கொலை காரர்கள்
சிறுவர்களால் வீரப்பதக்கம் அளிக்கப்படுபவர்கள்.சிங்களப்படை வீரர்கள்தான்.ஈழ இறுதிப்போரில் தாங்கள் செய்த வீரச்செயல்களுகாக[?] கவுரவிக்கப்படுகிறார்களாம்.தங்களுக்கு வீரப்பதக்கம் அணிவிக்கப்படுவதற்காக 7 முதல் 14 வயது மாணவர்களை கட்டாயப்படுத்தி பள்ளியில் இருந்து அழைத்து வந்து பெருமையை பெற்றுக்கொண்டார்கள்.இது ரொம்ப சின்னப்பிள்ளத்தனமாக இல்ல,அதுவும் முள்ளிவாய்க்கால் நினைவு நாளில் இந்த பதக்கம் அணிவிப்பை செய்துள்ளார்கள்.சிங்கள ப்படையினரின் வீரத்தை நினைத்தாலே புல்லரிக்கிறது அல்லவா,
ஓட விட்டும்,சரணடைந்து வந்தவர்களியும்,தூங்கிக்கொண்டிருந்தவர்களையும்,அப்பாவி மக்கள்,குழந்தைகள்,முதியோர்களை போரில் வென்றவர்களுக்கு வேறுயார்தான் பதக்கம் தருவாரகள்.?
_____________________________________________________________________________________________
யார் குற்றவாளி?
ராமஜெயம் உண்மையில் எப்போது கடத்தப்பட்டார் என்பதில் போலீசுக்கு மீண்டும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ராமஜெயம் கொலை தொடர்பாக அவரது அண்ணனும்-முன்னாள் அமைச்சருமான நேருவிடமும்,ராமஜெயம் மனைவியிடமும் ஏற்கனவே 2 முறை விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் ராமஜெயம் கடத்தப்பட்டது தொடர்பாக நேருவிடம் கமிஷனர் சைலேஷ்குமார் யாதவ் மீண்டும் விசாரணை நடத்தினார்.
ராமஜெயம் கொலை வழக்கில் போலீசார் ஆரம்பீத்த இடத்தை விட்டு நகர்ந்தது போல் தெரிய வில்லை.
ராமஜெயம் வீட்டை விட்டு போனதற்கும் -இறந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கை கூறுவதற்கும் கால இடைவெளி அதிகம் .அதுதான் காவல்துறையை குழப்புகிறது.அதற்கு அவர் மனைவியை விசாரித்ததில் ஒன்றும் புதிய தகவல் இல்லை.என்றால் இன்னுமொருமுறை பிரேதபரிசோதனை அறிக்கையை சரி பார்க்க வேண்டியதுதான்.தனிப்படை அமைத்தும் அவர்கள் அனைவருமே ராமஜெயம் வீட்டையும்-உறவினர்களையுமே சுற்றி வந்தால் எங்கிருந்து கொலை காரன் வருவான்.
சரியான திசையில் இந்த கொலை வழக்கு நகரவில்லை.அலலது நகர்த்தப்படவில்லை என தெரிகிறது.
7 படைகளும் ஏழு கோணத்தில் ஆய்வு செய்திருந்தால் இதற்குள் கொலையாளி பிடிபட்டிருப்பான்.
வங்கி கொள்ளையரை சில நாட்களிலேயே கண்டு பிடித்து போட்டுத்தள்ளிய தமிழக காவல்துறைக்கு ராமஜெயம் கொலை காரனை கண்டுபிடிப்பது இவ்வளவு நாட்கள் ஆகிறது என்றால் ஆச்சரியம்தான்.ஒன்று அவர் மனைவி சொல்வது தவறு என்றஐ கட்டுப்பாட்டில் எடுத்து விசாரிக்கலாமே.என்னதயக்கம்.
ஏற்கனவே ராமஜெயம் குடும்பத்தார்,நண்பர்களை மட்டுமே ஓயாது விசாரித்து மிரட்டு வதாக காவல்துறை மீது குற்ற சாட்டுகள் வருகிறது.
அவர்களை விடுத்து அடுத்த இடம் சென்றதாகவும் தெரியவில்லை.இவர்கள் கண்டு பிடிப்பதற்குள் கொலை காரர்கள் வயதாகி இறந்து விடவும் வாய்ப்புள்ளது.அதற்குள் ராமஜெயம் கொலைகாரர்கள் பிடிபடுவார்களா?
ஆலடி அருணா,எம்.சி.பாலன்,தா.கிருஷ்ணன்,தூத்துக்குடி ஏ.சி.அருணா போன்றுதிமுக தலைவர்கள் எல்லோரும் நடைப்பயிற்சி செல்லும் போதுதான் கொல்லப்படுகிறார்கள்.
எனவே திமுக வினர் நடைப்பயிற்சியை வீட்டுக்குள்ளேயே வைத்துக்கொள்ளலாம்.
_________________________________________________________________________________
65 ஆவது கேன்ஸ் திரைப்பட விழாவிற்குத்தான் இந்த நடிகை தரையை சுத்தம் செய்தபடி வருகிறார்.