ஓசோன் ஓட்டை,,,காரணம் யார்?
உலக நாடுகளை இப்போது அச்சுறுத்தி வரும் பெரும் பிரச்சினை உயர்ந்து வரும் வெப்ப நிலைதான். வளர்ந்த நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகள் அதிக அளவு கார்பன் மோனாக்சைடு, கார்பன்டை ஆக்சைடு ஆகியவற்றை வெளியிடுவதால் ஓசோன் மண்டலத்தில் ஓட்டை ஏற்பட்டு பூமியின் வெப்பம் அதிகரித்து வருகிறது. இந்தியா, சீனா போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் வெப்ப அளவு குறைவாகத்தான் உள்ளது.
ஆனால் அமெரிக்கா வெப்பமயமாகும் பிரச்சனையை திசை திருப்ப, வளர்ந்து வரும் நாடுகளுக்கு பெட்ரோல்,டீசல் போன்ற எரிபொருளை பயன்படுத்த பல நிபந்தனைகளை விதித்து வருகிறது. அமெரிக்கா வளர்ந்த நாடு. அங்கு மக்கள் தொகை குறைவு. ஆனால் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் மக்கள் தொகை அதிகம். இங்கு எரிபொருளை பயன்படுத்துபவர்களும் அதிகம். வளர்ச்சிக்கு எரிபொருள் அவசியம். எனவே வளரும் நாடுகளுக்கு அமெரிக்கா கட்டுப்பாடு விதிக்க கூடாது என்று அவை வலியுறுத்துகின்றன.
இந்த நிலையில் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சி அமைப்பு வெளியிட்ட ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:-உலகம் முழுவதும் நகரங்களின் வளர்ச்சி அதிகமாகி வருகிறது. உலக மக்கள் தொகையில் பாதி பேர் நகரங்களில் வசித்து வருகிறார்கள். இது 2050-ம் ஆண்டு 70 சதவிகிதமாக அதிகரிக்கும். மக்களின் பொருளாதார வளர்ச்சியும் அதிகரித்துவருகிறது. குறிப்பாக பிரேசில், ரஷ்யா, இந்தியா, இந்தோனேசியா, சீனா, தென் அமெரிக்கா போன்ற நாடுகளில் பொருளாதார வளர்ச்சி 40 சதவிகிதம் அதிகரிக்கும். 2038-ம் ஆண்டு இந்தியா பொருளாதார வளர்ச்சியில் 2-வது பெரிய நாடாக விளங்கும். இப்போது இந்தியாவும்,சீனாவும் வேகமாக வளர்ந்து வருகின்றன. இதற்கு காரணம் இந்த இரு நாடுகளிலும் கல்வியும், பொருளாதாரமும் வேகமாக வளர்ச்சி கண்டு வருகின்றன.
மற்ற நாடுகளை விட2009-ம் ஆண்டு அமெரிக்காவில் பெட்ரோல், டீசல் போன்ற எரி பொருளை பயன்படுத்துவது 65 மடங்கு அதி
கரித்து இருந்தது. 2050-ம் ஆண்டு உலக அளவில் எரிபொருளை பயன்
படுத்துவது 80 சதவிகிதம் அதிகரிக்கும். இதனால் அதில் இருந்து வெளியேறும் கார்பன் வாயுக்களால் வெப்பம் அதிகரிக்கும். 2020-ம் ஆண்டு பூமியின் வெப்ப நிலை 2 டிகிரி செல்சியஸ் உயரும். இதனால் பூமியின் நிலைத்தன்மை வெகுவாக பாதிக்கப்படும். இந்தியாவை பொறுத்தவரை வீட்டின் எரிபொருளுக்கு மரக்கட்டைகளைதான் பெரும்பாலும் பயன்படுத்துகிறார்கள். 60 கோடி மக்கள் எரிவாயுவை பயன்படுத்தாமல் விறகை தான் இப்போதும் பயன்படுத்துகிறார்கள். 2100 ஆம் ஆண்டில் பூமியின் வெப்பநிலை மேலும் 6 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும்.
