வேண்டாம்...
இப்போது மேதின கொண்டாட்டத்தை ஈழ அமைப்புகள் சண்டை போட்டு ஒற்றுமையாக கொண்டாடும் வேளை.யாழ் பகுதியில் ஆங்காங்கே புதிதாக மேதின சுவரொட்டிகள் மீது புதிதாக ஒரு சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது.அது எமக்கு தனித்தமிழீழம் வேண்டாம்.இன்னொரு போரா வேண்டவே வேண்டாம்.என்ற வாசகங்களைக்கொண்டதுதான் அச்சுவரொட்டி.
இதை யார் ஒட்டினார்கள் என்று தெரியவில்லை.
போரில் பாதிக்கப்பட்ட தமிழர்கள்தான் ஒட்டினார்களா?அல்லது கருணாநிதி ஆரம்பித்துள்ள டெசோ "வால்' பயங்கொண்ட பக்ஷேயின் படையினரின் வேலையா என்று தெரியவில்லை.
தமிழ் அமைப்புகள் கூட்டாக நடத்தும் மேதின கொண்டாட்ட வளாகத்தை சுற்றிலும்,மேதின சுவரொட்டிகள் மீதே இச்சுவரொட்டிகளை ஒட்டிச்சென்றுள்ளனர்.
கருணா-டக்ளஸ் கும்பல் வேலை என்று ஒரு தமிழர் கதைத்து சென்றார்.
__
இது சாதா இலை அல்ல.வியட்நாம் போர் காட்சி பதியப்பட்ட இலை'
--------
நமது குடியரசுத்தலைவர் உண்மையிலேயே கொண்ட கடமையில் கண்ணாக இருப்பவர்.யார் என்ன கூறினாலும் அதை கண்டு கொள்ளாமலரெத்தனை கோடிகள் செலவானாலும் தனது லட்சிய பயணத்தை விட்டுக்கொடுக்காமல்தொடர்பவர்.
கடல் கொள்ளையைத் தடுக்க உதவியதற்கு நன்றி தெரிவிப்பதற்காகவே ஒரு பெரிய நாட்டின் குடியரசுத்தலைவரே மதுரை மண்டலம்அளவில் உள்ளசெஷல்ஸ் நாட்டிற்கு சென்றுள்ளார் என்றால் அவருக்கு சுற்றுப்பயணம் போகும் ஆசையை விட நன்றியறிதல் அதிகம் உள்ளதுஎன்றுதானே அர்த்தம். செஷல்ஸ் அதிபர் ஜேம்ஸ் மைக்கேலுடன் பிரதிபா பாட்டீல் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளாராம்.என்ன என்பதெல்லாம் அரசாங்க ரகசியம்.
.செஷல்ஸ் பயணம் முடிந்தக்கையோடு பிரதிபா பாட்டீல் இன்று தென் ஆப்ரிக்கா புறப்படுகிறார்.
அங்கு யாருக்கு எதற்காக நன்றி கூறப்போகிறார் என்பது பற்றி இதுவரை தகவல்கள் இல்லை.
அடுத்து கேரள மக்கள் சார்பில் ஒரு கோரிக்கை வைக்கலாம்.அது அப்படியே இத்தாலி கப்பலை விடுவிக்க முயற்சித்ததற்கு மத்திய அரசுக்கு இத்தாலி அரசு தெரிவிக்க இருக்கும் நன்றியை இத்தாலி சென்று இருநாட்கள் இருந்து கையோடு வாங்கிவந்திடலாம் என்பதுதான்.