சூடான மனது


ஈழத் தமிழர்களை சிங்கள அரசு இனப் படுகொலைதான் செய்தது என்பதற்கு இன்னும் ஆதாரங்கள் கிடைத்துவருகிறது.
சுரன்

2008-ம் ஆண்டு கிளிநொச்சி, முல்லைத் தீவு போன்ற தமிழர்கள் பகுதியிலலிலங்கை அரசுஎடுத்த மக்கள் தொகைக்கும்,தற்போது இலங்கை அரசு வெளியிடப்பட்ட 2009-ம் ஆண்டு வன்னிப் போரில்அப்பகுதிகளில் இருந்து வெளியேறியதாகக் காட்டப்பட்ட மக்கள் தொகைக்கும் இடையில் காணப்படும் வித்தியாசம்1,46,679.
இந்த ஈழத்தமிழர்களின் நிலை என்ன ஆனது என்ற கேள்வி தற்போதுஎழுந்துள்ளது.
சுரன்

இந்தவித்தியாசம் குறித்து இலங்கை மீது பல நாடுகள் கேள்விகளை எழுப்பியுள்ளது. ராஜப்பு ஜோசப்பு என்பவர் தகுந்த ஆவணங்களுடன் முன்வைத்த இந்த தகவல்கள் தற்போது சர்வதேச மனித உரிமை அமைப்புக்களின் கவனத் தினைப் பெற்றிருந்ததோடு, பல நாடுகள் இது தொடர்பாக தங்களது கருத்துக்களை வெளியிட்டுள்ளன.இதன் மீதுநடவடிக்கை எடுக்க ஐ.நா.முயற்சிக்க வேண்டும்,இப்போது உள்ளது போல் வெறும் அறிக்கைகளை மட்டும் விட்டு,விட்டு தனது கடமை முடிந்தது என்று இருந்துவிடக்கூடாது.
சுரன்

ஐ.நா. நிபுணர் குழு அறிக்கையிலேயே, 2009-ம் ஆண்டு முதல் 5 மாதங்களில் மட்டும் 40 ஆயிரம் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது.குறிப்பிட்டுவிட்டால் மட்டும் போதுமா?நடவடிக்கை வேண்டாமா?
_____________________________________________________________________________________________

வெயிலில் கடுப்பாகிறீர்களா?
சுரன்


வெயில் அதிகமாகியுள்ளநேரம் வெளியில் செல்வதால் மட்டும் அல்ல தற்போதைய மின் வெட்டால் வீட்டிலும் வியர்வை பெருக்கு உங்களுக்கு கோபத்தை மட்டுமல்ல நோயையும் தரலாம்.கோடையின் தாக்கத்தால்  தோல் வறட்சி காணப்படும். மேலும் வியர்வை அதிகரிப்பால் ஏற்கனவே தோல் பகுதியில் பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு அரிப்பு அதிகரிக்கும். அக்குள் மற்றும் முதுகுப் பகுதியில் இந்த அரிப்பு காணப்படும். உடல் சூட்டின் காரணமாக வெயில் கொப்புளம் மற்றும் வியர்குரு போன்ற தொல்லைகள் உண்டாகும்.சிறுகுழந்தைகள் பாடும்திண்டாட்டம்தான்.
உடல் இயல்பான தட்பவெப்ப நிலைகளில் தோல் வியர்வை மூலம் இயற்கையாகவே வெப்ப மாறுபாடுகளை சரி செய்து விடும்.அதிக வெப்பநிலை இருக்கும் போது உடல்தனது வெப்பக் கட்டுப்பாட்டை சரி செய்ய இயலாது.. இதுதான் கோடையில்பல்வேறு பிரச்னைகளுக்கும் காரணம் .
சுரன்

கடும் வெப்பத்தின் காரணமாக வலியுடன் கூடிய வெப்பத் தசையிழுப்பு ஏற்படலாம். இதன் மூலம் உடல் உழைப்பில் ஈடுபடும் தசைகளும், வயிற்றுத் தசைகளும் பாதிக்கப்படுகின்றன. சோர்வு அதிகரிக்கும். மயக்கம், இதயத்துடிப்பு அதிகரித்தல், ரத்த அழுத்தம் குறைதல்போன்ற தொல்லைகள் உண்டாகும்.
வயதானவர்கள் மற்றும் உடல் பருமன் உள்ளவர்களுக்கு வெப்பத்தாக்கு அதிகமாகஏற்படும்.
நீரிழப்பு, மதுப்பழக்கம், இதய நோய்கள், கடும் உடற்பயிற்சி ,இயல்பாகவே வியர்வை சுரப்பு குறைவாக உள்ளவர்கள் போன்றவர்களை விரைவில் தாக்கும்.
சுரன்

