கூட்டணி அரசு அனைத்து முனைகளிலும் தோல்வியடைந்து விட்டது. இதுதான் ஐ.மு.கூட்டணி அரசின் 3 ஆண்டு கால சாதனை என்று சீத்தாராம் யெச்சூரி தெரி வித்தார்.
சுரன்


2006ம் ஆண்டு அன்னிய நாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட் டிருந்த கறுப்புப் பணம் ரூ.23,373 கோடி. ஆனால் 2010ம் ஆண்டு அது ரூ.9,295 கோடியாக குறைந்துள்ளது என்று ஐ.மு.கூட்டணி அரசின் வெள்ளை அறிக்கை தெரிவிக்கிறது. இக்கறுப் புப் பணம் எங்கே போனதென்று அரசுக்கு எதுவும் தெரியவில்லை. இந்தியாவிற்கு வெளியே பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்புப்பணம் எவ்வளவு என்று எந்தக் கணக்கு மில்லை.

இந்தியர்கள் வெளிநாட்டு வங்கி களில் பதுக்கி வைத்திருக்கும் பணத் தைப் பறிமுதல் செய்ய வேண்டும். கறுப்புப் பணத்தைச் சமாளிக்க இது தான் ஒரே வழி என்று சீத்தாராம் யெச்சூரி தெரிவித்தார்.

ஊழல்களில் மட்டுமே முன்னேற்றம்.


மன்மோகன்சிங் தலைமையி லான ஐக்கிய முற்போக்கு கூட்டணி யின் 2வது ஆட்சி 3 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இந்த 3 ஆண் டுகளுமே ஊழலில் சிக்கி, காங்கிரஸ் தலைமையிலான அரசை எழ முடி யாத வகையில் தலைகுனிய வைத் திருக்கிறது. உலகம் இன்னும் பொரு ளாதார மந்த நிலையில் தவித்துக் கொண்டு இருக்கிறது. முதல் 5 ஆண்டு ஆட்சிக் காலத்தில் 3 வருடம் 9 சதவீதம் வளர்ச்சி இருந்ததால், இந் தியப் பொருளாதாரம், இப்போதும் கொஞ்சம் தடுமாறாமல் இருக்கிறது.

கடந்த ஆண்டுகளில் தொழில் துறை, வேளாண்மை செழிப்பாக இருந்தது. ஏற்றுமதியும் குறிப்பிடத் தக்க வகையில் இருந்தது. நுகர்வோர் வாங்கும் சக்தி நன்றாக இருந்தது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாங் கும் சக்தி, எல்லோருக்கும் இருந்தது என, காங்கிரஸ் அரசு கூறினாலும், ஏழைகள், ஏழைகளாகவே, ஒரு வேளை உணவுக்கு அல்லாடிக் கொண்டிருக்கும் பரிதாபம், இந்திய கிராமங்களில் இன்னும் தொடரும் துயரமாக உள்ளது.


ஐ.மு.கூட்டணியின் முதல் ஆட் சிக் காலத்தில் வருமானமும் வேலை வாய்ப்புகளும் அதிகரித்ததாக பரபரப்பாக தெரிவிக்கப்பட்டுள் ளது.

2010ம் ஆண்டு தலைநகர் தில் லியில் காமன்வெல்த் விளையாட்டு போட்டி நடந்தது. இந்தப் போட்டி யில், மாபெரும் ஊழல், பல நூறு கோடி ரூபாய் அளவில் அரங்கேறி யது. காங்கிரஸ் எம்பியான சுரேஷ் கல்மாடிதான்,காமன்வெல்த் விளை யாட்டு அமைப்புக் குழு தலைவர். அவர் மீது ஊழல் குற்றம் சாட்டப் பட்டு திகார் சிறையிலும் இருந்தார்.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி தொடர்ந்து மிகவும் குறைந்து வருகிறது. அக்டோபர் - டிசம்பர் மாத காலகட் டத்தில் 2 ஆண்டுகளுக்கு முந்தைய குறைந்த நிலையான 6.1 சதவீதத்தை எட்டியது. உயர் வட்டி விகிதம் மற் றும் அரசின் மந்த நடவடிக்கையால் முதலீடு மற்றும் நுகர்வோர் தேவை யில் பெரும் சரிவு ஏற்பட்டது. வளர்ச்சியும் தடைபட்டது. தொழில் துறை வளர்ச்சி மார்ச் மாதம் 3.5 சதவீதமாக குறைந்தது. அமெரிக்கா வின் மதிப்பிலும், இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்து, 1 டால ருக்கு ரூ. 54.75 என்ற சரிவு நிலையை இந்திய கரன்சி கண்டது. இதனால் எண்ணெய் இறக்குமதிக்கு கூடுதல் செலவினம் செய்ய வேண்டியுள்ளது.

ரூபாய் மதிப்பு அதல பாதாளத் தில் சரிந்திருப்பதை கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது என நிதித்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி எச்சரித்துள்ளார்.


2011-12 ம் ஆண்டு காலகட்டத்தில் 18 ஆயிரத்து 500 கோடி வர்த்தக பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஏற்று மதி வருவாய் குறைந்துள்ள தால் ரூபாய் மதிப்பு பலவீனம் அடைந் துள்ளது.

பணவீக்கம் மீண்டும் இரட்டை இலக்க நிலைக்கு எகிறி உள்ளது. இதனால் உயர் வட்டி விகிதத்தை முத லீடு மற்றும் நுகர்வோர் தேவை விஷ யத்தில் குறைப்பது என்பது ரிசர்வ் வங்கிக்கு கடினமாகி உள்ளது.

நிதி பற்றாக்குறை உள்நாட்டு மொத்த உற்பத்தியில் 5.9 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.

சுரங்கத் துறையின் பெரும் திட் டங்களில் அரசு முடிவெடுக்க தாம தம் செய்துள்ளதால் வளர்ச்சி விகி தம் எதிர்மறை நிலையை அடைந் துள்ளது.

காங்கிரஸ் அரசை ஆதரிக்கும் பெரும் தொழிலதிபர்களும் கூட அரசின் கொள்கைகளில் தேக்கநிலை குறித்து எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
விலைவாசி உயர்வின் அடிப்படை காரணம் என்று தெரிந்தும் பெட்ரோல் ,டீசல் விலைகளை கண்டபடி மாதாமாதம் கூட்டிக்கொண்டே போவது மன்மோகன் சிங் பொருளாதார மேதை என்று அமெரிக்கா எப்படி கூறுகிறது என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
மொத்தத்தி அமெரிக்கா கூறுவதை மட்டும் இங்கே அமுல் படுத்தி இந்த நிலையை ஏற்படுத்திய சோனியா ஆட்சிக்கு கருணாநிதி மதிப்பெண் போட வேண்டும் .போட்டால் அது நிச்சயம் ஜெயலலிதா பெறுவதை விட மிகக் குறைவாகவே இருக்கும்.
_________________________________________________________________________________


சுரன்
ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மனித மிச்சங்கள் பெருவில் கண்டெடுக்கப்பட்டன.


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?