கண்ணீர் வரவழைக்கும் பெட்ரோல் -பதிவு -2
பெட்ரோல் விலையை மன்மோகன்சிங் அரசு உயர்த்தியதுதான் தாமதம் அரசியல் நடத்த பிடி கிடைக்காமல் அலைந்து கொண்டிருந்த கட்சிகள் வரிந்து கட்டிக்கொண்டு களத்தில் இறங்கி விட்டன.
மத்திய அரசில் பங்கு பெற்றுக்கொண்டே மம்தா பானர்ஜியும் ,கருணாநிதியும் போராட்டங்களை[?] அறிவித்து விட்டனர்.மம்தா நட[ந்தே]த்தியே விட்டார்.
மத்திய அரசை போட்டு வாங்க நேரம் பார்த்திருந்த புரட்சித்தலைவி ஜெயலலிதா அம்மா அவர்களும்[தமிழக அரசு விளம்பரங்கள் அப்படித்தான் முதல்வரை துதி பாடுகின்றன.] சும்மா இருப்பாரா?போராட்டம் அறிவித்தாகி விட்டது.
கோவா நம்மைவிட சின்ன மாநிலம்.அது தன் வரிகளை குறைத்து முற்றிலுமாக வாட்டை குறைத்து பெட்ரோல் விலையில் 12 ரூபாயை குறைத்து மாநில மக்கள் வயிற்றில் பாலை அல்லது பெட்ரோலை வார்த்திருக்கிறது.மத்திய அரசு கூட்டியது 7.50 காசுகள்.ஆனால் கோவா காரர்களுக்கு அதிகப்படியாக ரூ5/-குறைந்துள்ளது.
அதைவிட அதிக வரி போடும் தமிழக அரசு கோவா பாணியை கடை பிடித்து தமிழக மக்கள் வயிற்றில் பெட்ரோலை வார்க்கலாமே?
கோவா அதற்கு பதிலாக மதுபானங்கள்,ஆடம்பரப்பொருட்களுக்கான வரியை அதிகரித்து இழப்பை சரிகட்டியுள்ளது.
தமிழக அரசு சாதனை மலருக்கான 60 கோடி போன்று மற்ற ஆடம்பரத்தை நிறுத்தினால் போதுமே?
மத்திய ,மாநில அரசுகள் தங்களின் பெட்ரோல் மீதான வரி வகைகளைக்குறைத்தால் போதுமே.பன்னாட்டு,உள்நாட்டு பகாசுர நிறுவனங்களுக்கு அடிக்கடி செய்யும் வரி விலக்கை மக்கள் நலனுக்காக பெட்ரோலிய துறையில் செய்தாலே பெட்ரோல் விலையை உயர்த்த வேண்டாமே?
கச்சா எண்னை உயரும்போது விலை ஏற்றும் அரசு குறையும் போது விலையை குறைக்காமல் மறந்து விடுவதும் ஏன்? அப்போது கிடைக்கும் லாபம் எல்லாம் எங்கே போகிறது?
பிரேசில் நாட்டில் இதுபோன்ற நெருக்கடி ஏற்பட்டபோது, அங்கிருந்த சர்க்கரை ஆலைகளில் பாதியை, எத்தனால் உற்பத்தி தயாரிக்கப் பயன் படுத்தினார்கள்.
எத்தனால் எரி நிலை |
வாகனங்களில் பெட்ரோலுக்கு பதில், எத்தனால் பயன்பாட்டை அதிகரித்தனர். நம் நாட்டில், 2000ம் ஆண்டுக்கு பின் உற்பத்தியான வாகனங்களின் இன்ஜின்களுக்கு, 25 சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் பயன்படுத்தலாம். அமெரிக்காவில், "எத்தனால் 85' என்ற பெயரில் பெட்ரோல் பங்க்குகள் செயல்படுகின்றன. அவற்றில், 85 சதவீதம் எத்தனால், 15 சதவீதம் பெட்ரோல் கலந்து வாகனங்கள் ஓடுகின்றன.
இதற்கு, வாகன இன்ஜின்களில் சில மாறுதல்களை செய்தாலே போதும். எத்தனாலை பயன்படுத்தும் போது வெளி வரும் புகைசுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாது.
இந்தியாவில், 560, தமிழகத்தில், 46 சர்க்கரை ஆலைகள் உள்ளன. குறைந்தது, 200 ஆலைகளை, எத்தனால் உற்பத்தி ஆலைகளாக மாற்றினால், பெட்ரோல் பயன் பாடு அதிகரிப்பில் விலையை உயர்த்தும்நெருக்கடியில் இருந்து இந்தியா தப்பிக்கலாம்.
எத்தனால் உற்பத்தி செய்ய ஒரு லிட்டருக்கு, 20 ரூபாய் மட்டுமே செலவாகிறது. பெட்ரோல் விலையுடன் ஒப்பிடும் போது, இது மிகவும் குறைவு.
முன்பு இந்தியாவில் ஐந்து சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல்மலிவு விலையில் விற்கப்பட்டது.ஆனா. அது ஆறு மாதம் மட்டுதான்.
அதன்பிறகு "ரிலையன்ஸ்' அம்பானி பெட்ரோலிய த்தொழிலை அவரின் வருமானத்தைப்பாதிக்கும் என்பதால் மன்மோகன்சிங் அந்த திட்டத்தையே குழி தோன்டி மூடி விட்டது.
இப்போதும் கூட தனியார் பகாசுர நிறுவனங்கள் பெட்ரோல் தயாரிப்பில் அதிக முதலீடு செய்துள்ளதால், அதற்கு லாபம் குறையாமல் இருக்கவே பெட்ரோல் விலையை பெட்ரோலிய நிறுவனங்கள் கையில் ஒப்படைத்து விட்டு விலையை அடிக்கடி உயர்த்தி மக்கலை புண்ணாக்குகிறது.ஒரு பத்து பகாசுர பணக்கார தொழிலதிபர்கள் பணத்தை குவிக்க நூறு கோடி மக்களை துன்பப்படுத்துகிறது இந்த சோனியா அரசு.வாக்கு வாங்க மட்டுமே குடிசையி புகுந்து கஞ்சி குடித்து பின் வாந்தி எடுக்கத்தானே மக்கள் தேவை .
அது மட்டுமல்லகரும்பு சக்கையில் இருந்து கிடைக்கும் மொலாசசில் இருந்து தான்அந்நியவகை மதுபானங்கள் தயாரிக்கப்படுகின்றன.
கிங் பிஷர் போன்றஅந்த நிறுவனங்களின் தொழிலதிபர்கள், சர்க்கரை ஆலைகளை எத்தனால் ஆலைகளாக மாற்ற விடாமல்முட்டுக்கட்டைப்போடுவார்கள்.
தொழிலதிபர்கள் மனம் கோணாமல் ஆட்சி நடத்தும்
சோனியா,ராகுல்,மன்மோகன்சிங்,பிரணாப் முகர்ஜி,ப.சிதம்பரம்,அலுவாலியா போன்றவர்கள் பதவியில் இருக்கும் வரைஅதை செய்யவும்மாட்டார்கள்.
வேறு வழி மக்கள் நலன் மிக்கவர்கள் ஆட்சி செய்யும் வகையில் இந்த கூட்டத்துக்கு மக்கள் மரண அடி உ.பி.போல் கொடுக்க வேண்டும்.அப்போது தான் இவர்களுக்குப் பதிலாக ஆட்சிக்கு வருபவர்களும் எச்சரிக்கையுடன் நடந்து கொள்வார்கள்.
_______________________________________________________________________
_______________________________________________________________________