இதயத்துடிப்பு அதிகரித்தல், சுவாசத்தின் வேகம் அதிகரித்தல், மன அழுத்தம் மற்றும் ரத்த அழுத்தப் பிரச்னைகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகுங்கள்.
வெப்பத்தாக்குதலில் இருந்து நம்மை பாதுக்காக்க சில தகவல்கள்.
வெயில் நேரத்தில் வெளியில் செல்வதை முடிந்த அளவு தவிருங்கள்.கட்டாயம் ஏற்பட்டால் மட்டுமே வெயிலில் அலையுங்கள்.. வெளியில் செல்லும் போது கையில்குடையும் தண்ணீர் பாட்டிலும் வைத்துக்கொள்ளுங்கள்.பருத்தி உடைகள் வெயிலுக்கு ஏற்றவை.கதர் ஆடைகள்ரொம்ப நல்லது.வெயில் வெளிச்சம் கண்களை பாதிக்காமல் இருக்க குளிர்கண்ணாடிகளைப் பயன்படுத்தலாம்.
முடிந்தால் காலையும் ,மாலையும்குளியுங்கள்.
அதன்மூலம் வியர்வை நாற்றம் இல்லாமல் இருக்கலாம். மது ,சூடான உணவு தவிர்ப்பது நல்லது. தாகம் எடுக்கும் போதெல்லாம் தண்ணீர் குடிக்க வேண்டும்.
சுரன்

வெள்ளரி கால் கிலோ துருவிக் கொள்ளவும். புளிக்காத கெட்டித் தயிர் இரண்டு கப், துருவிய கேரட் அரைக்கப். பொடியாக நறுக்கிய வெங்காயம் கால் கப், எலுமிச்சை சாறுஒரு ஸ்பூன், உப்பு, மிளகுத்தூள் தேவையான அளவு. அனைத்தையும் ஒன்றாக சேர்த்துக் கலக்கி கொத்தமல்லித் தழை தூவி சாப்பிடலாம். அதன்மூலம் உடல் வெப்ப அதிகரிப்பு. அடிக்கடி தாகம்  தோல் எரிச்சல் போன்ற வெயிலின் பாதிப்புகளில் இருந்து தப்பிக்கலாம்.

தி னமும் எட்டு லிட்டர் தண்ணீர் குடிப்பது அவசியம். பழச்சாறுகள், இளநீர், நுங்கு, தர்பூசணி, வெள்ளரி, கொய்யா ஆகியவற்றை சாலடாக உணவுக்குப் பின்னர் எடுத்துக் கொள்ளலாம். தண்ணீர்க்காய்கள் புடலங்காய், பீர்க்கன், சுரைக்காய், கீரை வகைகள், பழ வகைகளும் சேர்த்துக் கொள்ளூங்கள். தயிர், மோர் மற்றும் வெண்ணெய் ஆகியவற்ளடிக்கடி பயன்படுத்துங்கள். கம்பங்கூழ், கரும்புச் சாறு ஆகியவை வெயிலுக்கு அதிக இதம்.வயிருக்கும்தான்.
சுரன்

ஊற வைத்த வெந்தயம் அல்லது வெந்தயப் பொடி இதில் ஏதாவது ஒன்றை காலை நேரத்தில் எடுத்துக் கொள்வதன் மூலம் உடல் சூட்டை,சிறு நீர் எரிச்சலைதடுக்கலாம்.
சீரகம், சுக்கு, ஏலம், நெல்லிமுள்ளி ஆகியவற்றை சம அளவில் எடுத்துப் பொடி செய்து அதற்கு இணையாக சர்க்கரையைப் பொடி செய்து கலந்து கொள்ளவும். தினமும் காலை உணவுக்குப் பின்னர் அரை ஸ்பூன் அளவுக்கு சாப்பிடுவது உடல் சூட்டினால் ஏற்படும் நோய்களைத் தடுக்கும்பாட்டி காலமருந்து.இன்றைக்கும் செல்லுபடியாகும் மருந்து.
_______________________________________________________________________
ஆரம்பமானது ஒலிம்பிக் சுடர் வலம்.
==============================
ஜுலை 27-ல் தொடங்கி ஆகஸ்ட் 12-ந் தேதி வரை, மொத்தம் 15 நாட்கள் லண்டனில் ஒலிம்பிக் போட்டிகள் நடக்கிறது.
150 நாடுகளை சேர்ந்த விளையாட்டுக்காரர்கள் இதில் கலந்து கொள்கின்றனர்.
சுரன்

ஒலிம்பிக் போட்டிகளின் பிறப்பிடமாக கருதப்படும் கிரேக்க நாட்டில் உள்ள ஒலிம்பியா நகரத்தில் இன்று[10-05-12] ஒலிம்பிக் சுடர்ஏற்றப்பட்டது. 2600 ஆண்டுகள் பழமையான அப்பல்லோ கடவுளின் ஆலயத்தில் நடிகர்கள் பழங்கால கிரேக்கர்களைப் போல உடையணிந்திருந்தனர்.
குவி கண்ணாடி மூலம் சுடரை உருவாக்கினர். 
பழங்காலத்தில்நடந்த ஒலிம்பிக் போட்டிகள் மீண்டும்1896-ம் ஆண்டு முதல் தொடர்ந்து நடத்த துவங்கினர்.இச்சுடர்பல நாடுகள் வழியாக 78 நாட்களில் லண்டன் சென்றடையும்.அதன் பின்னர் போட்டிகள் துவங்கும். 
சுரன்

சுரன்

சுரன்





__________________________________________________________________________________
சுரன்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?