குழப்ப போராட்டம்...........
இடிந்தகரையில் அணு உலைக்கு எதிராக உதயகுமார் எந்தவகையான போராட்டத்தை நடத்தலாம் என்று திணறுகிறார் என்று தெரிகிறது.முதலில் போராட்டக்காரர்களுக்கு மறைமுகமாக ஆதரவை தந்த ஜெயா அரசு,அதிகாரிகள் படாலென அணு உலை திறக்க ஆதரவாக மாறி விட்டனர்.இப்போது கூடங்குளம் மின்சாரம் முழுக்க தமிழகத்துக்கே தாருங்கள் என கடிதம் எழுதிக்கொண்டிருக்கின்றனர்.
இடிந்தகரை ,சுத்துப்பட்டு 18 கிராமங்களிலும் மக்கள் அணு உலை ஆபத்தை எதிர் நோக்கி பயத்துடன் போராடினாலும் போராட்டம் அப்பகுதி மக்களுடனேயே முடிந்து போனது .தமிழகத்தில் மற்றையோர் எப்போது மின் உற்பத்தியாகும் ஆட்டி வைக்கும் மின் வெட்டு நீங்கும் என்று எதிர்பார்ப்புடன் இருக்கும் நிலையாகி விட்டது.இது அணு உலை எதிர்ப்பு போராட்டத்தின் வீரியத்தை குறைத்து முடக்கி விட்டது.
இடிந்தகரை உண்ணாவிரதம் செய்தி இன்றுமின்தடை செய்திபோல் முக்கியத்துவம் இழந்து விட்டது.உண்ணாவிரதம் கண்டு அரசுகள் அஞ்சிய காலமும் போய் விட்டது.
வாக்காளர் அடையாள அட்டையை திரும்ப ஒப்படைப்பது எவ்வளவு தூரம் அணு உலையை மூட வைக்கும் என்று தெரியவில்லை.
பிறகு வாக்காளர் அடையாள அடடையை பெற எவ்வளவு நாய் அலைச்சல் அலைய வேண்டும் என்பதை கவனத்தில் கொண்டு அந்த நடவடிக்கையை எடுக்க வேண்டும்.
இன்னமும் உதயகுமார் நாங்கள் பேச்சு வார்த்தைக்கு தயார்.அரசு கூப்பிட்டு பேச வேண்டு என்று அடிக்கடி சொல்லிவருகிறார்.அப்பேச்சு வார்த்தையில் என்ன சாதிக்கப்போகிறார்.?
அரசுகள் அணு உலையை இனி மூடப்போவதில்லை.அதை விட்டு வெகு தொலைவு வந்தாயிற்று.
அணு உலையை ஆரம்பித்தபோதெல்லாம் சும்மா இருந்து விட்டு அணு மின் உற்பத்தி துவங்கும் வேளை போராட்டம் நடத்துகிறார்களே என்று பொதுமக்களிடம் ஒரு கருத்து உலவுவது உதயகுமார் தெரியாததல்ல.
மத்திய-மாநில அரசுகளும் அதைத்தான் முன்னிறுத்தி போராட்டத்தின் நோக்கத்தையே சந்தேகிக்க வைத்துள்ளது.
இப்போது இன்னும் பத்து நாட்களில் மின்சாரம் பாய்ந்து வரப்போகிறது என்று அரசுகள் சொல்லி எல்லோரும் வீடுகளி மின்விசை பக்கம் நின்று கொண்டிருக்கிறாரகள்.
இப்போது போராட்டம் தொடர்பாக பேசத்தயார்.கூப்பிடுங்கள் என்றால் ....?
பேச்சு வார்த்தையில் என்ன சொல்லப்போகிறீர்கள்.
கூடங்குளம் அணு மின் நிலையத்தை மூடுங்கள் என்றுதானே.
அதற்கு அரசுகள் 'முடியாது.யுரேனியம் நிரப்பியாயிற்று இனி மின்சாரம் வரப்போவதுதான் பாக்கி.நீங்கள் வெளிநாடுகளில் பணம் வாங்கி போராடுகிறீர்கள்" என்று சொல்லும்.மறுபடியும் முதலில் இருந்தா?
பேச்சு வார்த்தை பலன்தரப்போவது கிடையாது.அது எங்களை விட உங்களுக்கு நல்லா தெரியும்.பிறகு ஏன்?
உதயகுமார் புலிவால்-நாயர் கதாபாத்திரமாகி விட்டார்.போராட்டத்தை கைவிடவும் முடியாமல்-தொடர்ந்து என்ன வகையில் போராட்டத்தை வழி நடத்தி செல்வது என்ற குழப்பத்தின் உச்சியில் உட்கார்ந்திருக்கிறார்.
தன்னால் திரட்டப்பட்ட மக்களை,நம்பி வந்த மக்களை எப்படி திருப்திப்படுத்துவது என்ற மகாகுழப்பம்.
அதனால்தான் இப்போது வாக்காளர் அடையாள அட்டை ஒப்படைப்பு,பேச்சு வார்த்தை என்று ஏதேதோ சொல்லிக்கொண்டிருக்கிறார்.
அணு உலையின் ஆபத்தை அறிந்தும் நமது மக்கள் பலர் கூடங்குளம் மின் சாரம் விரைவில் வராதா என்ற நிலையில் இருக்கிறார்கள்.
உதயகுமாரும் அப்பகுதி மக்களும் அணு உலை எதிர்ப்பை போராட்டமாக ஆரம்பித்தது மிக தாமதமாக.அணு உலை நிரப்பும் காலத்தில் திடீரென உண்ணாவிரதம் இருந்து அணு உலை வேண்டாம் ஆபத்து.மூடு .என்றால் ...?
இவ்வளவு காலம் அணுவின் ஆபத்தை உணராமலா இருந்தார்கள்.அல்லது அணு சக்தி இப்போதுதான் ஆபத்தான பொருளாகி விட்டதா?என்ற கேள்வி வருகிறதே.அதுதான் உங்கள் போராட்டத்தின் பலகீனம்.
இப்போது உதயகுமார் மீது உள்ள பழைய -புதிய வழக்குகள் அடிப்படையில்
கைது செய்ய காவல்துறை முயற்சித்து வருகிறது.அதனால் காவலர் படை குவிக்கப்பட்டுவருகிறது.
அவரின் கைதுக்குப்பின்னர்தான் இப்போராட்டம் ஒரு முடிவுக்கு வரும்.அவருக்கும் ஆரம்பித்ததை முடித்து வைக்க ஒரு காரணம் கிடைக்கும்.
இதை படிக்கும்நீங்கள் அணு உலை எதிர்ப்பாளராக-போராட்ட ஆதரவாளராக இருக்கலாம்.ஆனால் ஆற அமர சிந்தியுங்கள்.
இப்போராட்டம் வேறுஎப்படிமுடியும்?
அணு உலை போராட்டம் காரணமாக மூடப்படும் என்று இன்னமும் உண்மையில் நம்புகிறீர்களா?
ஜப்பான் போன்று இயற்கை இடர் ,அல்லது விபத்து தவிர மூட வேறு காரணம் இப்போதைக்கு இருப்பதாக தெரியவில்லை.
_________________________________________________________________________________