ஈழமாவது.......வெங்காய..........


இலங்கையில் எல்லோரும் ஒன்று பட்ட இலங்கையை கேட்கும் போது தமிழ் நாட்டில் உள்ளவர்கள்தான் தனி நாடு கேட்கிறீர்கள் ஏன்?என்று இந்திய சகோதரி சுஷ்மா சுவராஜ் மதுரை தாமரை சங்கமத்தில் பாஜக மாநாட்டில் கேள்வியை எழுப்பியுள்ளார்.அத்துடன் நாங்கள் தமிழர் முகாம் மட்டும்தான் சென்றோம் அங்குள்ளவர்கள் யாரும் தனி ஈழம் பற்றியே பேசவில்லை.என்றும் கதைத்துள்ளார்.
இவர்கள் தமிழர்களுடன் தனியே பேசி அவர்கள் கருத்தைக்கேட்டார்களா?
சிங்கள படையினர் அல்லது அதிகாரிகள் இல்லாத நிலையில் பேசினார்களா?என்றால் இல்லை.ராஜபக்‌ஷே ஏற்பாடு செய்திருந்த முகாம்களுக்கு சென்றனர்.அங்கு தேர்ந்தெடுத்த கருணா,டக்ளஸ்,சம்பந்தன் போன்ற தமிழர்களுடன்,தலைவர்கள் ஆக்கி வைக்கப்பட்டவர்களுடன் பேசினர்,பக்‌ஷே அளித்த சாப்பாட்டை தின்று விட்டு அவர் ஒதுக்கிய ஓட்டல் அறையில் படுத்து விட்டு தன் மகளுடன் பக்‌ஷே தந்த விருந்தை மூக்குபிடிக்க தின்று விட்டு அவர் கொடுத்த அட்டிகையை வாங்கி விட்டு வந்து விட்டவர்கள் இப்படித்தானே சொல்லுவார்கள்.பேசித்திரிவார்கள்.
பக்‌ஷேயுடன் தனி விருந்தும் பரிசு பொருள் பெறுவதும் கூடாது என கூறிதானே சுற்றுப்பயணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது .பின் ஏன் பக்‌ஷே விருந்தி கலந்து கொண்டார் சுஷ்மா.அதோடு அவர் வாங்கிய பரிசு அரசுக்கானதாம்.அதை அரசிடம் கொடுத்துவிட்டாராம்.
இந்திய மக்களவையில் இலங்கைத்தமிழருக்கு உரிமை வேண்டும் என்றும் பேசி விட்டாராம்.

இவர் பேசி விட்டதால் நாளை முதல் இலங்கையில் துணை ஜனாதிபதி பதவியை பக்‌ஷே தமிழனுக்கு கொடுத்து விடப்போகிறாராம்.
இலங்கை ராணுவத்திலும்,காவல்துறையிலும் தமிழருக்கு சம உரிமை கொடுக்க பழைய விடுதலைப்புலிகளுக்கு பணி உத்திரவு வழங்கி விட்டாராம்.
பள்ளி,கல்லூரிகளிலும் அரசுப்பணிகளுக்கும் தமிழருக்கு சம உரிமை ஆணைகள் பிறப்பிக்கப்பட்டு விட்டதாக இலங்கை செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.
அதை எல்லாம் வாங்க கைகளும்,படிக்க நேரமும்தான் போதவில்லை.
தமிழகத்தில் ஒமக்குச்சி நரசிம்மன் மாதிரி யுள்ள பாஜக வை உசிலை மணியாக்கத்தான் சுஷ்மா இலங்கை கோடை சுற்றுப்பயணம் சென்றார்.அவருக்கு தமிழர்கள் பற்றி மேலும் என்ன அக்கறை.அவர்களிடம் உள்ள வாக்குகள் விரைந்து வரும் மக்களவை தேர்தலில் தாமரை சின்னதில் விழ வைக்க வேண்டும் .அதனால்தான் இந்த திடீர் ஈழப்பாசமும்-சுற்றுப்பயணமும்.
மற்றபடி ஈழமாவது, வெங்காயமாவது.
தமிழர் நலமாவது,கத்திரிக்காயாவது.
____________________________________________________________________
போதையின் பாதை....

நம் மக்கள் உபயோகப்படுத்தும் போதை பொருட்கள் கஞ்சா,அபின்.பழுப்பு சர்க்கரை[அதான் பிரவுன் சுகர்]போன்றவற்றை விற்பவர்களை நாம் குறை சொல்ல முடியாது.அவர்களும் எவ்வளவு பாடு பட்டு உழைத்து போதை பொருட்களை தயாரித்து எதிர்பட்டவர்களுக்கெல்லாம் மாமூல் கொடுத்து கடைசியில் நம் வீட்டு வாலிப வயோதிகர்களை நாசம் செய்கிறார்கள்.
இதை நீங்கள் புரிந்து கொள்ளதான் கீழே போதை உற்பத்தி கச்சா பொருட்களை படமாகத்தருகிறோம்.
பார்த்து போதை கொள்ளுங்கள்.

ஒபியம். காயை குத்தி பாலை வடிக்கிறார்கள்.

காய்ந்து விட்டதை சுரண்டுகிறார்கள்.

கஞ்சா தோட்டம்

பாடம் செய்யப்பட்ட கஞ்சா

Methamphetamine[மோசமான போதை பொருள்.வலிப்பையும் உயிராபத்தையும் விரைந்து தரும்.

Peyote[மெக்சிகோவில் புகழ் பெற்றது]


கோகைன்
உறிஞ்சால் போதும்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?