உலகில் கடந்த 50 ஆண்டுகளில் நடுத்தர மற்றும் வசதி உள்ளவர்கள் பெட்ரோல்,டீசலை பயன்படுத்துவது இருமடங்காக அதிகரித்துள்ளது. குறிப்பாக அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி போன்ற வளர்ந்த நாடுகளில் அதிக எரிபொருளை பயன்படுத்துவதால் வெளியாகும் நைட்ரஸ்ஆக்ஸ்சைடு வாயுவால் சுற்றுச்சூழல் 25 முதல் 100 மடங்கு பாதிக்கப்படுகிறது. இந்தியாவில் உள்ள கோழிப்பண்ணைகளில் அதிக அளவு ரசாயன பொருட்கள், தடுப்பூசிகள்பயன்படுத்துவதால் நோய்கள் ஏற்படுகின்றன. உலகம் முழுவதும் இப்போது பூமியின் வளம் அதிக அளவு பயன்படுத்தப்படுவதால் சுற்றுச் சுழல் வெகுவாக பாதிக்கப்பட்டு மக்களுக்கு பல்வேறு பிரச்சனைகள் உருவாகின்றன. இதை தடுக்க உலகநாடுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்துவது குறித்து பல உச்சி மாநாடுகள் நடந்தும், அதில் ஒருமித்த கருத்து ஏற்படாததற்கு அமெரிக்காவே முழுக் காரணமாக இருந்து வருகிறது. தனது கருத்துக்கு மேலும் சில வளர்ந்த நாடுகளையும் துணைக்கு சேர்த்துக் கொள்கிறது. வெப்பமயமாதலுக்கான பொறுப்பை இந்தியா, சீனா, பிரேசில், ரஷ்யா மற்றும் தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளின் மீது ஏற்றவே அந்த நாடுகள் விரும்புகின்றன. ஒருங்கிணைந்த செயல்பாடுதான் இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு என்று பல்வேறு சர்வதேச அமைப்புகள் மற்றும் சுற்றுச்சூழல் வல்லுநர்கள் கூறியபிறகும், தன்னிச்சையாக இந்த முயற்சிகளைச் சீர்குலைக்கும் வேலையில்தான் அமெரிக்கா ஈடுபட்டு வருகிறது. மேலும், வெப்பமய
மாதலை அதிகரிக்கும் வேலையில் இறங்கும் நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முன்னிலை வகித்துக் கொண்டு வருகிறது.
உலகம் முழுவதும் இப்போது வெப்பம் ஆண்டுக்கு ஆண்டு உயர்ந்து வருகிறது. குறிப்பாக அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகள் கார்பன் மோனாக்சைடு வாயுவை அதிக அளவு வெளியிடுவதால் ஓசோன் மண்டலத்தில் ஓட்டை ஏற்பட்டு வெப்பம் அதிகரித்து வருகிறது.
இவ்வாறு வெப்பம் அதிகரித்து வருவதால் ஆர்டிக், அண்டார்டிக் துருவப்பகுதியில் உள்ள பனிக்கட்டிகள் உருகி கடல் மட்டம் உயர்ந்து வருகிறது. இதனால் பல நாடுகளில் கடல் அரிப்பு ஏற்படுகிறது. கடற்கரை பகுதிகள் நீரில் மூழ்கி வருகின்றன. சிறிய தீவுகள் காணாமல் போய்விட்டன.
இன்னமும் பனி உருகி வருகின்றது.இன்னும் பல தீவுகள் காணாமல் போய்க்கொண்டிருகின்றன.

விரைவிலேயே இந்திய கடற்கரைப்பகுதிகள் குமரிக்கண்டம் போல் காணாமலேயே போய்விடும்.