சுவையற்ற தேர்தல்

ஒருத்தர் மட்டும் ஓடும் பந்தயமாகிவிட்டது புதுக்கோட்டை இடைத்தேர்தல்.
திமுக கூறும் புறக்கணிப்பு காரணங்கள் சரியாக இருந்தாலும் மோதி பார்த்திருக்கலாம்.தொல்வியும் கூட வீரனுக்கு அழகுதான்.பலத்த எதிர்ப்பை காட்டி தோன்றாலும் நன்றாகத்தான் இருக்கும்.
இப்போது புதுக்கோட்டையில் களத்தில் தன்னந்தனியே நிற்பது அதிமுக மட்டும்தான்.
சுரன்

திடீரென நடிகர் விஜய்காந்த் கட்சி நின்று மக்கள் அதிருப்தி வாக்குகள் விழுந்து அவர் கட்சி வென்று விட்டால்?திமுக வுக்குத்தான் அசிங்கம்.
தேர்தல் ஆணையம் எப்போதுமே ஜெயா ஆதரவு என்பது தெரிந்த கதைதான்.அதுவும் பிரவீண் குமார் தலமையில் அதிமுக கட்சியின் நோக்கங்களுக்கான தஞ்சாவூர் பொம்மையாகி விட்டது.
தேர்தல் தேதியை ஜெயா அரசு புதுக்கோட்டைக்கு அறிவித்து செயல்பட ஆரம்பித்தவுடன் அறிவித்தது சந்தேகத்தையே கிளப்புகிறது.
இவ்வளவு விரைவில் தேர்தல் அறிவித்தது ஏன்?
ஆறு மாதங்கள் கால அவகாசம் இருக்கிறதே.அத்தொகுதி உறுப்பினர் இறந்து [02-04-12]ஒரு மாதங்களுக்குள்ளாக தேர்தல் அவசரம் ஏன்?இதுவரை அப்படித்தான் தேர்தல்கள் நடந்ததா?இறந்த துக்கம் தொகுதியில் மறைவதற்குள் தேர்தல் அறிவிப்பு அவசரம் எதற்கு?
சுரன்
முத்துக்குமரன்
மற்ற கட்சிகள் அமைதியுடன் தேர்தல் பற்றிய சிந்தனை இல்லாமல் இருக்கையில்அதிமுக செயல் வீரர்கள் கூட்டம் நடக்கிறது.அடுத்து வேட்பாளர் விருப்ப மனு பெற்ப்படுகிறது.உடனேயே வேட்பாளரும் அறிவிக்கப்படுகிறார்கள்.அதற்காகவே காத்திருந்தது போல் அன்றே தேர்தல் தேதியும் அறிவிக்கப்படுகிறது.
பொதுவானவர்களுக்கு கூட சந்தேகத்தை தேர்தல் ஆணைய செயல்பாடு உருவாக்கி விடுகிறதே.
திமுக போட்டியிடாவிட்டால் காங்கிரசு போட்டியிட ஆசை படுவதாக செய்தி உள்ளது.
அதிலும் முன்னாள் அமைச்சர் திரு நாவுக்கரசருக்கு இத்தொகுதியில் தனிப்பட்ட செல்வாக்கு உள்ளது,
அவர் திமுக ஆதரவுடன் போட்டியிட்டால் நிச்சயம் அதிமுக வெற்றி பெற்றாலும் அது ரொம்ப கஷ்டத்தில்தான் இருக்கும்.
இனி அதிமுக வினர் 
"களம் காணாமலேயே எதிரிகளை களை எடுத்த 
'அம்மா" வாழ்க 
சுவரொட்டிகள் ஒட்டலாம்.
திமுக ஆட்சி காலத்தில் வந்த இடைத்தேர்தல்களில் எல்லாம் அதிமுக போட்டியிடாமல் ஒதுங்கி இருந்து தோல்வியடையாமல் தப்பியது.
இப்போது திமுக முறை.
எப்படியோ பலத்த போட்டியையும் வருவாயையும் எதிர்பார்த்த புதுக்கோட்டை தொகுதியினருக்கு இத்தேர்தலில் வரும்படி கம்மியாகத்தான் இருக்கும்.
நான் தேடியெடுத்துவைத்த பெரியண்ணன் அரசு,ரகுபதி படங்களை உபயோகிக்க முடியாமல் போய் விட்டதே?
        ===========================
புலி வருது

சுமார் 23000 விடுதலைப் புலி ஆதரவாளர்கள், உறவினர்களை பார்வையிடும் நோக்கில் இலங்கைக்கு வந்துள்ளதாக சிங்கள இதழ் ஒன்றுசெய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த 12 மாதங்களாக விடுதலைப் புலிகளும்,அவர்கள் ஆதரவாளர்களும்  நாட்டுக்குள் புகுந்துள்ளதாக அச்செய்தி மேலும் கதைக்கிறது.
சுரன்

இலங்கைக்குள் வந்த பலர் புலி ஆதரவு அமைப்புக்கள் மற்றும் புலிகளுடன் நேரடித் தொடர்புகளைக் கொண்டவர்களாம்.
அதிலும் அதிகமானோர் கனடாவிலிருந்துதான் இலங்கைக்கு வந்துள்ளார்களாம்.
விடுதலைப்புலிகளை அடியோடு அழித்துவிட்டதாககூறும் சிங்களருக்கு அவ்வப்போது கெட்ட கனவுகள் வரும் போல் இருக்கிறது.
பார்த்து.புலி வருது,புலிவருது என்று கூறி பின்னர் அதுவே உண்மையான கதையாகிவிடப்போகிறது.
    ++++++++++++++++++++++++++

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?